Home / FITE சங்கம் / பெண்களை வலுப்படுத்துவோம் – மனிதத்தை வலுப்படுத்துவோம்

பெண்களை வலுப்படுத்துவோம் – மனிதத்தை வலுப்படுத்துவோம்

அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள்-மார்ச்-8-2015

இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறைகளில் ஐ.டி துறையும் ஒன்று.ஏறக்குறைய இத்துறையில் உள்ளபணியாளர்களில்30% பேர்பெண்கள்.அதிக அளவில் பெண்களை பணியில் அமர்த்த கூடிய துறைகளில் ஒன்றாக ஐ.டி./ஐ.டி சார்ந்த துறை இருக்கிறது.இந்தியாவில் பணிபுரியும் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களில் ஏறக்குறைய 55% பேர் பணியிடத்தில் மிக மோசமான பாரபட்சத்திற்கு ஆளாகி வேலையை விடும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.பெண்கள் அதிக அளவில் நாட்டின் சமூக உற்பத்தியில் ஈடுபடும் அதே நேரத்தில் அதிக அளவுக்கு வன்முறைக்கும் ஆளாகின்றனர்.

photo6

தகவல் தொழில்நுட்ப துறை பெண் பணியாளர்கள் மற்ற துறை சார்ந்த பெண்களை விட சற்று மேம்பட்ட நிலையில் இருந்தாலும் அவர்களும் பணியிடங்களில்,பொது இடங்களில்,வீட்டில் என மேற்கூறிய பிரச்சினைகள் அனைத்தையும் சந்திக்கூடியவர்களாகவே இருக்கின்றனர்.எனவே,அவர்களும்,பெண் என்பதால் தங்களுக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சதிற்கும்,வன்முறைக்கும்,உழைப்பு சுரண்டலுக்கும் எதிராக போராட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

photo5

அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் என்பது நம்மை அழகு பொம்மைகளாக காட்டும் நாள் அல்ல,மாறாக தங்கள் உரிமைக்காக போராடி ரத்தம் சிந்திய பெண்களின் போராட்ட வரலாற்றை நினைகூரும் நாள். ஆண் பெண் சமத்துவத்திற்கான நீண்டபோராட்டத்தை தொடர நம்மை வலிமை படுத்தி கொள்வதை பற்றி சிந்திக்கும் நாள்.கடந்த ஆண்டு இளந்தமிழகம் இயக்கம் ஐ.டி. துறை பெண்களிடையே நடத்திய ஆய்வின் அடிப்படையில் சில முக்கிய கோரிக்கைகளை “தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றம்(FITE-Forum for IT Employees)” ஐ.டி. துறை நிறுவனங்களின் கவனத்திற்கும்,தமிழக,இந்திய அரசுக்கும் முன் வைக்கிறது. ஐ.டி துறை பணியாளர்களை குறிப்பாக பெண்களைப் போராட அழைக்கிறது.

  • சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை 6 மாதங்கள் வழங்கு!
  • பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அனைத்திலும் குழந்தை காப்பகங்கள் அமைத்திடு!
  • அறிவியல் பூர்வமான,வெளிப்படையான,பாரபட்சமற்ற திறன் மதிப்பீடு முறை(Appraisal System) வேண்டும்,அதில் பெண்களின் சமூக நிலையை கணக்கில் எடு!
  • நிறுவனங்களின் எல்லா மட்டங்களிலும் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண் பணியாளர்களை உறுதிபடுத்து!
  • பெண்களின் அனுமதி பெற்று இரவு பணியில் அமர்த்து!
  • மாதவிடாய் காலம், கர்ப்ப காலம்,தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் போதிய இடைவெளி நேரம் மற்றும் நெகிழ்வு தன்மை கொண்ட வேலை நேரம், இடம் வழங்கிடு!
  • பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அனைத்திலும் பாலியல் தொல்லைகள் மீதான புகார்களை விசாரிக்கும் உள்ளக புகார் குழுக்களை அமைத்திடு!
  • அனைத்து பணியாளர்களுக்கும் தொடர்ச்சியான பாலின வேறுபாடு குறித்த விழிப்புணர்வு பட்டறைகளை நடத்து!
  • தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனங்கள் உள்ள பகுதியில் அரசு தங்கும் விடுதிகள் அமைத்திடு!

——-“தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றம்(FITE-Forum for IT Employees)”

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*