Home / கலை / சாதியே கொல்லும் !

சாதியே கொல்லும் !

அது

நிகழ்ந்த பிறகு

பூமியின் சுழற்சியே

நின்று விடுமோ

காற்றின் கவலை

 

பூமியை

காவல் காக்கிற

வேலையே வேண்டாம்

உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு

ஓடியே போனது

இருட்டு

 

சாதிய வன்மம்

காணச் சகியாது

கண்களைக் குருடாக்கி

குப்புறப் படுத்தது

வெளிச்சம்

 

மனிதர்களைத்

தீண்டுவதே மகாபாவம்

சபித்து விட்டு

நச்சுப் பைகளைத்

துப்பி விட்டு

புற்றுக்குள் புகுந்தன

பாம்புகள்

 

அடச்…சீ

எச்சமிட்டுப் போயின

குருவிகள்.

 

அண்மைச் செய்திகளில்

முகம்காட்டித் திரிந்த

வாக்குப் பெட்டிகள்

அடுத்தத் தெருவுக்கு

ஆயத்தமாயின

 

gokulraj_death

 

ஊனப்படுத்தப்பட்ட

உண்மை

முனகித் தீர்ந்தது

வாய்மையே வெல்லும்

மன்னிக்கவும்

சாதியே கொல்லும்

 

சத்தியத்தைத் தேடுவது

சாத்தியமே இல்லை

பிணத்தைப்

பத்திரப்படுத்து

நீதிமன்றங்களின்

மரண ஓலம்.

 

குருதி படிந்த

தண்டவாளக் கற்கள்

கொதித்துப் போய்

குரலெழுப்பியது

காலில் பிறந்தவனை

தலையில் அடித்தே

தண்டித்த மரணமே !

தோளில் பிறந்தவனை

என்ன செய்யப் போகிறாய் !!!!

 

–பாரதிதாசன்

About பாரதிதாசன்

2 comments

  1. குருதி படிந்த
    தண்டவாளக் கற்கள்
    கொதித்துப் போய்
    குரலெழுப்பியது
    காலில் பிறந்தவனை
    தலையில் அடித்தே
    தண்டித்த மரணமே !
    தோளில் பிறந்தவனை
    என்ன செய்யப் போகிறாய்

    என்பது தவறு

    காலில் பிறந்தவர்கள் ஊருக்கு வெளியே வாழும் தாழ்த்தப்பட்ட மக்களை கொல்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*