Home / சமூகம் / சென்னையில் தமிழர் விழவு – 2046

சென்னையில் தமிழர் விழவு – 2046

தமிழ்ப் புத்தாண்டையையும், பொங்கல் திருநாளையும் முன்னிட்டு உழவர்களையும் பண்டைத் தமிழர் பண்பாடுகளையும் நினைவுபடுத்தும் விதமாக இளந்தமிழகம் இயக்கத்தின் முயற்சியில், கடந்த வாரம் (11 சனவரி 2015) சென்னை வேளச்சேரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

10931250_643453209111341_7793723947007458326_n

தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாக்கனி, தோழர் தியாகு, தோழர் ரோஸ் ஆகியோர் இப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். அனைவருக்கும் இளந்தமிழகத்தின் இயக்கத்தின் கொள்கை அறிக்கை வழங்கப்பட்டது.

10930938_643374015785927_3949812431133179486_n

தோழர் இரா. சங்கர், தோழர் சமந்தா ஆகியோர் இந்நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியின் துவக்கமாக, தோழர் நாசர், தோழர் அருணகிரி, தோழர் செய்யது, தோழர் தீபன் ஆகியோர் பங்கேற்ற குறுநாடகம் நிகழ்த்தப்பட்டது. பொங்கல் விழாவை நாம் ஏன் கொண்டாடுகிறோம், தைத்திருநாளை நாம் ஏன் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் போன்ற செய்திகளை விளக்குவதாக, அக்குறுநாடகம் இருந்தது.

10931548_643374115785917_3584838144774244594_n

குருநானக் கல்லூரி மாணவர் அண்ணாதுரை அவர்கள் தனது பலகுரல் திறமையின் மூலம் மீத்தேன், கூடங்குளம் போன்ற திட்டங்களின் கேடுகள் குறித்து, எளிமையாகவும் பகடியாகவும் பேசி விழாவை கலகலப்பாக்கினார். பின்னர் மடப்புரம் காளியம்மன் கலைக்குழுவினரின் பறை, கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், கருப்புசாமியாட்டம், மயிலாட்டம், மானாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் வண்ணமயமாக அரங்கேறின.

10606513_643374252452570_8826780237421726738_n

நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை வேளாண்மை பயின்று கொண்டிருக்கும் தோழர் ரோஸ் அவர்கள் குழந்தைகளுக்கான வினா விடை நிகழ்ச்சியை நடத்தினார். இயற்கை உணவு சார்ந்த வினாக்களுக்கு குழந்தைகள் பதிலளித்து, இனிப்புகளையும் காவிக்கண்டுகளையும் பரிசாகப் பெற்றனர். பின்னர் திருக்குறள் போட்டியும் நடைபெற்றது.

10931333_643374539119208_1861537739809568258_n

இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்கள் தனது சிறப்புரையின்போது, இப்புத்தாண்டு புதிய நம்பிக்கைகளை நமக்கு அளிப்பதாகக் கூறினார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் அநீதியான பணி நீக்கங்களை எதிர்த்து, நாம் “தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கான மன்றத்தை” உருவாக்கி இருக்கிறோம். கடந்த ஆண்டின் தொய்வுகளிலிருந்தும் நம்பிக்கையின்மைகளிலிருந்தும் விடுபட்டு, பல்லாயிரக்கணக்கான தகவல் தொழில் நுட்ப ஊழியர்களிடையில் இது ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது என்று தெரிவித்தார். நிகழ்வின் இறுதியாக, தோழர் தியாகு அவர்களின் சிறப்புரையும், பொங்கல் வாழ்த்தும் வழங்கப்பட்டது.

10933957_643377079118954_4559023354086305767_n

நிகழ்வின் காணொளிகள்:

அ.மு.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*