Home / கலை / வண்ணவண்ணக் கொலைகள் – அவனி அரவிந்தன்

வண்ணவண்ணக் கொலைகள் – அவனி அரவிந்தன்

 

 

மலையுச்சியில் இருந்து வீழும்

கதியற்ற சொற்கள்

எதிரொலித்து மறைவதைப் போல

எழுந்து அடங்குகின்றன

வதைக்கப்பட்ட உயிர்கள்

 

இன்னும் சாயம் வெளுக்காத

நீலநரியாக அலையும்

வல்லாதிக்க வானத்தின் கீழ்

வன்கொடுமைகளெல்லாம் வழமைக்குரியவை தான்

என்றாலும்

எரிந்துக் கருத்த உடல்களின்

பழுத்துக் கிழிந்த பாகங்கள்

பறையடித்துக் கதறுகின்றன

பச்சைப் படுகொலைகளை

semmarakattai

பிணத்துக்கொன்றாய் கிடக்கும்

தொல்குடிகளின் உதிரம் உண்டு

வளர்ந்த செம்மரங்களே

சூழ்ச்சியின் ஊமைச்  சாட்சியங்கள்

 

இருபது என்பது நமக்கெல்லாம்

பத்தொன்பதுக்குப் பின் வரும்

ஒரு எண் மட்டும் தானே

ஆகவே வாருங்கள் கொண்டாடுவோம்

வண்ணவண்ணக் கொலைகளை

கொஞ்சமும் கூச்சமின்றி

 

– அவனி அரவிந்தன்

About அவனி அரவிந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*