Home / கலை / முகமூடிகள்

முகமூடிகள்

 

3 sizes

நாம் என்றோம்
நீ என்றீர்
சமம் என்றோம்
ஆண்ட பரம்பரை என்றீர்
சாதிய இழிவு ஒழிய வேண்டும் என்றோம்
தமிழர் பண்பாடு என்றீர்
எங்கள் ஊரைக் கொளுத்தினர்
உன் அண்ணன் தானே செய்தான் என்றீர்
எங்கள் உயிரைக் கொன்றனர்
கள்ள‌த்தனமாக வேடிக்கை பார்த்தீர்
எங்களுடன் நின்றவர் சிலர்
அவர்கள் வந்தேறி என்றீர்

 

வந்தேறிகள் எதிரி என்றீர்
நாங்களோ அனாதையாக இங்கே
சிங்கள வெறிக்கு எதிராய் என்றீர்
நாங்களோ சாதி வெறியின் அவலமாய் இங்கே
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றீர்
சாதியத்தால் அழிந்து கொண்டிருக்கிறோம் இங்கே

அழிக்க வேண்டியது திராவிடம் என்றீர்
அல்ல, சாதிய வெறியை மறைத்துத் திரியும் முகமூடிகளையே !
– ம. பிரவீன் ராஜ்

( தமிழ்த் தேசியம் எனும் முகமூடியோடு உலவும் சாதிய ஆதிக்கவாதிகளை நோக்கி எழுதப்பட்ட கவிதை, அவர்கள் தான் அந்த மூகமூடிகள் !)

About ம.பிரவீன்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*