Home / கலை / அங்கீகரிக்கப்படாத கவிஞர்களுக்காக

அங்கீகரிக்கப்படாத கவிஞர்களுக்காக

சூரியன்
உடைத்து
போட்ட
நெருப்பு
பொட்டலம்
எப்படி?
பூமியாய்…..!

கடலும்
நதியும்
ஏரியும்
குள‌மும்
காற்றும்
நீரும்
கண்டுபிடித்தது
எவரது
வேண்டுகோளுக்கிணங்கி

புல்லில்
துவங்கிய பூமி
நெல்லு வரையிலும்
புசிக்க தந்தது
எவனது அங்கீகாரத்தையும்
எதிர்பாத்தல்ல !

பூணூல் தர்மம்
புறக்கணித்த
மாகவிஞன்தான்
விடுதலை போருக்கு
வீரியமானான்
விதையும் அவன்தான் !

யுகாக்கனியின்
வெம்மை தாளாது
மானுட விடுதலை – புரட்சி
யாழ் என மீட்டிடும்
மகாகவிஞன்
இன்குலாபின்
பேனா!
எவனது கைதட்டலுக்கு
காத்திருந்தது…?

பூதகியின்
நகக்கண்
தின்றே
உயிர் பிழைக்கும்
கரப்பான்
பூச்சிகளுக்கு
வேண்டுமானால்
அங்கீகாரம்
தேவைப்படலாம்

தேனீக்களுக்கு
தேவை
தேடலும்
போராட்டமுந்தான்!

images (1) 

 

 

 

 

 

 

—- பாரதிதாசன் – இளந்தமிழகம்  இயக்கம்

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*