Home / கலை / தியாக தீபம். திலீபன்

தியாக தீபம். திலீபன்

 

Lt-Col-Thileepan

 

செங்கரும்புச் சாறும் செவ்வாழை நறுந்தாரும்

நொங்குமதன் மேவும் நன்மருந்தாகி நெல்லியும்

மாங்கனியும் நன்னீரும் மறுத்திருந்த நின்னை

தாங்கிய தேகமது தியாகம்

 

செங்கதிர் வீசக்கூசும் மயிலோன் முகமுமதன்

பங்கானச் சித்திரக் கருவிழியு மதனாடியும்

சிங்களத்தைக் கூர்போடுஞ் சொல்லும் பல்லுமதன்

மங்காத புன்னகையும தழகு

தங்கை யரும்பாலகரும் படுந்துயரா லுந்தன்
தங்கை யர்போல் உள்நினைந்து ஈழத்து

மங்கை யர்வாழ்வும் தலைமுறையும் சீர்தூக்கநீ

வேங்கை யெனவிருப்பது வீரம்

 

தங்க மழைபொழியுந் தென்பெருநில முமதன்

வங்க ஏரிக்கரை செழித்தாட்சியு மெவரோ

பங்கு போடவந்தெ மையழிக்கு மதனால்நீ

சங்கென முழங்குவது பற்று

 

இந்தி யரமைதிப்படை யென்னும் பெயரோடு

வந்தி றங்கியதோர் கூலிப்படை யதுவோடுநீ

வெந்நி றப்புறா கொண்டழித்துக் கூண்டோடு

சந்தி சிரித்தததுவே துணிவு

 

பதவி வந்தக்கணஞ் சுயநலம் பாராவிரு

கதவு டைத்தெறிந் தென்றும் நில்லாதினம்

விதவி தப்போராட்டஞ் செய்துன் கனவுக்கொரு

உதவி செய்வதெங்கள் பணி

 

– குட்டிமணி செங்குட்டுவன்

About குட்டிமணி செங்குட்டுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*