Home / கலை / வரலாறு ஒரு போதும் புதைந்ததில்லை

வரலாறு ஒரு போதும் புதைந்ததில்லை

மதங்கள்
மகுடங்கள்
பிணமலைகள்
அஞ்சும்
உயர்ந்த
கூரிய கலுமரங்கள்.
காற்றின்
தேகமெங்கும்
மரண ஓலங்கள்.
உயிர் வதை மட்டுமே
உயர்வாய் நினைக்கும்
சிம்மாசன சித்தாந்தங்கள்!
கொடையும் கொற்றமும்
மனித அமைதியின் மீது
நடத்தும்
மரணப்படுகொலைகள்.
புச்சன் வால்ட்
இன அழிப்பை மிஞ்சும்
அஃறினைகளும்.
அநாகரீகம்
காரி உமிழும்
முள்ளிவாய்க்கால் .
அசோகா சக்கரத்தின்
ஆரக்கால் முழுதும் – நாறும்
பிண நாற்றம் .
வாய்மை கூட வெல்லுமாம்
மகாத்மாவின்
மௌனப் புன்னகை.
சுவாதிக் நாஜிகளின்
மரண மிதிகளில் தப்பிய
யூத பிணங்களின்
நரவேட்டை
குழந்தைகளையும் பெண்களையும்
“விடாதே கொல்”
காசா தெருவெங்கும்
மாவீரன் அராபத்தின்
விடுதலை சுவடுகள்?…

PALESTINIAN-ISRAELI-CONFLICT-GAZA-STADIUM

குருதி படிந்த மண்
குற்றுயிரில் தெரிந்த
சதைத் துண்டு
கொத்தி குதறிய
கழுகுகள் கூட
எச்சமிட்டு
சபித்துப் போகும்.
எவனது
மூளை மடிப்பிலிருந்து
உதித்தது
துப்பாக்கியும்
கொடுவாளும்.
வரலாறு
ஒரு போதும்
பொய்களால்
புதைந்ததில்லை
பிணங்கள் கூட
திமிறி எழுந்து
தீர்ப்பு எழுதும்
அன்று தான்…!

– பாரதிதாசன்

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*