Home / அரசியல் / புகுசிமா இன்று…..
அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக புகுசிமா முழுவதும்

புகுசிமா இன்று…..

ஒரு பக்கம் கடலும் , பசுமை நிறைந்த வயல்வெளிகளும் மற்றொரு பக்கம் தொடர் மலைக் குன்றுகளும், குன்றுகளின் மீது உயர்ந்த பசுமையான மரங்களும் என பார்ப்பவரின் மனதை எளிதில் கொள்ளை கொள்ளும் இயற்கை  எழிலுக்கு சொந்தமான ஊர்.மலைகளும் பசுமை மரங்களும் நிறைந்திருக்கும் புகுசிமா மற்றைய மாவட்டங்களைவிட வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவும் ஓர் அற்புதமான இடம்.
IMG_4568

அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக புகுசிமா முழுவதும்

ஜப்பான் வடகிழக்கு பகுதியான மியாகி மாவட்டம் இசினொமகி நகரம் மகினொஹாமா மலைகள் சூழ்ந்த கடற்கரை கிராமத்திற்கு முழுமதி அறக்கட்டளை நண்பர்களோடு சென்றபோது, புகுசிமா வழியாக  செல்வது என்று முடிவுசெய்தோம்.
புகுஷிமா அணு உலைக்கு 6 கிமீ தொலைவில் நாங்கள் சென்ற சாலை சென்றது, இந்த சாலை 2011 மார்ச் அணு உலை விபத்திற்கு பிறகு இந்த ஆண்டு(2015) மார்ச் 2ஆம் தேதியிலிருந்து மக்கள் போக்குவரத்திற்காக திறந்துவிட்டிருக்கின்றார்கள். கதிர்வீச்சு இருக்கின்ற சாலையாதலால் பெரும்பாலான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துவதில்லை, மாற்று சாலைகளில் செல்கின்றனர், இதனால் இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்லவில்லை, சாலையில் மையில்கல் வைப்பது போல ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு கதிர்வீச்சு என்ற அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றார்கள். அந்தப் பலகையில் உள்ள கதிர்வீச்சின் அளவு அதிகமாக அதிகமாக காரின் வேகமும் அதிகமெடுத்து புகுசிமா எல்லையை விரைவாக கடந்தது.
IMG_4853

அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக புகுசிமா முழுவதும்

வழி நெடுகிலும் எத்தனையோ எந்தனை அழகிய கிராமங்கள், ஏராளமான அழகிய வீடுகள். ஆனால் மனிதர்கள் யாருமற்ற வீடுகள், சந்ததி சந்ததியாக தாங்கள் வாழ்ந்த வீடுகளை, நகரத்தை விட்டு வேரடி மண்ணோடு பிடுங்கப்பட்டு இன்று வேறிடத்தில் வாழ்ந்து வருகின்றனர் அணு உலை பேரழிவினால். பலதலைமுறைகளின் கனவுகளையும் நினைவுகளையும் சுமந்த அந்த வீடுகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக  புகுசிமா முழுவதும்

அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக புகுசிமா முழுவதும்

கதிர்வீச்சில் பாதிப்படைந்த நிலங்களின் மண் உள்ளிட்ட எல்லா பொருட்களையும் எடுத்து மூட்டைமூட்டையாக வயல்கள் எங்கிலும் அடுக்கி வைத்திருக்கின்றார்கள். புகுசிமா அணு உலையைச் சுற்றியுள்ள 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இந்த அணுக்கழிவு நஞ்சு இன்று வைக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் புகுசிமா அணு உலையிலிருந்து வெளியேறும் அணுகழிவு சுமந்த நீர் பசிபிக் கடலில் கலந்து அமெரிக்க கடற்கரையை அடைந்துள்ளது. இன்று வரை அணு விபத்துக்குள்ளான மையப்பகுதியை தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப்பறக்கும் ஜப்பானால் நெருங்க முடியவில்லை.
அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக  புகுசிமா முழுவதும்

அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக புகுசிமா முழுவதும்

 அந்த மையப்பகுதிக்கு சென்று விபத்துக்குள்ளான பொருட்களை மீட்டு அணுக்கழிவு கடலிலும், கதிர்வீச்சு சுற்றுபுறத்திலும்  பரவாமல் தடுக்க பல ஆண்டுகள் ஆகும், அதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும். அணு உலையை வடிவமைத்த அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனமோ, அதனை செயல்படுத்தி வந்த டெப்கோ நிறுவனமோ இந்த செலவை செய்யப்போவதில்லை, வழமை போலவே இந்த நிறுவனங்கள் கைவிரித்து விட்டன. ஜப்பான் மக்க‌ளின் வரிப்பணத்தில் இருந்தே இன்று வரை எல்லா பணிகளும் நடந்து வருகின்றன, இனியும் அவர்களின் வரிப்பணத்தை வைத்தே செலவுகள் நடக்கும். அணு உலை வடிவமைப்பு, செயல்படுத்துவதினால் வரும் இலாபம் மட்டும் அதை இயக்கும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு,  பேரழிவினால் ஏற்பட்டதினால் உண்டாகும் பாதிப்பை சரிசெய்ய மக்கள் பணம். இதை தான் வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சூப்புவது இன்னொருத்தன் என நம்மூரில் கூறுவார்கள்.
அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக  புகுசிமா முழுவதும்

அணு உலை நஞ்சுக்கழிவுகள் மூட்டை மூட்டையாக புகுசிமா முழுவதும்

அணு உலையினால் எந்த பிரச்சனையும் இல்லை 100விழுக்காடு பாதுகாப்பானது என்று ஒளிபரப்பும் எந்த ஊடகங்களும் புகுசிமாவின் இன்றைய நிலையை நமக்கு சொல்வதில்லை, அவ்வளவு ஏன் 100 விழுக்காடு பாதுகாப்பானது என்று அப்துல் கலாமால் உறுதி கூறப்பட்ட கூடங்குளம் அணு உலையில் முதல் அலகு செயல்படத்தொடங்கியதிலிருந்து பிரச்சனை மேல் பிரச்சனை, இன்றும் கூட செயல்படாமல் தான் உள்ளது. அணு உலையை எதிர்த்து போராடியவர்களை தேச துரோகிகள் என்று கூறிய ஊடகங்களும், மக்களும் இன்று கள்ள மௌனம் காத்துவருகின்றனர்.  100 விழுக்காடு பாதுகாப்பான அணு உலையில் என்ன பிரச்சனை?  இதை யார் பணத்தில் சரி செய்கின்றார்கள்?  அணு உலையை வடிவமைத்த இரசிய நிறுவனங்கள் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய அரசும் அதன் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அணு உலை அமைப்புகளும்? இது போன்ற எந்த கேள்விக்கும் அணு உலை ஆதரிப்பவர்களிடமும், அரசிடமும் எந்த பதிலும் இல்லை. புகுசிமா பேரழிவில் இருந்து நாம் ஒன்றையும் கற்றுக்கொள்ளாமல், போராடும் மக்களையும் தேச விரோதிகள் என்று சிறையில் அடைக்கும் இந்த தமிழக, இந்திய அரசுகளால்,  நாம் புகுசிமாவில் நடந்தது போலவே ஒரு பேரழிவை எதிர்நோக்கியுள்ளோம்….
அருள் இராமலிங்கம்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*