Home / கலை / மாக்களின் சாதி

மாக்களின் சாதி

பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே
கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே
பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக
பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக
எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம்
சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம்
நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி
நத்தம் காலனியிலதனால் ஓலமும் பழிபாவமும் மீதி
 
    குட்டிமணி செங்குட்டுவன்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*