Home / FITE சங்கம் / மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு…- 5

மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு…- 5

மரியாதைக்குரிய என் சக ஊழியனே,நண்பனே வணக்கம்!

நீ எப்படி இருக்கிறாய்? என்று கேட்கத்தான் எத்தனிக்கிறேன். ஆனால் செய்தித் தாள்களில் வரும் செய்திகள் உன்னுடைய நிலையை எனக்கு உணர்த்திவிடுவதால் நீ இருக்கும் நிலையை உணர்ந்தே இருக்கிறேன். என்னுடைய நிலையும் அதேதான், இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று உன்னுடன் விவாதிக்க விரும்பியே இந்தக் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்திய அளவில் மிகப்பெரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், தன்னுடைய ஊழியர்களில் சுமார் 25000 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்து, நடவடிக்கை எடுத்து வருவதை நீ அறிவாய்.

தோராயமாக 3,50,000 ஊழியர்கள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 7 விழுக்காடு அளவுள்ள ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புவதை செய்துகொண்டே மேலும் 35,000 பேரை புதிதாக பணியில் அமர்த்துவதையும் ஒருபுறம் செய்து வருகிறது டாடா கன்சல்டன்சி நிறுவனம்.

tcs1

டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பன் ஒருவனிடம் பேசிய போது,10 ஆண்டுகளுக்கு  மேல் அனுபவமிருக்கும் ஊழியர்களை அவர்களுடைய பணித்திறன் ( APPRAISAL RATING) அடிப்படையில், பணியைவிட்டு நீக்குவதாகக் கூறினான்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடக்கும் பணித்திறனை அளவிடும் முறை (PERFORMANCE APPRAISAL) என்பது துளி அளவுகூட வெளிப்படைத்தன்மை இல்லாதது என்பது நாம் அறிந்ததுதானே.

செய்தித்தாள்களில் பணி நீக்கம் பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ள டி.சி.எஸ் நிறுவனம், ஒரு “மறுசீரமைப்பு நடவடிக்கை” என்று கூறியுள்ளது.

நிறுவனத்திற்கு வேண்டுமானால் பணி நீக்கம் செய்வது என்பது “மறு சீரமைப்பு” நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் உனக்கும், எனக்கும், பணிநீக்கம் பற்றிய அச்சத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி நிறுவன ஊழியர்களுக்கும் வேலையிழப்பு என்பது வாழ்வாதார சீரழிப்பு என்பது நீயும் நானும் அறிந்தது தானே?

21 வயதில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்று, மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து உழைப்பைக் கொட்டி வேலை பார்த்து வருவோம். தன்னுடைய வேலையை மட்டுமே நம்பி குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணாகவோ, வேலையில் இருக்கிறார் என்பதற்காகப் பெண் கொடுக்கப்பட்டுத் திருமணம் செய்த ஆணாகவோ, வீடு கட்ட வாங்கிய கடனுக்கு இஎம்ஐ (EMI) கட்டிக் கொண்டிருப்பவராகவோ, பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்குப் பெற்றோராகவோ என வேலையை மட்டும் நம்பியிருக்கும் இருக்கும் உன்னையோ, என்னையா, நம் அருகில் அமர்ந்திருப்பவரையோ பணியை விட்டு நீக்கினால் நாளைக்கு என்ன செய்ய முடியும் என்று உனக்கு ஏதேனும் சிந்தனை இருக்கிறதா?

வேலை இழப்பு பற்றிய அபாயத்தை உணர்ந்தே இருக்கிறேன். ஆனால், நாம் என்ன செய்ய முடியும்? என்று நீ எண்ணுவது எனக்குத் தெரியும். எப்படி எனக்குத் தெரியும் என்கிறாயா?, இங்கு நான் என்பதே நீதானே.

tcs3

பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு, தொழிலாளர் நல வாரியத்தில் புகார் கொடுத்து போராடிய நம் சக தோழி ஷீலாவைப் பற்றி நான் முன்னொரு கடிதத்தில் எழுதியிருந்தேன் (மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2).

தோழி ஷீலாவின் வழக்கில் நாம் நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பணிநீக்கம் செய்யப்படும் போது, தாமாகப் பணியைவிட்டு விலகுவதாக இருந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்ததுதான்.

ஆம் நண்பனே, நம்முடைய நிறுவனங்கள் உன்னையோ, என்னையா வேலையை விட்டு துரத்தும் போது,  நாமாக வேலையைவிட்டு செல்வது போன்று எழுதி வாங்குவது ஒரு நரித்தனமான செயல்.

நாமாக வேலையைவிட்டு நீங்கிச் செல்வதாக எழுதிக் கொடுத்துவிட்டால், ஊழியர்களால் நிறுவனத்தை எதிர்த்து சட்டப்படி எதுவும் செய்ய முடியாது என்பதே இதற்குக் காரணம்.  வேறு எங்கும் வேலை கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று மிரட்டுவதும் நம் சக ஊழியர்களுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் நீயோ நானோ, நம் சக ஊழியனோ செய்ய வேண்டியது முதல் வேலை, நிறுவனத்தின் மிரட்டலுக்கு அஞ்சாமல், நாமாகப் பணியைவிட்டு விலகுகிறோம் என்று எழுதிக் கொடுக்காமல் இருப்பதுதான் தோழனே. நிறுவனங்களைக் கடந்து இது நம் அனைவருக்கும் பொருந்தும்.

இன்று உன் அருகில் அமர்ந்திருப்பவரின் மீது வீசப்படும் பணிநீக்கம் என்னும் கத்தி, உன் மீது வீசப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை நாம் உணர்ந்து இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

என்னுடைய நம்பிக்கைக்குரியவன் நீ மட்டுமே, அதனால் உன்னை மட்டுமே நம்பி வந்துள்ளேன்.

இப்படிக்கு,

உன் சக ஊழியன்

குறிப்பு:-

நீ வேலையைவிட்டு நீக்கப்பட்டால், உனக்கு உதவ நானும், உன் அருகில் அமர்ந்தோ, உன்னுடைய பக்கத்து நிறுவனத்திலோ வேலை பார்க்கும் உன்னுடைய சக ஊழியர்கள் தயாராகவே இருக்கிறார்கள் (http://www.ilanthamizhagam.com/2014/12/21/tcs-layoff/)

About விசை

6 comments

 1. Let me list down the points which is wrong/unlawful/unethical in latest TCS Restrcturing…
  1- TCS Management says that this restructuring (or Lay off) is routine exercise, which is completely wrong. I am with this company since last 2 decades and I have not seen Layoffs in this scale.

  2- Till now this company was considered for Job Security, which was true. Now all of a sudden they decided to change this image. This is wrong ethically as there are so many employees who stayed with this company just for the sake of Job Security in spite of less salary or no chance of overseas deputation/immigration.

  3- Management says that those who are getting fired are low performers. I don’t agree with this. If they were low performers why they were kept so long in company payroll. Was there any program to improve performance of these non-performers? The reason for non-performance may be many like no chance for overseas deputation/immigration, politics from onsite counterparts.

  4- The most lucrative thing about TCS is its overseas deputation/immigration. (Outsiders may think that this is salary which is not true). There is no fix policy or guidelines for overseas deputation here. One who is at onsite is kept onsite and those who are in India remains here. The reasons provided are foolish like client does not want to leave a particular person or Visa dependency etc. There should be external Audit for TCS overseas deputation/immigration process which is random or depends on your luck.

  5- If They have decided to lay off senior employees in this scale then is there any VRS program offered to them or their adjustment in other TATA companies. Consider what happen to these employees and their family Medical insurance after they are out from TCS.

  6- This entire restricting is nicely managed in media, there is no regular updates on this. Everything is being planned in closed doors and employee is left to the mercy of his fate. No mainstream media is covering this.

  7- Employees need to reach all regal aids, Labor department, Supreme court, Government, Parliament, State Legislative, Visa offices and Consulates in time otherwise this injustice will happen silently.

  Other please feel free to append this comment with your helpful suggestions!

 2. I am not sure why you are restricting this only to tamil youths!! This is a national issue, people from all states are affected. Post your contents in English. You may not able to create momentum if you limit only to tamil youths.

 3. TCS starts laying off under-performing employees :

  Hi TCSers and Frends,

  If you are an under-performer then why cant you try to improve your performance.

  Don’t simply blame our company.

  TCS employed more than 3,15,000 professionals.

  Major professionals(more then 3,00,000) showing good performance and still in bright side of TCS.

  Try and come up to bright side by showing your performance in our floor.

  Don’t waste your time.

  by
  Raghu

  • Thanks for your comment Raghu. Pls find the below reply for your comment from your fellow TCSer’s….

   1)Ashem Dhaneshwor – If they are underperformers, how they got promoted to assistant consultant or consultant. Even if so, this can be treated in different ways like deducting salary or not increasing. This is more like use and throw. How far is it true that there is no bais in rating a tcser’s according to their performance. Whoever the decision makers are, they should rule out this idea.

   2)Krushitha Susheel – Ask them to come up with their definition of under performer first. People working in TCS for almost 10-11 yrs in the same company all of a sudden how come there become underperfomer overnight.

   3)A Subba Rao – Transparency and fairness are corner stones of any HR policy. The issues here are
   1. Employees should be informed in advance the policy for layoff. Layoff is a serious matter. Any change in policy like laying off C graders for 3 consecutive Cs from D grade should be made known at least one year before so that they can improve performance.
   2. Bell curve is relative performance monitor. What if say all are outstanding? Infosys and several top IT companies like Google or Facebook don’t follow bell curve.
   3. Skill mismatch is an issue in all fast changing technologies. TCS should train their associates in the new technologies. Or atleast direct them to acquire new skills in say 1 year.
   That is the different between great company and inefficient and insensitive company.

   4) Ramakrishna Mahanti And also can you define what is underperformance as per your company policy with complete details. Then one can validate whether they are underperformers or not

   5) x – why you don’t have any official criteria on “poor-performance”? If associate knew that they are near too poor performance they will improve
   their performance.

   6) Satheesh Kumar To whom who asked this question: Why are you following Bell curve ? If everyone in the team works good, But still the TCS purposefully gives low rating to one person and call him/her low performer. One question to TCS : – why do you recruit the low performer. Is the recruitment team is not capable of identifying the talent ?

   7)Ramakrishna Mahanti Dear TCS spokes person, first strengthen your appraisal system and find out the bottom 15% and remove them every year. These are either do not understand IT or not interested to work. If you are removing other than this and stamping them as underperformers are not at all accptable.

   8)சண்முகவேல் குட்டியாண்டி சந்திரகாசு they accept there is a dark side(when they say there is a bright side). how dark it is is the one we are trying to justify. Instead of taking out breads n butters of 25,000 families they could have lowered salary of senior management. Since, they are trying to cover up for their inability. It is a manager who has to have the skill to extract productive amount of work from their resources. or re deploy them in other project.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*