Home / கலை / Frogetarian – A.D. 3000

Frogetarian – A.D. 3000

FrogMen

 

கி.பி. 3000லிருந்து கால யந்திரத்தில் ஏறி 2015க்கு வந்திருந்தான் அந்த மனிதன். அவன் இடுப்புக்குக்கீழே தவளையின் உடலைக்கொண்டிருந்தான். அவனைப்போலவே தவளை உடல் கொண்ட அவன் காலத்தின் சகமனிதர்களின் பிரதி நிதியாகத்தான் இப்போது இங்கே வந்திருக்கிறான்.

 

அந்த பெரிய வீட்டை பின் பக்கமாக சென்று சாலையிலிருந்து ஒரு துள்ளலில் மாடிக்கு குதித்து விட்டான்.

அறைக்குள் நுழைந்த போது அந்த வெள்ளையுடை மனிதர் இவனைக்கண்டு பீதியுடன் அலற முற்பட்டபோது அவன் கேட்டான் ” நீ தான் தவளையின் மரபணு கலந்த தக்காளிக்கு அனுமதி கொடுத்த மந்திரியா” அவர் பீதியுடன் தலையை ஆட்டினார்.

ஆப்ரிக்க கருந்தவளையின் கொடும் விஷம் கொண்ட நாக்கை ஆட்டியபடி அவன் பெருங்கோபத்துடன் அவர் கழுத்தை நோக்கி குனிந்தான்.

– சந்தோஷ் நாராயணன்

——

ஆசிரியர் குறிப்பு – சந்தோஷ் நாராயணின் முகநூல் பக்கத்தில் இச்சிறுகதை முதலில் வெளியாகியுள்ளது. இச்சிறுகதையின் முக்கியத்துவம் கருதி தோழரின் அனுமதியுடன் இங்கே மீள்பதிவு செய்கின்றோம்.

நன்றி – சந்தோஷ் நாராயணன், ஹாலிவுட் கிளிஃப்

 

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*