Home / கலை / அடையாளமற்றவரின் குரல்

அடையாளமற்றவரின் குரல்

கட்டுமர மீனவனைக்கூட
காப்பாற்ற வக்கில்லாத அரசுக்கு

கப்பற்படை எதற்கு ?

பாம்பன் பாலத்தை உடைத்து
பல்குத்த வைத்துக்கொள்ளுங்கள்
காசி யாத்திரை இனி ராமேஸ்வரத்தில் முடியாது
அக்கினி தீர்த்தத்தின்
அத்தனை துளிகளிலும்
மீனவர்களின் சீழ் ரத்தமும்
அரசுகளின் துரோகமும் கலந்திருக்கிறது.
20100830193250!The_Scream
தமிழருக்கு இன்னலென்றால் மட்டும்
உங்கள் செவிகள் செவிடாகும்
விழிகளில் திரை விழும்
உதடுகள் பேசாது ஒட்டிக்கொள்ளும்
எனில்
தமிழரைப் பொறுத்தவரை
இந்திய தேசியம்

இன்றுமுதல் செத்த சவம்

உயிரை எடுத்து
உணர்வை அழித்து
உள்ளத்தை சிதைத்து
வேற்று மொழியால்
தாய் மொழியை களங்கப்படுத்தி
இன அடையாளங்கள்
இல்லாமற் செய்தாலும்
ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்
அடையாளமற்றவர்களின் குரலுக்கும் ஓசையுண்டு

——அவனி அரவிந்தன்

– நன்றி – ஓவியம் – வான்கா

About அவனி அரவிந்தன்

One comment

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*