Home / சமூகம் / சிட்டிலயும் ஜாதி இருக்கு சார்…!

சிட்டிலயும் ஜாதி இருக்கு சார்…!

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, சிகையலங்காரக் கடை
நடத்தும் ஒரு இளைஞரோடு பேசிய போது,

முடி திருத்துபவர்:  சார்!   கட்டிங்கா சேவிங்கா…?

நான்:   ரெண்டுங்க…..

(  முடி திருத்துபவரின் அலைபேசி மணி அடிக்கிறது.  பேசுகிறார் )

முடி திருத்துபவர்:    அப்டியா…அவ்னுங்குள்ளேயே அட்சிகினாங்களா ?  செலய
எட்த்துன்னு வரும் போதா…?  நம்ம பசங்க ஒன்னும் போலியே….வீட்டோட
இருக்க சொல்லு…அப்றம் இதயும் பெரிசா ஆக்கிருவானுங்க…சரி ஒக்கே…
கஸ்டமர் இருக்காரு…..ஒன் அவர் கலிச்சி கால் பண்ற…  ஆ..வைக்கிற…

நான்:   என்னது…விநாயகர் சிலை ஊர்வலத்துல எதுவும் பிரச்சினையா ?

அவர்(முடி திருத்துபவர்)  :  இல்ல சார்…. ஊர்வலத்துல எந்த ப்ராப்ளமும்
இல்ல….இது வேற பிரச்சின…செலய ஏரில கரைச்சிட்டு வரும் போது
பசங்களுக்குள்ள அட்ச்சிக்கினாங்க போல…

நான்:  ஓஹ்…. நான் வழக்கமா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துல நடக்குற
பிரச்சின மாதிரின்னு நினைச்சிட்டேன்…

அவர்: அப்டிலாம் இல்ல சார்….  இது பசங்களுக்குள்ளே வேற மேட்டர்ல சண்ட
போட்டுக்கிட்டாங்க போல…..ரெண்டு பேருமே என் பிரண்ட்ஸ் தான்.
அட்ச்சவனும் என் ஃபிரண்டு தான். அடி வாங்குனவனும் என் ஃபிரண்டு தான் சார்.

நான்:   அப்ப நம்ம பசங்கன்னு ஏதோ கேட்டீங்க….  ? அவங்களும் உங்க
ஃபிரண்ட்ஸ் தானா ?

அவர்:    சார்…..சண்ட போட்ட ரெண்டு பேரும் ஒரே கம்யூனிட்டி ….. அதனால
பெரிய பிரச்சினை ஆகாது….இதுல எங்க பசங்க போய் மாட்டினா தான் பெரிய
பிரச்சினை ஆகும்…

நான்:  உங்க பசங்கனா உங்க கம்யூனிட்டினு சொல்றீங்களா ?

அவர்: ஆமா சார்…..  அதுதான் காலங்காலமா இருக்கறது தான்…இந்நேரம்
நாங்க எதாவது பண்ணி பிரச்சினை ஆயிருந்தா,   எங்கப்பா
இந்நேரம் எனக்கு முதல்ல கால் அட்சிருப்பாரு…!   நல்ல வேள….எங்க பசங்க
இதுல மாட்டல…

நான்:   இப்பயுமா இந்த மாதிரியெல்லாம் நடக்குது……உங்க ஊர் எது ?

அவர்:  திருவண்ணாமலை சார்…  அதுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமம்….ஆனா
இப்ப சண்ட நடந்தது டவுன் பக்கத்துல தான் சார்.

நான்:   இப்ப எந்த கம்யூனிட்டி அதிகமா பிரச்சின பண்றாங்க‌….

அவர்:   சார் எங்க ஊர்ல இருக்கறது மூணு கம்யூனிட்டி சார்….ஒன்னு
கவுண்டருங்க…இன்னொன்னு இப்ப PMK ஆளுங்க… அப்புறம் (சற்று
தயங்கியவாறு)  அம்பேத்கர் காலனி …..அப்புறம் நாங்க…நாங்க கொஞ்சம்
பேரு தான்.

நான்:  ஓஹ்ஹ்…..

அவர்:    ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் ஒன்னா தான் இருந்தோம்…நல்லா
பேசுவானுங்க…  பழகுவானுங்க….ஒன்னா சினிமாக்கெல்லாம்  போவோம்.
பிரச்சினனு வந்துட்டா மட்டும் தனியா அவங்கல்லாம் ஒரு குரூப்பா ஆயிருவானுங்க சார்…

நான்: உங்க ஊர் முழுக்கவே இப்படித்தானா…?

அவர்:  ஆமா சார்….அதுலயும் ஜாதிப்பிரச்சினையில எங்கூர் ரொம்ப கேவலமான
ஊரு சார்…

நான்:  அப்படின்னா பாதிக்கப்படுறது அதிகம் அம்பேத்கர் காலனி தானா ?

அவர்: ஆமா சார்….   எலக்‌ஷன் டைம்ல தான் ரொம்ப பண்ணுவானுங்க
சார்…..அதுவும் PMK ஆளுங்க,  பேசுற பேச்ச பாக்கணும்.  எல்லாம்
பண்ணிட்டு
கட்சில பாத்து ஓட்ட போடுன்னு வேற மெரட்டுவானுங்க….நாங்க அவனுங்க பக்கம்
திரும்பி கூட பாக்குறது இல்ல சார்…

நான்:  உங்க  ஊர்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கா ?

அவர்:  இப்ப தான் சார் கொஞ்சம் கொஞ்சமா வளருது..  ஆனா நமக்கு அரசியல்லாம்
இண்ட்ரஸ்ட் இல்ல சார்…நமக்கெதுக்கு வம்புன்னு கம்முனு
போய்டுவோம் சார்.

நான்:  திருமா பத்தி என்ன நினைக்கிறீங்க…

அவர்:  எங்களுக்கு ஒரு பிரச்சினனா அவருதான் நிக்கிறாரு…..அவர் சேகுவாரா
மாதிரின்னு கூட பசங்க சொல்வாங்க சார்…அவ்ளோ தான் தெரியும்…ஆனா அவரும்
ஏதோ மாறிட்டாருன்னு பேசிக்கிட்டாங்க…

Caste System in india

நான்: ஓஹ் சேகுவேரா பத்தி கூட தெரியுமா ?   எதாச்சும் படிச்சிருக்கீங்களா ?

அவர்: அந்த அளவுக்கெல்லாம் தெரியாது சார்…ஓரளவுக்கு
தெரியும்…எங்காளுங்க அடிக்கிற போஸ்டர்லலாம் பாத்துருக்கேன்…

நான்:   அப்ப பெரியார் பத்தி என்ன நினைக்கிறீங்க…

அவர்:   தெர்ல சார்…நமக்கு அதுலலாம் இன்ட்ரஸ்ட் இல்ல சார்….(  சற்று
தயங்குகிறார்…  )

நான்:  இப்பயும் கோயில்லலாம் உள்ள போறதுக்கு உங்களுக்கெல்லாம் அனுமதி
இருக்கா ?   எல்லோரும் எல்லா கோயில்லயும் போய் சாமி கும்பிடுவீங்களா ?

அவர்:  எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல சார்….ஆனா போ மாட்டோம்.
எங்க கோயிலுக்கு தான் போவோம்.

நான்: ஏன் போக மாட்டீங்க…?

அவர்:    எதுக்கு தேவ இல்லாம வம்புன்னு தான்….எங்களுக்கு நாலு கோயில்
இருக்கு சார்…அங்க தான் போவோம்….அவங்க கோயில் பக்கம்லாம் போறதே இல்ல
சார்.

நான்: சரி …சப்போஸ் நீங்க அவங்க கோயிலுக்கு போறீங்க…உங்கள உள்ள விட
சம்மதிப்பாங்களா ?

அவர்:  இல்ல சார்…பிரச்சன பண்ணுவாங்க…..அதுவும் எங்கள கூட ஒன்னும்
சொல்ல மாட்டாங்கன்னு வைய்ங்க…அம்பேத்கர் காலனி ஆளுங்க
நினைச்சு கூட பாக்க முடியாது…கண்டிப்பா அன்னிக்கு அடிதடி
நடக்கும்….அதான் என்னாதுக்கு வம்புன்னு எங்க ஆளுங்க யாருமே அங்க
போறதில்ல…சார்..

நான்:  நீங்க ஏன் எப்பவுமே அடங்கி போறீங்க…..திருப்பி சண்ட போட வேண்டியது தான…

அவர்:  முடியாது சார்.  நாங்க கொஞ்சம் பேரு தான்..அம்பேத்கர் காலனி ஒன்னு
ரெண்டு தெரு தான் சார் இருக்கும்….அதுவும் என்ன பாத்தாலே ஈஸியா கண்டு
பிடிச்சுடுவானுங்க….இல்லனா எந்த ஏரியாடான்னு கேப்பாங்க….என் தெரு பேர
கேட்டாலே போதும்…பெரியார் தெரு…எங்கள்தும் ஒரு தெரு தான்
சார்….அவங்க மெஜாரிட்டி….ஒன்னும் பண்ண முடியாது.  இப்ப தான்  கொஞ்சம்
கட்சி கிட்சின்னு
திருப்பி கேக்க ஆரம்பிச்சுருக்காங்க…..அதுலர்ந்து தான் அவனுங்களுக்கு
எங்க மேல செம்ம காண்டு…எப்ப சான்ஸ் கெடக்கும் அடிக்கலாம்னு….அதான்..
எதுனா பிரச்சின வந்தா மொதல்ல எங்க பசங்கள வீட்டோட இருக்கச் சொல்லிருவோம்


நான்:   எல்லாம் டெவலப் ஆன காலத்துல கூட,  இன்னுமா இந்த மாதிரியெல்லாம்
நடக்குது….

அவர்:   அதெல்லாம் கூட பரவால்ல சார்….சின்ன பசங்க கூட  எங்கள
பாத்தா…..ஆய் ஓய்ன்னு கூப்பிடுறதும்…அசிங்கமா திட்டறதும்…..ஸ்கூல்
படிக்கிற பசங்களுக்கெல்லாம் யாரு சார் சொல்லிக் கொடுக்குறா ?

நான்:  ஊர்ல கிராமங்கள்ல மட்டும் தான் இன்னும் இப்படியிருக்குனு
நினைக்கிறேன்…சிட்டில கொஞ்சம் பரவாயில்ல….ல?

அவர்:  அப்படியெல்லாம் இல்ல சார்…இங்கயும் இருக்கு சார்….இங்க கூட
ஆரம்பத்துல பேசும் போது நல்லா மரியாதையா தான் சார்
பேசிக்கிட்ருப்பாங்க…அப்புறம் என்ன வேல செய்றனு கேப்பாங்க….சலூன் கட
வச்சிருக்கேன்னு சொன்னவுடன,  ஓஹோ அப்படியான்னுட்டு போய்டுவாங்க….அடுத்த
நாள்லருந்து அவங்க பேச்சே வேற மாதிரி இருக்கும்……மரியாத
கொறயும்….போடா வாடான்னு பேச ஆரம்பிச்சுடுவானுங்க…   ஒரு நிமிசம்
இருப்பா வர்றேனு வீட்டு வாசல்ல நிக்க வச்சி அனுப்புவாங்க…எங்க
ஊருக்கும் இங்க சிட்டிக்கும் எந்த பெரிய வித்தியாசம் இருக்கற மாதிரி
தெரியல…ஊர்ல நல்லா நேரடியா தெரியும்.  இங்க வெளிப்படையா தெரியாது…ஆனா
எங்கள மாதிரி ஆளுங்களுக்கு அது வெளிப்படையாவே தெரியும்.

நான்:   ம்ஹூம்ம்…ஆமா ஐ.டி கம்பெனில வேல செய்ற பசங்க கூட,   சொந்த
சாதில தான் பொண்ணு தேடுறாங்க…  ஆன்லைன்ல…

அவர்:  ஜாதியெல்லாம் மாத்தவே முடியாது சார்….திருந்தவே மாட்டானுங்க….

நான்:   அதெப்படி சொல்ல முடியும்…ஒரு காலத்துல  நம்ம யாருமே படிக்க
முடியாது..இப்ப படிக்கிறோம்..லேடீஸ் வேலைக்கு போக முடியாது..இப்ப
போறாங்க…
.குறைந்த பட்சம் உன் சாதி என்னன்னு கேக்க கூட தயங்குறாங்க இல்லயா ?
இதெல்லாம் மாறாமயா நடந்துருக்கு…..நம்ம தான் போராடணும்…

அவர்:   நீங்க என்ன சொன்னாலும்…..போராடுனாலும்..  ஆயிரம் பெரியார்
வந்தா கூட திருத்த முடியாது சார்.

நான்:   பெரியார் பத்தி ஒன்னும் தெரியாதுன்னு சொன்னீங்க….இப்ப பெரியார
பத்தி பேசுறீங்க….  ( சிரிக்கிறார் )

அவர்: படிக்கணும்னு நினைப்பேன் சார்….  பெரியார் அம்பேத்கர்
புக்கெல்லாம் படிக்கணும்னு நினைப்ப….டைம் இல்ல சார்….கடயில அந்த
புக்க வெச்சிருந்தா கூட
தப்பா நினைச்சிட்டு கட பக்கம் யாரும் வர மாட்டாங்கன்னு தான்
படிக்கிறதில்ல…உங்க கிட்ட கூட அதான் ஆரம்பத்துல பெரியார் பத்தி பேசல
சார்..

நான்:  அப்படிலாம் இல்லங்க….பெரியார் இல்லனா இன்னிக்கு நீங்களும்
இல்ல….நானும் இல்ல…..  நீங்க கண்டிப்பா அவர பத்தி படிக்கணும்…நான்
வேணும்னா
புக்ஸ் எடுத்துட்டு வந்து தர்றேன்..

அவர்:  ஒக்கே சார்….ரொம்ப தேங்க்ஸ் சார்..தப்பா ஏதும் பேசிட்டா
மன்னிச்சுருங்க சார்…..

————————
இது கற்பனை உரையாடல் அல்ல…. நடந்த உரையாடல் அப்படியே பதியப்பட்டுள்ளது…

அ.மு.செய்யது

About அ.மு.செய்யது

2 comments

  1. இப்ப எல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க …?

    இன்னும் எத்தனை நாளைக்கு நம்மளை நாமே ஏமாத்த போறோம்…. ?

  2. சாதி இருக்கு, என்ன செய்வது, சூழ்நிலை என்று சொல்பவர்களை கூட ஏற்றுகொள்ளலாம் ஆனால் இல்லை என்று சொல்பவர்கள்தான் துரோகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*