Home / சமூகம் / மூச் யாரும் பேசப்படாது—-பொன்னிலா

மூச் யாரும் பேசப்படாது—-பொன்னிலா

11102745_767117680053457_8228579895938062067_n

ஏன்னா ! கேட்டேளா ஷங்கதிய?
அவா தாலிய அகற்றாளாமே
லோகத்துல கலி முத்திடுத்துடி
பகவானே! கன்னத்துல போட்டுக்கோடி

அவாளெல்லாம் தாலிபான் தீவிரவாதிகளாக்கும்
ஏன்னா வெடிகுண்டா வீஷிட்டா?
ஜடம் ஜடம் தாலியகற்றாளே போதாதா
யாருன்னா கண்டுபிடிச்சா இந்த தாலியை?

அடி அஷடு சாக்ஷாத் பகவானேத்தான்
ராவணங்ககிட்டயிருந்து காப்பாத்த வேலி வேணுமோன்னோ?
தினமும் தீக்குளிக்க சொல்ல முடியுமாயென்ன?
நேக்கு இப்போதான் புரிஞ்சிது போங்கோ

ஆமா வேலியெதுக்குன்னா அவாயென்ன கோழியா?
சாமியை பழிக்காதடி தெய்வகுத்தம் ஆயிடும்
ஆமான்னா அந்த கழிஷடை தினத்துல
நாய் கழுத்தில கட்டினேளே தாலி
அது நம்மளவாது ஒன்னும் இல்லையே?
கெட்டது குடி அது அவாதுடி

நல்ல காரியம் பண்ணுனேள் போங்கோ
ஏன்னா விமர்சிக்காமலேயிருக்க தாலி சூனியக்கயிறாயென்ன?
கழிஷடை அது நம்மளவாவோட சம்பிரதாயமோன்னோ

படாதுன்னா படாது தான்
பேஷா புரிஞ்சுது போங்கோ
மனசோட கட்ட வேண்டியதை
கழுத்தோட கட்டி அறுப்பேள்னு…

—-பொன்னிலா

About பொன்னிலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*