Home / இனப்படுகொலை / இதுவே உன் சாவின் நீதி
unnamed

இதுவே உன் சாவின் நீதி

unnamed
செத்துக் கிடக்கும் அம்மா,
செத்த உடல் ,
செத்த மார்பு ,
செத்த பால்,
பத்தி எரியும் ஆன்மா .
அம்மா, நான் அருந்தியது 
பசி போக்கும் பாலை அல்ல.
உன் உயிரை என்னுள்
உறிஞ்சிக் கொண்டேன் 
என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க.
அம்மா ,
உன் சாவுக்கு 
யாரிடம் நீதி கேட்பேன்?
இந்நாட்டு அரசிடமா?
அண்டை அரசிடமா?
தூர அரசிடமா?
பன்னாட்டு அரசிடமா?
அம்மா,
உன் சாவுக்கு 
எந்த மொழியில் நீதி கேட்பேன் 
சிங்களத்திலா ?
தமிழிலா ?
ஆங்கிலத்திலா ?
என் மொழி 
மழலை
மழலை மொழி உணரும்
அரசும் தான் உண்டோ ?
அம்மா ,
உன் சாவுக்கு 
எந்த கடவுளிடம் நீதி கேட்பேன் 
புத்தரிடமா ?
இந்துக் கடவுளிடமா ?
கிறுத்துவக் கடவுளிடமா ?
எந்தக் கடவுளும்
உனக்கு ஈடாகுமா ?
அம்மா ,
உன்னை எவ்வாறு 
அடக்கம் செய்வேன் ?
ஊரெல்லாம் பிணக்காடாகத் தெரிகிறதே.
யாரிடம் உதவி கேட்பேன் ?
துப்பாக்கி ஏந்திய மிருகமனிதர்கள்
உன்னை தும்சம் செய்தால்
யாரிடம் உதவி கேட்பேன் ?
நான் பிறந்த பாதையையும்
என்னைப் பசியாற்றிய உறுப்பையும்
இழிவு-வக்கிரத்திற்கு உட்படுத்திய பிறகு
சுட்டெரிப்பார்களே ?
யாரிடம் உதவி கேட்பேன் ?
அம்மா ,
எனது இயலாமையை
வென்றெடுப்பேன்.
என் அறிவை ஆயுதமாக்குவேன்.
மனிதாபிமானத்தை
சுதந்திரத்தை 
சமத்துவத்தை
அரசாக்குவேன்.
இயற்கையை கடவுளாக்குவேன்
மழலையை 
அமைதியை
உலக மொழியாக்குவேன்.
இதுவே உன் சாவின் நீதி
—  வசுமதி ராஜமார்த்தாண்டன்
Print Friendly, PDF & Email

About வசுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>