Home / கலை / தர்மமாம்! வெல்லுமாம்!

தர்மமாம்! வெல்லுமாம்!

பொய்களால்
நிரம்பியுள்ளது
பூமி!
உண்மைதான்
உண்மை
உயிரோடிருப்பதே.

நீதியின்
நிர்வாணத்தில்தான்
அநீதி
ஆடையுடுத்திக்கொள்ளும்போலும்.

நல்லவர்களும்
நேர்மையானவர்களும்
தலைநிமிர்ந்து
தெருவில்
நடக்கவே
வெட்கப்படுகிறார்கள்.

“தர்மத்தின்……..
தர்மம் நின்று”…
தர்மம் ஓடினாலும்
சூதுதான் வெல்லும்
மர்மமாய் ஆசிர்வதிக்கும்
சாத்தான்கள்.

Ethics-Word-Cloud-1227168

குற்றம்
பார்க்கின்
சுற்றமே இல்லை
அம்மா !

திருடர்களுக்கும்
வழிப்பறிக்காரர்களுக்கும் மட்டுந்தான்
நிழல் தர வேண்டுமாம்
சாலையோர மரங்களுக்கு
சர்க்காரின் உத்தரவு.

கொடை
கொற்றம்
சிம்மாசனம்
சிறைச்சாலையையும் சேர்த்துக்கொள் !

–    பாரதிதாசன்

நன்றி – மக்கள் விடுதலை இதழ்

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*