Home / அரசியல் / தோழர் கோவன் கைது! அராஜகத்தின் உச்சம்!!

தோழர் கோவன் கைது! அராஜகத்தின் உச்சம்!!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் கோவன் அவர்கள் 30/10/2015 காலை 2.30 மணிக்கு தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தோழரின் கைது மிகவும்  கண்டனத்துக்குரியது. தோழர் கோவன் யார், அவர் செய்த ‘தவறு’ என்ன?

தோழர் செய்த தவறு என்ன?

தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்களில் மிக முக்கியமானது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான ‘மக்கள் அதிகாரம்’  அமைப்பினர்  நடத்தி வரும்  போராட்டங்கள். அதன் ஒரு பகுதியாக ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ மற்றும் ‘ஊத்திக் கொடுத்த உத்தமி’ என்ற பாடல்களை வெளியிட்டு வீதி நாடகமாக நடத்தி  வந்தார்கள். இந்த பாடல்களில் பல அனல் தெறிக்கும் வரிகள் உள்ளன. அவை யாவும் நிஜத்தை பிரதிபலிக்கும், மக்களுக்கு எதிரான அரசை கேள்வி கேட்கும், மக்களை சிந்திக்க வைக்கும் வைர வரிகள்.

எடுத்துக்காட்டாக – ‘சாராய ஊரலில்தான் கட்சி வளருது, உன்ன உறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது’, ‘கூட்டம் சேர்க்க சாராயம், ஒட்டு கேக்க சாராயம்’, ‘விலையில்லா பொருளாலே வாழ்க்கை விலை போகுது (டாஸ்மாக்) கடையிலே, விளக்கு அணைஞ்சு போச்சு வீட்டுல’,’இட்லி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா, பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீஸ் லட்ச ரூவா,’, ‘படிக்க விடாம ஸ்கூல மூடுறான், குடிக்க ஒயின் சாப்ப கோயிலாண்ட துறக்கறான்’. இந்த பாடல்கள் சமூக வலைதளங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. டாஸ்மாக்கை எதிர்த்து இரண்டு பாடல்கள் பாடியதுதான் தோழர் செய்த ‘தேச துரோக குற்றம்’. இந்த ‘குற்றம் ‘ செய்ததற்காகத்தான் தோழரை தேச துரோக சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.  ஆம்! இங்கு நல்லது செய்தல் குற்றம், அரசை கேள்விக் கேட்டல் குற்றம், மக்களைப் பற்றி சிந்தித்தல் குற்றம்.

11986562_896469727095925_8274508614036003307_n

 


தோழர் கோவன் மீது ‘ ஜனநாயக’ அரசு செலுத்தியிருக்கும் வன்முறையை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். இந்த தோழரின் குரல் மக்களின் குரல், நம் குரல், அரசை நடுங்க வைக்கும்  குரல், உண்மையின் குரல். இந்த குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் வரை. மதுவிற்கு எதிராக குரல் கொடுத்த தோழரை கைது செய்திருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. மேலும், தோழரை கைது செய்திருப்பதின் மூலம் கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை ஆளும் அ.தி.மு.க அரசு மிதிக்கிறது.  மேலும் இதுவரை ஜெயாவின் சர்வாதிகார ஆட்சி என்று மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தோம். தற்போது சசிகலா, இளவரசி போன்ற மிடாஸ் முதலாளிகளின் அதிகாரமும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு, தோழர் கோவன் கைது தக்க சான்றாக இருக்கிறது.

தமிழக மக்களை, உழைக்கும் வர்க்கத்தை படு குழிக்குள் தள்ளும் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்வது குற்றமா? எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், எத்தனை குடும்பங்கள் அழிந்தாலும், எத்தனை தாலிகள் அறுந்தாலும் அரசின் மௌனம் மட்டும் இன்னும் கலையவில்லை!   தொடர்ந்து போராடுவோம், அரசின் மௌனம் கலையும்வரை! மதுக் கடைகள் மூடப்படும்வரை!யார் தோழர் கோவன்?

கோவன் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல்அருகில் உள்ள பெருமங்கலம் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ITI படிப்பு முடித்துள்ள கோவனுக்கு நாட்டுப்புற பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு. ‘மக்கள் கலை இலக்கிய கழகத்தின்’ மையக் கலைக் குழு  பாடகர். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் கொப்பளிக்கும். தோழர் கோவன், உலக மயமாக்கலுக்கு எதிராகவும் தொடர்ந்து பரப்புரை செய்து வருபவர்.

 

செல்வகுமார் சுப்ரமணியம் – இளந்தமிழகம் இயக்கம்.

 

About செல்வகுமார் சுப்ரமணியம்

3 comments

  1. Bharathi Athinarayanan

    Very nicely written with details to the core and facts. Let’s hope the so called “intolerance” mania of politics will subside and they will concentrate on real problems(which I guess will be very difficult for them to do)…

  2. Good article comrade!

  3. மறத்தமிழன்

    அருமை, வாழ்த்துகள் செல்வகுமார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*