Home / கலை / எப்படிச்சொல்வேன்

எப்படிச்சொல்வேன்

 

சிவந்ததொலைக்காட்சி

திரை கண்டு மழலைதன் மொழியில்

யாரிவர்கள்

எப்படி இறந்தார்களென்று வினவ

அய்யோ!

எப்படிச்சொல்வேன்

புதிய உலகைப்படைக்க

புறப்பட்டவர்கள்

சாகவில்லை

சாகடிக்கப்பட்டார்களென்று

சோறுண்ணத்தெரியா அவளிடம்

வன்முறைகளிலிருந்தும்,

போர்களிலிருந்தும்,

பாலியல் தொல்லைகளிலிருந்தும்

தற்காக்க கற்றுக்கொள்ளென்று

எப்படிச்சொல்வேன்

 

துளிர்விட்டெழும்பும் அவள் வாழ்வில்

பயத்தையும் அவநம்பிக்கையையும்

விளைவித்தல் அறமோ!

பிறப்பைபற்றியறியா அவளிடம்

இறப்பு, வன்முறை, பாலியல் தொல்லைபற்றி

பயிற்றுவிப்பது தகுமோ!

 

எப்படிச்சொல்வேன்

என்னிடம் கேளாதேயென்று

அவளோ சிந்திக்க தொடங்கிவிட்டாள்

இறப்பிலிருந்து

 

ஏ ! பிணம் தின்னும் சாத்தான்களே

எங்கள் குழந்தைகளின் புன்னகைமுன்

உங்கள் ஆயுதகள் மயிரடா

ஏய் ! மனிதம் மறந்தகாமக்கொடூரர்களே!

எங்கள் குழந்தைகளின் அன்பின்முன்

உங்கள் ஆணவமிடுக்குகள் வெறும் மண்ணடா

 

மூடர்களே !

உங்களை எய்த சமூகத்திடம் சொல்

சிறகொடிந்த குழந்தைகளின் கனவு போல்

உங்கள் ஆதிக்கக்கோட்டைகள்

வீழ்த்தப்படுமென்று !

உங்கள் ஆணவக்குறிகள்

பொசுக்கப்படுமென்று!

 

–       ம. பிரவீன்ராஜ்

10699219_1521297028130722_2077059201_n

About ம.பிரவீன்ராஜ்

One comment

  1. Has the potential for a good poem. But please avoid rhetoric.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*