Home / அரசியல் / இரண்டாயிரம் பேரை கொலை செய்தால் பிரதமர் வேட்பாளர்….

இரண்டாயிரம் பேரை கொலை செய்தால் பிரதமர் வேட்பாளர்….

மோடி- வெளிச்சங்களின் நிழலில் நூல் வெளியீட்டு விழா – 30/03/2014 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 பேர் கலந்து கொண்டனர்

தோழர்.செந்தில் அவர்கள் ‘மோடி – வெளிச்சங்களின் நிழலில்’ நூலின் தேவை குறித்தும், சேவ் தமிழ்சு இயக்கம் ஏன் இந்நூலை வெளியிடுகின்றது என்பது குறித்து பேசினார். மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்த ஊடகத்தை புது தில்லி சட்டமன்றத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற ஆம் ஆத்மி உடைத்து, அவர்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். பா.ஜ.க தமிழகத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கியது தான் இங்கே இருக்கும் பிரச்சனை. ’வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது என்றார். 

சேவ் தமிழ்சு இயக்கத்தின் தோழர்.செய்யது பேசும் பொழுது இந்திய ஆளும்வர்க்கத்தைப் பொருத்தவரை அவர்கள் விரும்பும் ’வளர்ச்சியை’ வேகமாக உருவாக்க காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க. அதிலும் குறிப்பாக, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொள்கை மாற்றங்களை அமல்படுத்தும் பாசிஸ்ட் ஒருவர் தான் இன்று இந்திய ஆளும்வர்க்கத்திற்கு தேவை. அந்த தேவையை நிறைவு செய்யபவர்தான் மோடி. கடந்த பத்தாண்டுகளில் காங்கிரசு தலைமையிலான அரசு செய்ததைவிட, அதிக சேதாரத்தையும், பயங்கரங்களையும் மிகக் குறுகிய காலத்தில் மோடி தலைமையிலான அரசு நிகழ்த்தும் என்பது அபாயகரமான உண்மை.. வளர்ச்சி என்ற பெயரில் மோடி முன்னிறுத்தப்படுவதில் இருக்கும் பிரச்சனைகள் பல. இந்துத்துவமும், முதலாளித்துவத்துவமும் மனித சமூகத்தை தனிமனிதர்களாக மாற்றும் பணியை செவ்வனே செய்கின்றன, சில மாதங்களுக்கு முன்னர் டைம் மாத இதழில் மன்மோகன் அரசை ‘Under Achiever” என சொன்னார்கள், இதன் பொருள் அரசு மக்களுக்காக உழைக்கவில்லை என்றல்ல, முதலாளித்துவத்தை நடைமுறைபடுத்துவதில் அவர் மிகவும் மெதுவாக செயல்படுகின்றார். இதை மாற்றி முதலாளித்துவத்தை வேகமாக செயல்படுத்த மோடி முன்னிறுத்தப்படுகின்றார். மோடியின் குஜராத் மிளிர்கின்றது. என்றாலும், அங்கு மோடி அரசை எதிர்த்து பல போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, அங்கே வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவினாலும், அந்த வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது என்பது பொய், அது ஒரு சிலருக்கானது என்பது நடைபெற்று வரும் போராட்டங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டும். வல்லபாய் படேல், காந்தி இருவருமே குஜராத்தில் பிறந்தாலும், வல்லபாய் பட்டென் முன்னிறுத்தப்படுவதற்கான காரணம், மக்களின் சனநாயக விருப்பங்களை மீறி இராணுவ பலத்தை கொண்டு செயல்திட்டத்தை முன்னெடுத்தவர் படேல். இந்த ஒத்திசைவே மோடி படேலை முன்னிறுத்துவதற்கான காரணமாகும் என்றார்.

இன்று நம்முன் உள்ள பணி – மோடி வெற்றி பெற்றாலும் சரி, வெற்றி பெறாவிட்டாலும் சரி நாம் தமிழகத்தில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும், வாக்குவங்கி அடிப்படையில் தமிழகத்தில் குறைவாக தென்படும் பா.ஜ.க, பரப்புரை அடிப்படையில் வலுவாக இருக்கின்றது, தமிழகத்தில் உள்ளவர்கள் சுற்றுசூழலாளர்களானாலும் சரி, மனித உரிமை செயற்பாட்டாளர்களானாலும் சரி, சமூக செயற்பாட்டாளார்களானாலும் சரி அவர்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து பணிபுரிந்தேயாக வேண்டும் என்றார் செய்யது. 

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தோழர். தைமிய்யா பேசும் பொழுது – ஈழத்தமிழர் பிரச்சனை, அணு உலை எதிர்ப்பு போராட்டம், பெண்கள் மீதான பாலியல் வல்லுணர்வுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களை பாராட்டுகிறேன், இந்நூலை எழுதிய தோழர்.கதிரவனையும் பாராட்டுகின்றேன். இந்தியாவில் முதன் முதலில் பயங்கரவாத செயலைச் செய்தவர்கள் மோடியின் முன்னோர்கள், காந்தியை கொன்று விட்டு அவரது சிலைக்கு சிறிதளவும் வெட்கமின்றி மாலையணிப்பவர்கள் தான் இவர்கள், இந்த நாட்டில் ஒன்றுபட்டிருக்கும் இந்து-கிறித்துவ-இசுலாம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதை தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள் தான் இந்த பா.ஜ.க-வினர். இது பார்ப்பனர்களை , அவர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பு. வெறும் 2 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் இந்து என்ற சொல்லாடலின் மூலம் பெரும்பான்மையாகி, தங்களது நலன்களை பாதுகாக்க செயல்பட்டுவருகின்றனர். பா.ஜ.க இசுலாமியர்கள், கிறுத்துவர்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல, அவர்கள் பார்ப்பனரல்லாத எல்லா மக்களுக்கும் எதிரானவர்களே.

கார்ப்பரேட்டுகள் மோடி, மோடி என்று ஜெபிக்கின்றனர், இதற்காக காங்கிரசு முதலாளிகளுக்கு எதிரானவர்கள் என்பதல்ல, அவர்களுக்கு இன்னும் அதிகமான தேவை உள்ளது, மோடியின் ஆட்சி அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், டாட்டாக்களுக்குமானது …. இந்த நூலானது குஜராத்தில் உள்ள வளர்ச்சியின் உண்மை நிலையை கூறுகின்றது. இந்நூல் நம்மெல்லோரிடமும் இருக்கவேண்டும், இதன் மூலம் மோடியை, ஆர்.எஸ்.எஸை, பா.ஜ.கவை தோலுரித்து காட்ட முடியும், அதே போல இந்நூலில் மோடியை பற்றி கூறும் ஊடகவியலாளர்களின் வேலை பறிக்கப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது, உதாரணத்திற்கு சன் டிவியின் வீரபாண்டியன், இந்துவின் சித்தார்த் வரதராஜனை குறிப்பிடலாம். இந்திய அரசின் அமைப்பு முழுவதும் ஆர்.எஸ்.எஸாக காவிமயமாகி வருகின்றது,

டெல்லி ஜிம்மா மசூதி குண்டு வெடிப்பு நடந்த உடன் உளவுத்துறை இதற்கு காரணம் டெக்கான் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன் என சொன்னார்கள், பின்னர் விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது அபினவ் பாரத் என்ற ஆர்.எஸ்.எஸின் கிளை அமைப்பும், ஆர்.எஸ்.எஸின் வனவாசிகள் பிரிவு தலைவருமான அசிமனாந்தாவும் தான். இவர் கேரவன் பத்திரிகைக்கு அளித்த அண்மைய பேட்டியில் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இது போன்ற குண்டுவெடிப்புகளை நடத்தச்சொன்னார் என்றார். அதே போல பாகிசுதான் செல்லக்கூடிய சம்ஜவதா இரயில் குண்டுவெடிப்பு ஏற்பட்டவுடன் இதை பாகிசுதானின் I.S.I தான் செய்தது என்றார்கள், பின்னர் இதை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பதும், புரோகித் இந்திய இராணுவத்தில் இருந்து தான் இதற்கான வெடிமருத்தை எடுத்துச்சென்றுள்ளார் எனக் கண்டுபிடித்தார் திவிரவாத தடுப்புதுறை தலைவர்.ஹேமந்த் கர்கரே. காந்தியை கொல்ல வேண்டும், அந்த பழியை முசுலிம் மீது போட வேண்டும் என திட்டம் தீட்டியவர்கள் தான் இவர்கள், “Who Killed Karkare” என்ற புத்தகத்தை முன்னால் ஐ.ஜி. முசுரிஃப் எழுதியுள்ளார், இந்த 26/11ல் நடந்த நிகழ்வு முழுவதும் I.B-யினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது, இதில் இந்துத்துவத்தின் தீவிரவாதத்தை கண்டுபிடித்த கர்கரே கொல்லப்படுவது தான் அவர்களது மைய இலக்கு என்று எழுதியுள்ளார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தது மட்டுமின்றி, அந்த இடத்தில் முசுலிம் தொப்பியை போட்டார்கள், பின்னர் விசாரித்து பார்த்தால் அதுவும் ஆர். எஸ்.எஸ்ன் வேலை தான் இது, இதன் மூலம் இந்து முசிலிம் கலவரம் உருவாக வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என்றார்கள். இவ்வளவு நடந்த பின்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்னும் இங்கு தடை செய்யப்படவில்லை.

அதுமட்டுமின்றி I.B. ” Stock Terrorist” என்ற சில திட்டங்களையும் நடத்தி வருகின்றார்கள். அதாவது நேபாளத்தையொட்டிய இந்திய பகுதியில் அனுமதி இல்லாமல் வணிகம் செய்து வரும் நபர்களை, குறிப்பாக முசுலிம்களை கைது செய்து வைத்திருந்து, ஒரு குண்டுவெடிப்பு, அல்லது தாக்குதல் போன்றவை நடந்த பின்னர், ஏற்கனவே பிடித்து வைத்துளவர்கள் அந்த தாக்குதலில் பங்குகொண்டது போலான புகைப்படம் அல்லது காணொளியை வெளியிடுவது, இப்படிதான் அஜ்மல் கசாப்பின் காணொலியும் ஊடகங்களுக்கு I.Bயால் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழருக்காக பேசிய வைகோ, சாதி வெறிபிடித்து அலையும் பா.ம.க போன்றவை இன்று தாமரை மலர துடித்து வருகின்றார்கள், வாஜ்பாய் ஆட்சியில் என்ன நடந்தது, அவர் இலங்கைக்கு ஆதரவாக போர்க்கப்பலை அனுப்பினார். ஈழத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது, என்கிறார் வெங்கய்யா நாயுடு, மக்கள் எங்கு துன்புறுத்தப்பட்டாலும் நாம் அதை எதிர்த்து போராட வேண்டும், ஒரு பக்கம் ஆதரித்துவிட்டு, ஒரு பக்கம் எதிர்ப்பது என்பது கபட நாடகம், இதை தான் வைகோ செய்கின்றார். மோடிக்கும், இராஜபக்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, அது இந்த நூலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜா போன்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், என்பதும், கருப்பு துண்டை வைத்து கொண்டு மோடியை ஆதரிக்கின்றார் என்றால் எங்கோ கோளாறு இருக்கின்றது,. நாம் ஒருங்கிணைத்து இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும். 

திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த தோழர்.பால தனசேகரன் பேசும் பொழுது, “மோடி ஏன் பிரதமராகக்கூடாது” என தொடர் கூட்டங்களை நடத்திவருகின்றோம், அதற்கு உடனே காவல்துறை அனுமதி கொடுத்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது, எப்போதும் எங்களுக்கு இரு பிரச்சனைகள் இருக்கும் ஒன்று காவல்துறை, இரண்டாவது மது அருந்திவிட்டு யாராவது வந்து வம்பிழுப்பார்கள், ஆனால் இந்த கூட்டத்திற்கு வந்த காவல்துறை எங்களிடம் வம்பிழுக்க வந்த ஒரு குடிகாரனின் காவல்துறையே பேசியதை வைத்து, சரி ஏதோ ஒரு பின்னணி இருக்கின்றது என புரிந்து கொண்டோம். இந்நூல் சிறிய நூலாக இருந்தாலும், மோடி குறித்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இருக்கின்றது. 1925ல் தான் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுகின்றது அதே போல ஆர்.எஸ்.எஸூம் அப்போது தான் துவங்குகின்றது. இன்று அவர்கள் எங்குள்ளார்கள், நாம் எங்குள்ளோம் என்பதை வைத்து நாம் நம்மை ஒரு சுயவிமர்சனம் செய்து பார்க்கவேண்டும். பா.ஜ.கவை வைத்து ஒரு கூட்டணி அமைப்பது முட்டாள்தனமானது, அதில் பா.ம.க, வைகோ போன்றோர் உள்ளனர். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்று சொல்லும் பா.ஜ.க தீண்டாமை நடைபெறும் இடங்களின் இதை பேசுவார்களா? அதே போல அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற இடத்தில் அவர்கள் இந்துக்களே திரண்டு வா என இரட்டை நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். இசுலாமியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கக்கூடாது என சொல்கின்றார்கள், நேரடியாக பார்ப்பனர்களுக்கு வழங்கு என்று சொல்லமுடியாதவர்கள் இவர்கள். நான் குஜராத்திற்கு பலமுறை சென்று வந்துள்ளேன். வளர்ச்சியெல்லாம் அங்கு இல்லை, இந்துத்துவம் தான் உள்ளது, பொருளாதார கொள்கையில் காங்கிரசிற்கும், பா.ஜ.கவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. புதிய ஓய்வூதிய திட்டம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்றவை உதாரணங்களாக உள்ளன, இவர்களிடம் எந்த மாற்றுத்திட்டமும் இல்லை, சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை உருவாக்கவதையே தங்களது Agenda-வாக இருக்கின்றது, இவர்களை எதிர்ப்பது நமது அடிப்படை கடமையாகும். மதச்சார்பற்ற கட்சிகள், மதச்சார்பு கட்சிகளை கேள்வி கேட்காமல் திமுக வெறுமனே ஜெயலலிதாவை எதிர்ப்பது தான் நடக்கின்றது. இங்கு நாம் தான் இப்பணியை செய்ய வேண்டும், இந்நூலை பரப்பும் பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றார் தோழர். 

நூல் வெளியீடு தோழர்.இராமகிருஷ்ணன் நூலை வெளியிட தோழர்.தைம்மியா பெற்றுக்கொள்ள, மற்றொரு பிரதியை தோழர்.மீ.த.பாண்டியன் வெளியிட தோழர்.அமீர் அம்சா பெற்றுக்கொண்டார். 

தோழர்.அமீர் அம்சா, மாநில செயலளார், S.D.P.I – இக்கட்சி மதச்சார்பற்ற, ஒடுக்கப்படுபவனின் கட்சியாகும், காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக காந்திய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துள்ள தமிழருவி மணியின் தரகு வேலை செய்து வருகின்றார் !!! நம்முடைய இரத்தச் சொந்தங்களான ஈழத்தமிழர்களை கொன்ற இராஜபக்சேவைப் போன்றவன் தான் மோடியும். தேமுதிகவின் சுதீஷ் சில நாட்களுக்கு முன் சேலத்தில் பிரச்சாரம் செய்த பொழுது எங்களை அழிக்கும் பா.ஜ.க-வின் கூட்டணியில் உள்ள உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க முடியாது என சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார்கள் என்றார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்- மா.ச.சிந்தனைச் செல்வன் பேசும் பொழுது, இந்நூலில் நிறைவான தர்க்க, நியாயங்களும், புள்ளி விவரங்களும் உள்ளன. இந்நூலில் எனைக் கவர்ந்த பகுதி இராஜபக்சேவோடு மோடியை ஒப்பிட்டு எழுதியிருந்த பகுதி, மோடியை பற்றி புரிந்து கொள்ள இராஜபக்சே உடனான அந்த உரையாடல் உதவியாக இருக்கின்றது. வைகோ போன்றவர்கள் இந்துத்துவத்தை சுமந்து செல்லும் பல்லக்கு தூக்கிகளாகி விட்டனர். மனிதன் சமூகமாக வாழ்வதை பிரித்து உதிரியாக வாழ்ச்செய்யும் வேலையை தனியார்மயமும், இந்துத்துவமும் செய்துவருகின்றன. நெய்வேலியில் அண்மையில் நடந்த ஒரு கொலை மிகவும் அற்பமான ஒரு காரணத்திற்காக நடந்துள்ளது, இங்கு என்னை அதிகம் பாதித்தது கொலை நடந்த பிறகு எந்த ஒரு பெரிய போராட்டத்தையும், யாரும் முன்னெடுக்காததே. மத்திய பாதுகாப்பு படை முதலில் நெய்வேலிக்கு வந்த பொழுது மத்திய தர வர்க்கத்தினர் வரவேற்றனர். இதனால் நெய்வேலியின் வளங்களும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்கள், அன்றே நாங்கள் இதை எதிர்த்தோம். இன்று ஒரு தொலைபேசியை பயன்படுத்தும் உரிமைக்காக இங்கே ஒருவர் கொல்லப்படுகின்றார். தேர்தல் அரசியல் வாக்கு வங்கி அடிப்படையில் வேண்டுமானால் பா.ஜ.க -வின் வீச்சு குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் பரப்புரையிலும், இந்துத்துவத்தை கொண்டு சேர்ப்பதிலும் இந்த அமைப்புகளின் வேகம் பலமடங்காக பெருகியுள்ளது. இந்த பலம்தான் எச்.ராஜாவும், சி.பி.ராதாகிருஷ்ணனும் பெரியாரை இகழ்ந்து பேசியதன் பின்னணியில் இருப்பது. தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுக்க போராடி நமக்குக் கற்று கொடுத்த சுயமரியாதை நிலைக்க வேண்டுமெனில், இது பெரியார் மண் என்ற இறுமாப்பில் இருந்து வெளிவர வேண்டிய தருணம் வந்துவிட்டது. நம்மை சூழ்ந்துள்ள இந்துத்துவ அபாயத்தையும், மோடி முகமூடி அணிந்து வரும் பாசிசத்தையும் எதிர்த்து வருகின்ற தேர்தல் கடந்தும் போராட வேண்டிய தேவை நம்முன் உள்ளது. என்ற பின்னட்டையில் வரும் கருத்தை அவர் மீண்டும்வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் விநாயகர் சதுர்த்தி நடந்துள்ளது, இதற்காக நிதி திரட்டும் பணியை 9ஆம், 10 ஆம் வகுப்பு பையன்கள் செய்கின்றனர். இதை நாம் தவிர்த்துவிட்டு பார்க்கமுடியாது. எப்படி மோடி தூய்மையானவராக காட்டப்படுகின்றாரோ, அதே போல இங்கே இராமதாசு உள்ளார். எப்படி மோடிக்கும், இராஜபக்சேவும் ஒத்திசைவானவர்களாக உள்ளார்களோ, அதே போல மோடியும், இராமதாசும் இணைந்துள்ளார்கள். சத்ரியன் என்ற சொல்லாடல் இங்கே வலுவாகி வருகின்றது, இதை நாம் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸீற்கும் காந்திக்கும் தத்துவார்த்த பகையில்லை, அது வெறும் பங்காளி சண்டை, இவ்வளவு தான் பிரச்சனை, இந்துத்துவத்தை எதிர்ப்பவரல்ல காந்தி, காந்தியை பின்பற்றுபவர்கள் கடைசியாக சென்று சேர வேண்டிய இடம் தான் ஆர்.எஸ்.எஸ். தமிழருவி ஆர்.எஸ்.எஸை எதிர்த்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். நமக்கான தத்துவார்த்த பலத்தை தோழர்.பெரியார் வழங்கியுள்ளார். பெரியார் மீதான விமர்சனத்தை நாங்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கின்றோம். பெரியாரின் கொள்கைகளை நாம் வளர்த்தெடுக்கவில்லை, பொது தொகுதியில் நாங்கள் நின்று பெரிய வாக்குவித்தியாசத்தில் தோற்றோம், அது யூசுப்பின் தோல்வியா, அல்லது திராவிட கட்சிகளின் தோல்வியா? நாம், நமது தத்துவத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். நாம் இந்துத்துவத்தை முழுமையாக விரட்டியடிக்கவில்லை. பார்ப்பனர்களை தான் விரட்டியடித்திருகின்றோம். ஒவ்வொரு ஊரிலும், பத்து கோவில்கள் உள்ளன. 1881ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது முதன்முதலாக, இதில் எல்லோரும் கவுண்டர், வன்னியர் எனக்கூறும் பொழுது, எங்களை தமிழர் என்று பதிவு செய் என்ற குரல் அயோத்திய தாசரிடம் இருந்து எழுந்தது. இந்துத்துவ கோட்டை வெறும் பொய்களால் மட்டும் இல்லை, அது கலாச்சார பண்பாடாக உள்ளது. நாம் செய்திருக்கின்ற பிழைகளை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும். இங்கே இந்துத்துவம் சாதியமாக உள்ளது, இந்தியா முழுமைக்குமான ஒற்றை பண்பாடாக சாதியம் தான் உள்ளது. நாம் முன்வைப்பது தமிழ் தேசியமானதாக இருந்தாலும் சரி, திராவிட தேசியமானதாக இருந்தாலும் சரி, இந்திய எதிர்ப்பாக இருந்தாலும் சரி இவையெல்லாவற்றிலும் சாதிய எதிர்ப்பு அடிப்படையாக இருக்க வேண்டும். இங்கு விகிதாச்சார தேர்தல் முறை வந்தால் தவிர்க்க முடியாத சமரசத்தில் நாம் ஈடுபட வேண்டியதில்லை. இதை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என்றார். 

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாலர். தோழர்.கோவை இராமகிருஷ்ணன், பேசும் பொழுது இங்கே மோடி அலையெல்லாம் இல்லை, மோடி தான் அலைகின்றார் ஒவ்வொரு கட்சித் தலைவர் வீடாக…. ஒரு மாதமாக இந்த கூட்டணிக்காக அலைந்தார்கள். தான் காலை ஊன்றுவதற்காக எவ்வளவு அவமானத்தையும் இவர்கள் தாங்குவார்கள், இதே பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் பா.ஜ.கவிடம் சென்று கூட்டணிக்காக வரிசையில் நிற்பார்கள். பெரியாரிய இயக்கங்களாகிய நாம் நம்மை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் எதையுமே திட்டமிட்டு செய்கின்றார்கள். மோடியை இங்கே திட்டமிட்டு பரப்புகின்றான். எங்களிடமும்ம் காந்தி மாதிரி ஒரு ஆள் இருக்கார்னு வாஜ்பாயை முன்னிறுத்தினார்கள். பின்னர் ஆயிரம் பேரை கொன்ன அத்வானி வந்த உடன் வாஜ்பாயை கைவிட்டார்கள், அடுத்து இரண்டாயிரம் பேரை கொன்னவன் என்பது தான் மோடியின் தேர்வுக்கான அடிப்படை. எத்தனை கொலை என்பது தான் இங்கு அவர்களுக்குஅடையாளம்.

மக்களிடம் செல்லும் பொழுது இரண்டாயிரம் பேரை கொன்றவன்னு சொல்லமுடியாது, அதனால் தான் முதலில் மோடியை, குஜராத்தை பரப்பினான், மிளர்கிறது என்றான், இங்கே மின்தடை ஏற்பட்ட போது அவன் குஜராத்தில் மின்மிகை மாநிலம் என்றான், இது எளிதாக மக்களை சென்றடைந்தது. ஆனால் உண்மை நிலை வேறானது, குஜராத்தில் 11 இலட்சம் மக்களை இன்னும் மின்சாரம் சென்றடைவதில்லை, அதே போல மின்கட்டணம் பலமடங்கு அதிகம். அவர்கள் திட்டமிட்டு பரப்புகின்றார்கள். பத்ரிநாத்தில் மக்கள் இறந்து கொண்டிருந்த பொழுது , போனவர்கள் என்னானர்கள் என்று எல்லோரும் பதறிக்கொண்டிருந்த பொழுது மோடி சென்று 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றினார்கள் என செய்தி வந்தது, இதை கேட்ட மக்கள் மோடியின் சாகசத்தை நம்பத்தொடங்கினார்கள். அதே போல மோடி இந்தியாவை நேசிக்கின்றார் எனக்காட்ட படேலை கொண்டு வந்தன், இரும்பு மனிதருக்கு, இரும்பில் சிலை, இதற்காக எல்லா கிராமங்களிலும் இரும்பு வாங்குகின்றேன் என்ற போர்வையில் பா.ஜ.க-விற்கு பிரச்சாரம் செய்கின்றான்.

மாயாவதி 400 கோடியில் அம்பேத்கருக்கும், யானை சின்னத்திற்கும் சிலை வைத்த பொழுது கேள்வியெழுப்பிய ஊடகங்கள் 2300 கோடியில் அமைய இருக்கும் படேல் சிலையை எந்த கேள்வியும் எழுப்பாமல் அப்படியே சொல்லின. இந்த விளம்பரத்திற்கு மட்டும் 500 கோடி செலவாகியுள்ளது. அவர்களது கணக்கு எப்பவும் தெளிவாக உள்ளது. இப்படி தான் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுகின்றோம் என மக்களிடம் இருந்து செங்கல்லை வாங்கினான், அதை வைத்து எதையும் கட்டவில்லை, அந்த செங்கல்லின்மூலம் அவன் மக்கள் தலையில் இந்துத்துவத்தை ஏற்றுகின்றான் , அதே போல மோடித்துவத்தை ஏற்றுகின்றான் இரும்பின் மூலம். ஒப்பீட்டின் படி பார்த்தாலும் தமிழ்நாடு குஜராத்தை விட பல மடங்கு முன்னேறியே உள்ளது. காந்தி எதற்காக தென்னாப்பிரிக்கா சென்றார், மார்வாடிக்காக வழக்கு நடத்த சென்றார், சென்ற இடத்தில் பொது பயணச்சீட்டு எடுத்து விட்டு ரிசர்வ்டு வகுப்பில் பயணம் செய்வதால் வெளியேற்றப்படுகின்றார், ஆனால் அதை திறமையாக நான் கறுப்பனாக இருந்ததால் தான் வெளியேற்றப்பட்டேன் என கதைவிட்டு அதன் மூலம் இங்கே ஒரு கதாநாயகனாக மாறிவிட்டார், பி.ஜே.பி முசுலிம்களுக்கு மட்டும் எதிரியல்ல, பார்ப்பனரல்லாத எல்லோருக்கும் எதிரி தான். குஜராத் மிளர்கிறது என்றால் ஏன் பீகார், உத்திரபரதேசம், ஒரிசா போன்ற மாவட்டங்களிலிருந்து குஜராத்திற்கு செல்லாமல் அங்குள்ள மக்கள் ஏன் தமிழ்நாட்டிற்கு வருகின்றான், மொழியே தெரியாமல் அவன் இங்கு வருவதற்கு பதிலாக ஹிந்தி தெரிந்த குஜராத்திற்கு செல்வதில்லை ? என்றார் தோழர்.

அடுத்து மாணவர் இயக்கத்தோழர். முகமது இரஃபீக் மோடி எதிர்ப்பு கவிதை ஒன்றை வாசித்தார்.

தோழர்.மி.த.பாண்டியன் – கம்யூனிசுட்டு கட்சி – மக்கள் விடுதலை பேசும் பொழுது ஜெய் காளி, ஓம் காளியின் மாறுபட்ட வடிவம் தான் ஹர…ஹர…. நமோ… நமோ எல்லாம். பாசிச எதிர்ப்பு என்பதும், இந்துத்துவ எதிர்ப்பும் தேர்தல் கால Agenda-வாக இருக்கின்றது, இதை இடது சாரி கட்சிகளும் செய்கின்றன. தொடந்த பாசிச , இந்துத்துவ எதிர்ப்பு எல்லா கட்சிகளின் நிகழ்ச்சி நிரலிலும் , எல்லா காலங்களிலும் இருக்க வேண்டும். தம்முடைய இயக்கங்களில் பா.ஜ.க எதிர்ப்பை வைத்திருந்த திராவிடம், கட்சியாக மாறிய பொழுது அது எங்கே போனது என்பதை நாம் யோசிக்க வேண்டும், 2002ல் குஜராத் இனப்படுகொலை நடந்த பொழுது வாஜ்பாயுடன் இருந்த தமிழக கட்சிகளையும் நாம் நினைவு கூறவேண்டும். பெரியாரின் கொள்கைகளை வரித்து கொண்டவர்கள் இன்று அவரது கொள்கைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டனர்.

அரசியல் களத்தில் கருத்தியல் ஊழல் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1925ல் அம்பேத்கரின் பின்னால் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரள்கின்றார்கள், அது சித்பவன் பார்ப்பனர்களை அதிரவைக்கின்றன. .அம்பேத்கர் நாங்கள் இந்துவல்ல என்றார். அவர்கள் அம்பேத்கரை எதிர்த்தால் அழிந்துவிடுவோம் என புரிந்து கொண்டு, ஒரு புதிய எதிரியை உருவாக்குகின்றான், இசுலாமியர்கள் தான் எதிரி என்கின்றான், அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களையும் தன் பின்னே திரட்டுகின்றான். இவனின் தத்துவார்த்த பின்ணனி கோயபல்சு, ஹிட்லரே. ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னத்தை தான் இவன் எடுத்துக்கொண்டான். இந்தியாவின் பயங்கரவாத இயக்கங்களில் முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான். கடந்த பத்தாண்டுகளில் நாம் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியான பணியை செய்யாத அந்த நேரத்தில், அவர்கள் சிந்திக்க தொடங்குகின்றார்கள். ஆர்.எஸ்.எஸ் பெண்களுக்கும் எதிரான அமைப்பு, இந்துத்துவா அரசியல் என்பது எவன் வேண்டுமென்றாலும் வாழுங்கள், ஆனால் இந்து தான் ஆள வேண்டும் என்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது சிறுபான்மையினரை விழுங்கக்கூடிய, ஒடுக்கக்கூடிய ஒரு வன்முறை ஸ்தாபனம் ஆகும். வெறும் காவியரசியலை மட்டும் பார்க்காதீர்கள், அவனது வர்க்க பின்னனியையும் பாருங்கள் என்று 1996ல் பேசினால், இன்று அவன் தெளிவாக வளர்ச்சி என்று பிரச்சார வடிவத்தை முன்னெடுக்கின்றான்

2000த்திற்கு பிறகு உருவான இந்த புதிய நடுத்தர வர்க்கம், தான் மட்டுமே வாழ்வது, தான் மட்டுமே சொகுசாக இருப்பது என்பதை மட்டுமே சிந்திக்கின்றது, சிந்திக்க வைக்கப்படுகின்றது. இந்நூலில் உள்ள முதல் கட்டுரை குஜராத்தின் வளர்ச்சியை பற்றி சொல்கின்றது, இது இன்றைய காலத்தில் நாம் எதை பேச வேண்டுமோ அதை பேசுகின்றது , அதே போல தமிழகத்தில் இந்துத்துவ அபாயம் பற்றிய கட்டுரையும் காலத்துடன் பொருந்தி போகின்றது. சில கட்டுரைகளில் எனக்கு உடன்பாடில்லை, ஏனென்றால் அவை காலத்துடன் பொருந்திப் போகவில்லை. எப்படி காங்கிரசை இங்கே தனிமைப்படுத்தினோமோ, அதே போல ஆர்.எஸ்.எஸை, பா,ஜ,க.வை நாம் இங்கே தனிமைப்படுத்த வேண்டும். வீதி தான் களம், தேர்தல் களமல்ல.. திமுகவின் பிரச்சாரமும் சரி, அதிமுகவின் பிரச்சாரமும் சரி மோடிக்கு எதிராக பா.ஜ.கவிற்கு எதிராக நடக்கவில்லை. இது தான் இங்கே தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அபாயம். 99ல் திமுக, மதிமுக, பா.ம.க கூட்டணி வைக்கின்றது, அடுத்த ஆட்சியில் அதிமுக கூட்டணி வைக்கின்றது. இது தான் இங்கே தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அபாயம். 99ல் திமுக, மதிமுக, பா.ம.க கூட்டணி வைக்கின்றது, அடுத்த ஆட்சியில் அதிமுக கூட்டணி வைக்கின்றது. இப்படி மாறி , மாறி இங்கே தமிழகத்தின் கிராமம் தோறும் தாமரையை மக்கள் மனதில் நிறுத்தியது திராவிடகட்சிகள். சிறைச்சாலைக்கு உள்ளே இருக்க வேண்டியவர்கள் பிரதம வேட்பாளர்களாக உள்ளனர் என்றார் தோழர்.

இறுதியாக பேசிய நூலாசிரியர் தோழர்.கதிரவன் , இந்த கட்டுரைத் தொடரை என்னை எழுத வைத்தது, என்னுடன் பணிபுரியும் சக பணியாள‌ர்களே, மதிய உணவு இடைவேளையில், தேனீர் இடைவேளையில் திரும்பத் திரும்ப மோடி புராணம் பாடி, இக்கட்டுரை தொகுப்பை என்னை அவர்கள் எழுதத்தூண்டினார்கள். இதற்கான தகவல்களை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. என்னை இந்நூலை எழுத வைத்தவர்களைத் தான் ஊடகங்கள் Cyber Hindus, Internet Hindus என்கின்றனர். 2004, 2009 தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைகின்றது. 2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலை இந்த நடுத்தர வர்க்கம் அறிந்தது தான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்ட காங்கிரசு அரசு உண்டாக்கிய சோர்வு, தொடர்ச்சியாக வெளிவந்த ஊழல்குற்றச்சாட்டுகள் இவர்களை மாற்றை நோக்கி நகர வைத்தது, முதலாளிகளுக்கும் மாற்று தேவையாக இருந்தது. இந்த நேரத்தில் தான் நம் நாட்டில் உள்ள அனைத்து நோய்களுக்குமான ஒரே மருந்தாக மோடி முன்வைக்கப்படுகின்றார். உண்மையில் மோடி யாருக்கானவர். 2002ல் மோடி முதல்வராக மீண்டும் பணியிலமர்ந்த பொழுது வெறும் 7.6 கோடி அமெரிக்க டாலர் சொத்து வைத்திருந்த ஒருவர் தற்சமயம் 880 கோடி அமெரிக்க டாலர் அளவு அதை அதிகரித்துள்ளார், அவர் தான் அதானி, மோடி அதானி, அம்பானி, மிட்டல், டாட்டாக்களுக்கானவர். 1992ல் டி.டி-யில் ஒளிபரப்பாகிய இராமயணம் மூலம் இந்துத்துவம் பரவியது, இன்று அது குழந்தைகளுக்கான சோட்டா பீம் என பல வடிவங்களில் உள்ளது. அதே போல ஆர்.எஸ்.எஸ் ஆதிவாசிகளை வனவாசிகள் என்றே குறிப்பிடுவர், “Making of an Muslim Terrorist” என்ற ஆவணப்படத்தில் இந்த உலகமே இந்துக்களாலானது, அவர்கள் தான் ஆதிகள் என்று வினய் கட்டியார் கூறுகின்றார், அதனால் அவர்கள் ஆதிவாசிகள் என கூறினால் அது முரண்பாடாகிவிடும் என்பதால் எப்பொழுதும் வனவாசி என்றே அழைத்து வருகின்றார்கள். மதமாற்றம் கூடாது எனக்கூறிக்கொண்டே கந்தமால் பகுதியில் இருந்த ஆதிவாசிகளை இந்துக்களாக மதம் மாற்றியுள்ளர்கள் இவர்களே என்றார் தோழர்.

நூல் வாங்க தொடர்பு கொள்ள – 09884468039 – சென்னை, 09886002570 – பெங்களூர்.

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்.

About விசை

11 comments

 1. நீணட பதிவு ஆனாலும் அருமையான் தகவல்

 2. இதுவரை பதில் கிடைக்காத எனது கேள்விகள்.<br /><br />1) 2000 பேரைக் பலிவாங்கிய நிகழ்வுக்குக் காரணமாக இருந்த கொடுமையைப் பற்றி ஏன் எவரும் வாயைத் திறப்பதில்லை. 60 பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதன் விளைவு என்று கூறுவதற்குத் தயங்குவது ஏன். திருப்பி அடித்தவர்களை மதவாதி என்று கூறுவீர்களா<br /><br />2) பார்ப்பனர்களைப் பற்பல காரணம் கூறி ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் கேலிசெய்து இகழ்வது நடைமுறையில் உள்ளது.

 3. இரண்டாயிரம் இஸ்லாமியர்களை கொன்றவர்களும் வரக்கூடாது அதே போல லட்சக்கணக்கான இலங்கை தமிழ் சகோதர-சகோதிரிகளை கொல்வதற்கு துணை போன காங்கிரசும் வரக்கூடாது.

 4. இந்த தமிழ்நாட்டு முஸ்லீம்கள் யாராவது, 40,000க்குமதிகமான ஈழத்தமிழர்களைக் கொன்ற மகிந்த ராஜபக்சவைப் பற்றி இப்படியொரு புத்தகம் எழுதவார்களா, அல்லது, யாரும் தமிழர்கள் எழுதினால், அதை ஆதரிப்பார்களா, இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழர்கள் மட்டும் தான் எதற்கும் எடுபடுவார்கள். மோடி, தமிழர்களுக்கு ஏதும் தீங்கிழைத்தாக எனக்குத் தெரியவில்லை. மாறாக, அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் தொடர்ந்து கருத்து

 5. <br />//இரண்டாயிரம் இஸ்லாமியர்களை கொன்றவர்களும் வரக்கூடாது அதே போல லட்சக்கணக்கான இலங்கை தமிழ் சகோதர-சகோதிரிகளை கொல்வதற்கு துணை போன காங்கிரசும் வரக்கூடாது./// கண்டிப்பாக‌

 6. <br />//இந்த தமிழ்நாட்டு முஸ்லீம்கள் யாராவது, 40,000க்குமதிகமான ஈழத்தமிழர்களைக் கொன்ற மகிந்த ராஜபக்சவைப் பற்றி இப்படியொரு புத்தகம் எழுதவார்களா, அல்லது, யாரும் தமிழர்கள் எழுதினால், அதை ஆதரிப்பார்களா, இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழர்கள் மட்டும் தான் எதற்கும் எடுபடுவார்கள். மோடி, தமிழர்களுக்கு ஏதும் தீங்கிழைத்தாக எனக்குத் தெரியவில்லை. மாறாக, அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் தொடர்ந்து கருத்து

 7. <br /><br />//இதுவரை பதில் கிடைக்காத எனது கேள்விகள்.<br /><br />1) 2000 பேரைக் பலிவாங்கிய நிகழ்வுக்குக் காரணமாக இருந்த கொடுமையைப் பற்றி ஏன் எவரும் வாயைத் திறப்பதில்லை. 60 பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதன் விளைவு என்று கூறுவதற்குத் தயங்குவது ஏன். திருப்பி அடித்தவர்களை மதவாதி என்று கூறுவீர்களா///<br /><br />60 பேரை தீயிட்டு கொளுத்தியது இசுலாமியர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது, புளுக

 8. // இந்த தமிழ்நாட்டு முஸ்லீம்கள் யாராவது, 40,000க்குமதிகமான ஈழத்தமிழர்களைக் கொன்ற மகிந்த ராஜபக்சவைப் பற்றி இப்படியொரு புத்தகம் எழுதவார்களா, அல்லது, யாரும் தமிழர்கள் எழுதினால், அதை ஆதரிப்பார்களா, இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழர்கள் மட்டும் தான் எதற்கும் எடுபடுவார்கள். மோடி, தமிழர்களுக்கு ஏதும் தீங்கிழைத்தாக எனக்குத் தெரியவில்லை. // தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழர்கள் தானே ?

 9. //இந்த தமிழ்நாட்டு முஸ்லீம்கள் யாராவது, 40,000க்குமதிகமான ஈழத்தமிழர்களைக் கொன்ற மகிந்த ராஜபக்சவைப் பற்றி இப்படியொரு புத்தகம் எழுதவார்களா, அல்லது, யாரும் தமிழர்கள் எழுதினால், அதை ஆதரிப்பார்களா, இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழர்கள் மட்டும் தான் எதற்கும் எடுபடுவார்கள். மோடி, தமிழர்களுக்கு ஏதும் தீங்கிழைத்தாக எனக்குத் தெரியவில்லை. மாறாக, அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் தொடர்ந்து கருத்து

  • நீங்கள் கூறுவது உண்மைதான் சகோதரரே. இவர்கள் இப்பொழுதே வேரறுக்கப் பட வேண்டும் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*