Home / அரசியல் / மோடி ஏன் தமிழகம் வருகின்றார்?

மோடி ஏன் தமிழகம் வருகின்றார்?

ஆகஸ்ட் 7 ஐ, தேசிய கைத்தறி  தினமாக அறிவித்து,  கைத்தறி பொருட்களுக்கான கண்காட்சியையும் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்.

தன்னை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் ஒழிக்கப்படும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும், ‘அச்சே தின்’ (நல்ல நாள்) வரும், என தேசிய அளவிலும், விவசாயிகளுக்கான ஆட்சி, மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கபடுவதற்கு நிரந்தர தீர்வு என தமிழக அளவிலும் வாக்குறுதிகளை அள்ளி தந்த மோடி, இப்போது எதை செய்த பெருமையுடன் தமிழகத்துக்கு வருகிறார்.

 • ‘வியாபம்’, லலித் மோடி, போன்ற ஊழல் விவகாரங்களால் நாடாளுமன்றங்கள் முடங்கியுள்ள பெருமையுடனா ?
 • ஜி.எஸ்.டி (GST), நில அபகரிப்பு மசோதாக்களால் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கவிருக்கும் பெருமையுடனா ?
 • கார்ப்பரேட்  முதலாளிகளுக்கான ‘அச்சே தின்’ (நல்ல நாள்)  கொண்டுவந்த பெருமையுடனா ?
 • உலக நாடுகள் முழுதும் சுற்றி இந்தியாவை கூறு போட்டு விற்கும் பெருமையுடனா ?.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மக்களுக்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வரும் மோடி:

 eposter04

* தனது பதவி ஏற்பு விழாவுக்கு இனப்படுகொலையாளன் இராசபக்செவை சிறப்பு அழைப்பாளராக அழைத்தது

* ஐ.நா வில் இலங்கையை ஆதரித்தது – ஈழ விடுதலைக்கெதிராக சிங்கள அரசுடனான நட்பு பாரட்டுவது
* விவசாயிகளின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் நில அபகரிப்பு மசோதா
* தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக கர்நாடகாவின் காவேரியில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு ஆதரவு
* ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லபட்டபொழுது கள்ள மவுனம்
* தமிழக மீனவர்களுக்கு எதிரான  செயல்பாடுகள்
* கச்சத்தீவை மீட்பதற்கு எதிரான நிலைப்பாடு
* 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக செயல்படுவது
* தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது,
* சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டது

* தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவை வெகுவாக குறைத்தது.

என இன்னும் எண்ணிலடங்கா கொலைவெறி பாதகங்களை தமிழக மக்களின் மேல் வீசிக்கொண்டிருக்கும் மோடி இப்போது தனக்கும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தொடர்பில்லாதது போல கைத்தறி விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார்.

2002 குஜராத் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குத்புதீன் அன்சாரி

2002 குஜராத் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குத்புதீன் அன்சாரி

தமிழகத்தில் இதுவரை தலைதூக்க முடியாத இந்தி-இந்துத்துவ மற்றும் பா.ச‌.க வை தமிழகத்தில் நிறுவுவதற்காகவே மோடி தனது முதல் கட்ட நடவடிக்கையாக ஆண்டு தோறும் புது தில்லியில்நடைபெற்று வந்த கைத்தறி விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார். அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக மட்டுமே மோடி தமிழகத்துக்கு வருகிறார் என்று தமிழக பா.ச‌.க கூறினாலும்,  தமிழக மக்களுக்கு தெரியும் பா.ச.க‌வை வளர்ப்பதற்காகத்தான் மோடி அரசு விழாவை தமிழகத்தில் நடத்துகிறார் என்று.

மோடியும், அமித்சாவும் வரிசையாக‌ தமிழகத்தில் முகாமிடுவது இந்துத்துவ கொள்கைகளை பரப்பி கட்சியை வளர்க்கவே அன்றி தமிழக மக்களுக்கு நல்லது  செய்யும் நோக்கத்தில் அல்ல.

ஒருபுறம் இந்து மதவாதத்தைத் தூண்டிவிடுவதையும் , மறுபுறம் முதலாளிகளுக்காக ஆட்சி செய்வதையும் தனது கொள்கையாகக் கொண்ட மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் நாடு முழுக்க நடைபெற்று வரும் மதக்கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, முதலாளிகள் நலன் காக்கும் சட்டங்களும் அவசரகதியில் இயற்றப்பட்டுள்ளன.

’பெரியார் மண்’ என்று பெருமை பேசுவதோடு நில்லாமல் மோடி, அமித்சா கூட்டால் நமது தமிழ்மண்ணில் பரப்பப்படும் இந்துத்துவ நஞ்சை முளையிலேயே முறிக்கும் செயலை மக்கள் நலனுக்காக என்றும் போராடும்  திராவிட, பொதுவுடைமை, தமிழ்த்தேசிய, முற்போக்கு சனநாயக இயக்கங்கள்-ஆற்றல்கள் ஒரு கூட்டு செயற்திட்டத்துடன் செயல்படவேண்டிய தருணமிது.

—- தீபன் குமார் – இளந்தமிழகம் இயக்கம்

About தீபன் குமார்

One comment

 1. பாஜகவின் கழுகுப் பார்வை இப்போ எல்லாம் தமிழ்நாட்டை சுற்றியே இருக்கின்றது. தமிழ்நாட்டை மட்டும் வளைச்சு போட்டுட்டா, அப்புறம் நம்ம காட்டில் மழை தான் என அமித் சாவும் மோடி அண்ணாத்தேயும் ரூம் போட்டு யோசிச்சு தீயா வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

  வாக்குறுதிகள் அள்ளி வீசுறம் தமிழ்நாட்டை கோட்டையை பிடிக்கிறோம் என்ற அமித் சாவின் சூப்பர் ஐடியாவை வைத்துக் கொண்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக செம பெர்பாமன்ஸ் கொடுத்து வருகின்றனர்.

  நாம என்ன செய்றோம் ஏது செய்றோம் அப்படீங்கிறது முக்கியமில்ல, ஆனா இந்த உலகம் நம்மளை உற்றுப் பார்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கையை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் மோடி அடிக்கடி வந்து போகுமிடமாக தமிழ்நாடு மாறியிருக்கு. அடிக்கடி போனா தான் நம்ம மூஞ்சி அடிக்கடி டீவி பேப்பர் எல்லாத்திலயும் வரும், அப்பத் தான் மக்கள் நம்மளை நியாபகம் வச்சிருப்பாங்க என்பது அண்ணாத்தையின் கணக்கு.

  எப்படியோ அம்மாவோட பழைய ஊழல் கேசை தூசி தட்டி, ஒரு விக்கெட்டை எடுத்திருக்கு பாஜக. அம்மாவின் கேசில் இருந்து வெளியே விட்டா என்ன கிடைக்கும் என பேரம் பேசி, குமாரசாமியின் கணக்கு புலித்தனத்தால் அம்மாவை வெளியே விட்டாங்க. ஆனால் என்ன பேரம் நடந்தது என்பது வெளியே தெரியவில்லை. ஆனால் என்ன நடந்திருக்கு என்பதை அம்மாவின் செயல்பாடுகள் காட்டி கொடுத்துவிட்டன. அம்மா பதவியேற்ற போது அண்ணாச்சி ரஜினிகாந்தும், வடநாட்டு பாஜக அமைச்சர்களும் ஓடி வந்து கலந்து கொண்டே போதே பாபா பாபா ! என ரஜினி அண்ணாச்சியின் கணக்கு பிடிபட்டது. இதற்கிடையில் தற்போதைய ஊறுகாயாக தமிழிசையை வைத்து சூறாவளி பிரச்சாரங்கள் எல்லாம் நடந்தன.

  பாஜகவின் கணக்கு தலித் வோட்டுக்களை பெறுவது. அதற்காக திடிர் என பிறந்தது தான் அம்பேத்கார் பாசம். தலித் Vs ஆதிக்க சாதி என்ற முரணை தோற்றுவித்தது. பாஜகவின் இரண்டாம் கணக்கு ஆதிக்க சாதிகளின் வோட்டையும் பெறுவது. இறுதியில் பெரியாரை துரோகியாக்கி திராவிட அரசியலிற்கு பெரிய நாமம் போடுவது. ஏற்கனவே அம்மாச்சி அண்ணா நாமம் ! புரட்சித் தலைவர் நாமம் என பெரிய நாமம் போட்டுவிட்டார். அது போகட்டும், பாஜகவின் அரசியலே பிள்ளையையும் கிள்ளுவது தொட்டிலையும் ஆட்டுவது தான்.

  ஒரு பக்கத்தில் தமிழ் திருவள்ளுவர் ஸ்வாக ! தருண் விஜயை கிளப்பி விட்டார்கள். தமிழார்வம் மிக்க தமிழர்களுக்கு நாமத்தை அவர் போடுவார். மறு பக்கத்தில் அம்பேத்கார் பாசம், தலித்களுக்கு ஒரு நாமம். அப்புறம் ஜாதிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு குழப்பம் பண்றது மூலம் ஓபிசிக்களுக்கு பெரிய நாமம். அப்புறம் இனவாதக் கட்சிகளை தூண்டிவிட்டு தமிழர்களுக்கு ஒரு மெகா நாமம். அப்புறம் இருக்கவே இருக்கு இந்து பாசம் அதை வைத்து தமிழல்லாதவர்களின் வாக்கை வாங்குவது அவர்களுக்கு சூப்பர் நாமம். சுற்றி சுற்றி நாமம் போட்டால் தேர்தலில் கிடைக்கும் சுளையா வெங்காயம்.

  இதற்காக என்னவும் பேசலாம் எதுவும் செய்யலாம். தமிழீழம் கூட வாங்கிக் கொடுப்போம் என பீலா விடலாம். அம்மாச்சியும் இதை வச்சு தான் கடந்த இரு தேர்தலிலும் ஜெலிச்சாங்கோ.

  பாஜகவின் பருப்பு தமிழகத்தில் வேகாது, ஏன் தெரியுமா? தமிழர்கள் என்ன தான் ஜாதி, மதம், இனம் என அடிச்சிக்கிட்டாலும் கடைசி வரைக்கும் எந்தவொரு தேசிய கட்சியையும் நம்பி, அதான் சொல்வாங்களே அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாட்டம் கைவிட மாட்டங்கோ. இது தான் எப்பவும் நடக்கிறது. சரி திராவிட கட்சிகளின் கொட்டத்துக்கு அளவே இல்லையா என கேட்கிறது புரியுது? கூரையில் காக்கா எச்சம் போட்டுறச்சு என யாரும் வீட்டை காலி பண்ணிட்டு போறதில்லையே. சாணியில கால் வச்சிட்டோம் என்பதால் காலை கழற்றிப் போடுவதில்லையே. திராவிடக் கட்சிகள் நாறிக் கிடக்கிறது என்பதால் திராவிடக் கட்சிகளை தூக்கி எறிஞ்சு வேலியில போற ஓணானாக வலம் பாஜக, காங்கிரசை எல்லாம் எடுத்து வேட்டிக்குள்ளே தமிழ்நாட்டு மக்கள் விடுறது கிடையாது.

  அதிமுக-வை களைத்துவிட்டு பாஜகவில் சேர்க்க வேண்டும் இது தான் பாஜக அம்மாச்சிக்கு வச்ச முக்கிய கோரிக்கை. அப்படி நடக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வச்சு காலி பண்ணிடுவோம் என்பது தான் அவர்கள் அம்மாச்சிக்கு வச்ச பெரிய செக். ஆனா ! சீறும் பாம்பும் காயம்பட்ட புலியும் சும்மா இருக்காது, நேரம் கிடைக்கும் போது கொத்திக் கடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அது தனிக் கதை. திமுகவின் ஊழலை வச்சு அவர்களை பிராக்கட் பண்ணிட்டே இருந்தா கொஞ்ச நாளில் திமுக புஸ்வாக ஆகும் என்பது அமித் சா போட்டக் கணக்கு. அதற்காக தமிழ் பாசம் வீசும் இனவாதக் கட்சிகளை தூண்டிவிடப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.

  சரி ! தமிழ்நாட்டு மக்கள் திராவிட அரசியலின் அதிருப்தியால் பாஜகவுக்கு வோட்டு போடலாம் தானே என சிலர் கேட்கலாம். இந்த பாஜகவின் உண்மை முகம் தெரிஞ்சா இதுக்கு பதிலா வைகோ, விஜயகாந்திற்கே போடலாம் என நினைப்பீர்கள்.

  மோடி அண்ணாத்தேயின் குஜராத் மாநிலத்தின் நிலைமைகள் வெளியே சொல்லப்படுவதில்லை. அங்கே தொழில் வளருது, பாலும் தேனும் ஓடுது என்கின்றார்கள். ஆனால் அகமதாபாத் – காந்தி நகரைத் தாண்டி ஈக்களும் காக்களும் தான் ஜெகஜோதியா வாழ்றது எனலாம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தில்லை, தொழில் வாய்ப்பில்லை, கல்வியில் பின் தங்கிய நிலைமைகள், மருத்துவ வசதிகள் கிடையாது, வறுமை கோட்டுக்கு கீழே பெரும்பாலான மக்கள் தவிப்பதும் புலப்படும்.

  ஊழலுக்கு எதிராக போராடுவதாக அமித்சா வாய் கிழிய கத்துகின்றாரே. மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலால் உலகமே சிரிக்கின்றது. காசு வாங்கி கொண்டு மெடிக்கல் எஞ்சினியர் அரசு ஊழியத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் பண்ணி மிகப் பெரிய ஊழல் பண்ணியிருக்கிறது பாஜக. இதுவரை 2000 போலி டாக்டர்கள் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ளனர். இதைவிட பெரும் கொடுமை, ஊழல் கசியத் தொடங்கியதும் யாரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தார்களோ அவர்களையே போட்டுத் தள்ளியிருக்கின்றது. பாலிவுட் கிரைம் சினிமாவே தோற்கும் அளவிற்கு போகின்றது மத்திய பிரதேச பாஜகவின் நிலைமைகள்.

  ஆறே நாளில் டிகிடி வாங்கிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், செடிகளுக்கு ஒன்னுக்கு அடியுங்கோ எதுக்கு டாய்லட் என கேட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஷப்பா இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். முந்தைய ஆட்சியில் பாஜக நிகழ்த்திய சுடுகாட்டு ஊழல் முதல் லலித் மோடி ஊழல் வரையில் பாஜகவின் ஆட்டம் கண்ட நிலை.

  பாஜகவின் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாஜகவின் ராஜஸ்தான் முதலமைச்சர் செய்த ஊழல்களை இந்தி சேனல்கள் கிழி கிழி என கிழிக்கின்றன. அவை பற்றி அண்ணாத்தே மோடி வாயே திறக்கவில்லை. முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லட்சுமண், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவின் தலைவர்கள் சிலர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளையோ அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்மீது நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகளைப் பற்றியோ எவரும் வாய்திறக்கவில்லை. கிராணைட் முறைக்கேட்டை விசாரிக்க போன காவல் துறை அதிகாரியையே கிரேணால் ஏற்றிக் கொண்ட சம்பவங்களை மத்திய பிரதேச மக்கள் இன்னம் மறக்கவில்லை.

  சட்டீஸ்கர் மாநிலத் தில் சுரங்க மாபியாக்கள் ஆட்சி புரிகிறார்கள். அங்கு செல்லும் பாஜ தலைவர்கள் நாங்கள் ஊழலுக்கு எதிரான வர்கள் என்று பேசுகின்றனர். ஆனால், அங்குள்ள முதல மைச்சரைப் பற்றியோ, அமைச்சர்களைப் பற்றியோ பேசமாட்டார்கள். மத்தியப் பிரதேசத்துக்கு போவார்கள். அங்கு நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று மேடை போட்டு பேசுவார் கள். ஆனால், அங்குள்ள ஊழலை பார்க்க மாட்டார் கள். குஜராத்தில் இன்னும் சில கேபினட் அமைச்சர்கள் சிறைத் தண்டனையில் உள் ளனர். அங்கு செல்லும், பாஜ தலைவர்கள் தாங்கள் ஊழ லுக்கு எதிரானவர்கள் என்று பேசுவார்கள். பாஜவை பொறுத்தவரை அவர்கள் ஆளும் மாநிலத்தை விட்டு, மற்ற மாநிலங்களில் ஊழல் நடைபெறுவதாக பேசுவார்கள்.

  கருநாடகத்தில் ஏன் பாஜக மண் கவ்வியது. சட்ட மன்றத்தில் உட்கார்ந்து கொண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிட்டு பார்த்த விவகாரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதே அரசு இன்று இணையத்தில் ஆபாசத்தை தடை செய்ய சட்டம் கொண்டு வருகின்றது. எவ்வளவு பெரிய போலித் தனம் பாருங்கள். பிட்டு படம் பார்த்தவர்கள் இன்னமும் பாஜகவில் ஜாலியாக உலா வருகின்றனர்.

  கடந்த ஆட்சியின் போது பாஜக ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியது முதல் சாதாரண கடலை மிட்டாய் வாங்கியது வரை ஊழல் பண்ணிக் குவித்திருக்கின்றன. ஊழலைப் பொறுத்தவரை காங்கிரஸ் வேறு பாஜக வேறு என்பதாக இல்லை. இரண்டும் ஒன்றே தான். என்ன காங்கிரஸ் எல்லா சாதி மத ஆசாமிகளையும் சேர்த்துக் கொண்டு ஊழல் பண்ணும். பாஜக ஹிந்து பிராமண மற்றும் அவர்களுக்கு ஆலவட்டம் வீசும் ஆதிக்க சாதியினரை சேர்த்துக் கொண்டு ஊழல் பண்ணும் இவ்வளவு தான் வித்தியாசம்.

  தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு ஓட்டு போட விருப்பமில்லாதவர்கள் இந்த பாஜக காங்கிரஸை தவிர வேற எந்த எழவுக்கு கூட வாக்களியுங்கள். பாஜகவுக்கு வோட்டு போடுவம் ஒன்று தான் தெரிந்த ரயில் தண்டவாளத்தில் தலையை விடுவதும் ஒன்று தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*