Home / அரசியல் / சுட்டுத் தள்ளுவோம் – இலங்கை : வேடிக்கைப் பார்ப்போம் – இந்தியா ??
இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்கள்

சுட்டுத் தள்ளுவோம் – இலங்கை : வேடிக்கைப் பார்ப்போம் – இந்தியா ??

 

இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்ற பின்பும் மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர் நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசோ தன் பலத்தை காட்டுவதற்காக மீனவர்கள் உயிரை வைத்து நாடகம் நடத்துகின்றது. மீனவர்கள் மீண்டும், மீண்டும் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் பொழுது இந்திய அரசு தமிழகத்தின் எதிர்ப்புகளை மீறி வேகமாக செயல்பட்டது. ஆனால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரும் பொழுது பேசித் தீர்க்க வேண்டும் என இதுவரை முப்பது ஆண்டுகளை கடத்தி விட்டது.

அண்மையில் இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இரணில் விக்ரமசிங்கே அவர்கள் எல்லை கடந்து தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களை சுடுவது தங்கள் நாட்டு சட்டப்படி சரி என்று தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தாக்கப்படுவது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது இந்திய அரசு அமைதி காப்பதே இலங்கையின் அரச தலைவர்கள் இந்திய அரசை ஒரு பொருட்டாக மதிக்காது காலந்தோறும் இப்படியான கருத்துக்களை தெரிவிப்பதற்கும், மீனவர்களை தொடர்ந்து தாக்குவதற்கும் சட்டத்திற்கு புறம்பாக தடுத்துவைக்கவும் ஊக்கமளிக்கின்றது. மேலும் இரண்டு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கூறி பொறுப்பை தட்டிக் கழிக்கின்றது இந்திய அரசு.

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்கள்

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த வழக்கும் பதியாமல் சிறையில் தடுத்த வைக்கப்பட்டிருந்த நாகை மீனவர் குறித்த விபரம் தற்பொழுது வெளிவந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் காணாமல் போன தமிழ்நாடு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் எனப்படும் மீனவர் தற்போது யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து உவைக்கப்பட்டுள்ளதை சக இந்திய மீனவர்களின் மூலம் அவரது குடும்பத்தினர் அறிந்துள்ளனர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெடி பொருட்கள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாத் தனி இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்களிடம் அவர் இவ்விபரங்களைத் தெரியப்படுத்தியதன் அடிப்படையில் இத்தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவ்வாறு சிறையில் உள்ளதாகக் கருதப்படும் இந்திய மீனவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு, நாகை மாவட்டத்தின் வேதாரணியம் பூம்புகார் பகுதியில் வசித்து வருகின்றனர் என யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாகை மாவட்ட மீனவர் முருகனின் நிலையை ஆராயும் பொழுது இவர் போன்று காணமல் போன மீனவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் எத்தனை மீனவர்கள் இன்று சட்டத்திற்கு புறம்பாக எந்த தகவலும் வெளிவராது இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனரோ என்ற அச்சம் எழுகின்றது

தனது குடிமக்களை சுட்டுத்தள்ளுவது சரியே எனப் பேசும் ஒரு அரசை இன்னமும் நட்பு நாடு என்று செல்லம் கொஞ்சாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல இந்திய அரசு உடனடியாக இங்குள்ள இலங்கை தூதரை அழைத்து இவ்வாறு நீண்டகாலமாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் பட்டியலைக் கோரி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். தமிழக அரசு அதற்காக தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு அழுத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவை தமிழகமா? இலங்கையா என்பதை இந்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.
இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

About இளங்கோவன்

One comment

  1. Indian coastal guard in tamilnadu coastal area should be under the control of tamilnadu state government and it will be like traffic police for our fisherman ensuring their security and rescue operation too.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*