Home / அரசியல் / கற்குவியலாகும் தேசம்

கற்குவியலாகும் தேசம்

 

எனக்கென்று ஒரு வீடு இருந்தது
அவர்கள் அதை வெறும் கற்களாக நொறுக்கி விட்டனர்

அவர்கள் எங்களை அழைத்துச் சொல்கின்றனர்
அடுத்த சில நிமிடங்களில் உன் வீடு மீது தான் தாக்குதல் என்று

நாங்கள் இயலாமையில் உயிர்பிழைக்க வீட்டை விட்டு ஓடுகின்றோம்

வந்து விழுகின்ற ஒரு ஏவுகணை

எங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் புதைக்கின்றது

IMG_112314432574891
இலக்கு வெற்றி – அவர்கள் சிரிக்கின்றனர்
நாங்கள் அனாதைகளாக தெருவில் நிற்கின்றோம்

அடுத்த நொடி வந்துவிட்டது
மற்றொரு ஏவுகணையுடன்

இடம்பெயர்தலே வாழ்க்கையாகிவிட்டது
இடம் இல்லாமல் செய்வதே அவர்கள் இலக்காகி விட்டது

எங்களுக்கு அவர்கள் சொல்லும் தீர்வு
நாங்கள் எல்லோரும் கடலில் குதித்திட வேண்டும்

எனக்கென்று ஒரு வீடு இருந்தது
அவர்கள் அதை வெறும் கற்களாக நொறுக்கிவிட்டனர்

எனக்கென்று ஒரு நாடு இருக்கின்றது

வெறும் கற்குவியலாய்

 

உயிர் பாதுகாப்புக்குத் தேடிக்கொண்டிருக்கின்றோம்…

உரிமை…பாதுகாப்பு…விடுதலை
உரிமை…பாதுகாப்பு…விடுதலை

#பாலசுதீனம் #ஈழம் #இனக்கொலை
—- இளங்கோவன்

About இளங்கோவன்

One comment

  1. நாடோடிகளாய் எம் வாழ்க்கை. நாடும் அதில் நம் வீடும் இருந்தும் கற்கால மணிதர்களாக நகர்கிறது எங்கள் வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*