Home / சமூகம் / இந்துத்துவம் / மோடி அரசின் முகத்தில் உமிழும் மானமிகு எழுத்தாளர்கள்

மோடி அரசின் முகத்தில் உமிழும் மானமிகு எழுத்தாளர்கள்

“டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா” என எவ்வளவு தான் ஊடகங்கள் மோடிப்புகழ் பாடினாலும், எதார்த்ததில் மோடி தலைமையிலான பா.ஜ.கவின் மதவெறி ஆட்சி முழு நிர்வாணமாய் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.காற்றுக்கு எதிர் திசையில் ஓடினாலும் அவிழ்ந்த கோமணம் அவிழ்ந்தது தான்.

கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகிய மூன்று எழுத்தாளர்களும் அறிவியல், வரலாற்றின் அடிப்படையில் கட்டுரைகள், நூல்கள் எழுதி இந்துத்துவத்தின் அடித்தளத்தை அசைத்த முற்போக்காளர்கள். தொடர்ந்து மனித உரிமைகளை வலியுறுத்தி எழுதிய தன்மானம் மிக்கவர்கள். தபோல்கர் 2013 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். கோவிந்த் பன்சாரே இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும், எம்.எம்.கல்புர்கி கடந்த ஆகஸ்ட் மாதமும் இந்துத்துவ பயங்கரவாதிகளினால் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.  மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டில், தொடரும் வன்கலவரங்களும் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளும், கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கும் சம்பவங்களும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன.

2

கடந்த மாதம் உத்திரபிரதேசம் தாத்ரியில், தன் வீட்டு குளிர் பதனப் பெட்டியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக, அஹ்லாக் என்கிற இஸ்லாமிய முதியவர், இந்துத்துவ பாசிச வெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகெங்கிலும் கண்டனக் குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன. வளர்ச்சியின் நாயகன் என ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு பிரதமரான நரேந்திர மோடியின் முகத்திரை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.

மோடி அரசின் இந்துத்துவ பாசிசப் போக்கை கண்டித்து, முதல் கல்லை வீசினார் பெண் எழுத்தாளர் நயந்தாரா செகால். கோவிந்த் பன்சாரே,தபோல்கர்,கல்புர்கி என தொடர்ந்து எழுத்தாளர்கள் கொல்லப்படுவதையும், தாத்ரி சம்பவத்தையும் கண்டித்து 1986 ஆம் ஆண்டு தனது Rich Like us நாவலுக்காக பெற்ற உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அனுப்பினார். நயந்தாரா செகாலைத் தொடர்ந்து, லலித் கலா அகாடமியின் முன்னாள் தலைவரும்,பிரபல இந்தி மொழி கவிஞரும், 22 புத்தகங்களை எழுதிய படைப்பாளியுமான அசோக் வாஜ்பேயி, தமக்களிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதினை திருப்பி அனுப்பியுள்ளார்.

12109215_984259644950819_5349161406076529681_n

தொடரும் வெறுப்புக் கொலைகளைக் கண்டித்து உருது எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ் தனக்கு வழங்கப்பட்ட மகாராஷ்டிர அரசின் உருது அகாதமி விருதை இன்று திருப்பித் தந்துள்ளார். “இனியும் மௌனமாக இருப்பதில் அர்த்தமில்லை. என் சக எழுத்தாளர்களே நீங்கள் வாங்கிய விருதுகளைத் தூக்கி எறியுங்கள்…” என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப், முக்கிய எழுத்தாளர்களான உதய் பிரகாஷ், அமன் சேத்தி மற்றும் நான்கு பஞ்சாபி எழுத்தாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதை இதே காரணங்களுக்காக தூக்கி எறிந்து இருக்கின்றனர்.

விருது பெற்றவர்கள் மட்டுமின்றி, சாகித்ய அகாதெமியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் தங்களுடைய பதவிகளை துறந்து வருகின்றனர்.”மௌனம் குற்றச் செயலுக்குத் துணைபோதல்.” எனக் கூறி நேற்று (11-ஆகத்து-2015) சாகித்ய அகாதமியின் ஆட்சிக் குழுவிலிருந்து விலகியுள்ளார் எழுத்தாளர் சஷி பாண்டே. சஷி 1990ல் தனது That Long Silence நூலுக்கு சாகித்ய அகாதமி விருதும் 2009ல் பத்மஶ்ரீ விருதும் பெற்றவர். மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக‌ தன்னுடைய சாகித்ய அகாதெமி பொறுப்பை கை விட்டிருக்கிறார். கன்னட எழுத்தாளர். அர்விந்த் மலகட்டி தன்னுடைய சாகித்ய அகாதெமி பொறுப்பை கை விட்டிருக்கிறார்.

12141574_985014918208625_1089710454980635784_n
மோடியின் குஜராத் மாநிலத்திலேயே கணேஷ் தெவி போன்ற எழுத்தாளர்களும் தங்களுடைய விருதை திருப்பி அனுப்பியிருக்கின்றனர். எழுத்தாளர்கள் மீது நேரடியாக ஒடுக்குமுறை செலுத்தும் காவி கும்பலுக்கு எதிராக, அகாதெமி திட்டவட்டமாக எந்தவொரு கண்டனத்தை பதிவு செய்யாமல், வெற்று அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்வதைக் கண்டித்தும், இந்திய நாட்டில் பரவி வரும் இந்துத்துவ பாசிச வெறியாட்டங்களுக்கு எதிராகவும் மிகப்பெரிய போர்க்கொடியை எழுத்தாளர்கள் ஏந்தியிருக்கின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களது விருதை, மோடி அரசின் முகத்தில் வீசி எறிந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.சாகித்ய அகாதெமி விருதை வாங்கியவர்களை விட திருப்பிக் கொடுத்தவர்களின் பட்டியல் அதிகமாகும் வாய்ப்பே தற்போது அதிகமாக இருக்கிறது.

தமிழ் நாட்டிலும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற அனைத்து படைப்பாளிகளும் இணைந்து இன்று ஒரு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். “மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும், மக்களின் பன்முகப் பண்பாட்டு வாழ்வின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக எழுகின்ற குரல்களையும், கருத்துக்களையும் வன்முறையால் எதிர்கொள்வதும் தொடர்ச்சியாக நிகழ்வதைக் கண்டிக்கிறோம். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

வழக்கம் போல, இந்த எழுத்தாளர்களை கொச்சைப்படுத்தி ஊடகங்களில் காவிக்கும்பல் நஞ்சைக் கக்கத் தொடங்கியிருக்கிறது. தொடக்கத்தில் ஒன்றிரண்டு பேர் விருதைத் திருப்பிக் கொடுத்த போது, அவர்களது பின்புலம் குறித்து கேலி செய்த இக்கும்பல், அணி அணியாக படைப்புலகம் திரண்டு நிற்பதைப் பார்த்து, திகைத்து நிற்கிறது. “இதற்கு முன் கலவரங்களில் எல்லாம் குரல் கொடுத்தார்களா” என்று முனகிப் பார்க்கிறது. இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வெவ்வெறு பின்புலத்தைச் சேர்ந்தவர்கள். மொழி, படைப்புலகு, தேசிய இனம் என அவர்கள் வேறு பட்டிருந்தாலும்,மதவெறிக்கு எதிராக மனித நேயத்தை, மனித உரிமைகளை வலியுறுத்துவதே இவர்களிடத்து இருக்கும் பொதுப்பண்பு. இந்த பொதுப்பண்பை காவிக்கும்பல் போகிற போக்கில் அப்படி கொச்சைப்படுத்தி விட முடியாது.

cover_story_main_20151019

எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சியாக நிற்கின்றனர். இந்திய வரலாற்றின் பல்வேறு ஒடுக்குமுறைகளின் போதும் எழுத்தாளர்கள் எதிர்வினை ஆற்றியே வந்திருக்கின்றனர். இன்று அவர்கள் மீதே நேரடியாக தாக்குதல் நடத்தப்படுகிறது. கருத்தை வெளியிடுவதற்கான‌ அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.

உலக அரங்கில் புக்கர் விருதைப் போல, இந்திய அளவில் சாகித்ய அகாதெமி விருது, படைப்பாளிகளுக்கான மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது. ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதிய தொடக்க நிலை எழுத்தாளர்கள் முதற்கொண்டு, ஆண்டுக்கு பத்து நூல்கள் வெளியிடும் பிரபல எழுத்தாளர்கள் வரை, சாகித்ய அகாதெமி கனவு காணாதவர்களே இல்லை எனலாம். எழுத்தாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இந்த வன்முறைக்கு சாகித்ய அகாதெமி ஏன் எதிர்வினை ஆற்றவில்லை என்ற கேள்வியை இவர்கள் எழுப்புவதன் மூலம், இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான போர்க்களத்தில் தளபதிகளாக முன்னணியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றனர் மானமுள்ள எழுத்தாளர்கள்.

இவர்களின் பின் அணி திரள வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்து கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் இருக்கின்றது. இந்துத்துவ பாசிச முகாம்களுக்கு எதிராக, ஒரு சிறு வாய்ப்பைக் கூட பயன்படுத்தி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது வரலாற்றுக் கடமையாக சாமான்யர்களாகிய நமக்கும் இருக்கிறது.
1968 ஆம் மெக்சிகோவின் தலைநகரான மெக்சிக்கோ சிட்டியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், வெண்கலம் வென்ற அமெரிக்க கருப்பர்களான டாம் ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகிய இருவரும் பதக்கம் பெற்ற பின், அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படும் போது, கருப்பர்களுக்கு எதிராக அமெரிக்க வெள்ளையர்கள் நிகழ்த்தும் இன ஒடுக்குமுறையை கண்டித்து தங்கள் கரங்களில் கருப்பு உறை அணிந்து கையை உயர்த்தி, தலையை தாழ்த்தி நின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக வெள்ளிப்பதக்கம் வென்ற அவுஸ்திரேலியாவின் பீட்டர் நார்மனும் தன் நெஞ்சில் மனித உரிமைப் பட்டயத்தை அணிந்து நின்றார். இம்மூவரின் இச்செய்கையைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. ஒலிம்பிக் கமிட்டி ஜான் கார்லோசையும், ஸ்மித்தையும் உடனடியாக ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற்றியது.

அவர் விளையாட்டு வீரர், அவர் இசைக்கலைஞர் அவர் ஏன் இதற்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்போருக்காக மேலே சொன்ன சம்பவம். மனித உரிமையும், ஜனநாயகமும் தான் பெரிது என்று முடிவு செய்து விட்டால், எப்படியும் எதிர்ப்பை பதிவு செய்யலாம்.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்.

புகைப்படங்கள் சில தோழர்.கருப்பு கருணாவின் முகநூலிலிருந்தும் ,  இணையத்திலிருந்தும் எடுக்கப்பட்டன. புகைப்படத்தை வடிவமைத்தவர்களுக்கு நன்றி

About அ.மு.செய்யது

2 comments

 1. சாகித்திய அகாதெமி விருதை திருப்பி கொடுத்தவர்களெல்லாம் வசதி படைத்த எழுத்தாளர்கள்.. பெரும்பகுதி எழுத்தாளர்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. விருதுகளைத் திரும்பக் கொடுப்பதெல்ல இங்கு விவாதம். ஆளுகின்ற அரசின் பாசிசப் போக்கைத் துணிவுடன் எதிர்ப்பதே இங்கு பேசு பொருளாகும். அவரவருக்கு இருக்கும் வாய்ப்புக்கு ஏற்றாற் போல் எழுத்தாளர்கள் சனநாயகத்திற்கு எழ வேண்டிய அறப் பொறுப்பு இருக்கிறது என்பதே நாம் வலியுறுத்துவதும் எதிர்பார்ப்பதும் ஆகும்.

 2. பசுவின் பிள்ளைகளே?
  கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
  ..
  ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீகாரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
  **************
  .
  பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
  .
  பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.
  .
  மேலும் அறிய……கிளிக் செய்க… >>> இங்கே <<<< படித்து சிந்தியுங்கள்

  http://pathivuthokupukal.blogspot.com/feeds/posts/default?alt=rss

Leave a Reply to UNMAIKAL Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*