Home / கலை / என்னிலிருந்து நழுவும் கவிதை

என்னிலிருந்து நழுவும் கவிதை

கருங்கற்கள் நட்டு 

காற்றில் வேலி அமைத்தார்கள்

மீறினால்  வெட்டப்படுமென்ற 

எச்சரிக்கையோடு

நான் யாரென்று

வகுப்பெடுத்தார்கள்.
நிறம்,உயரம்,எடை 
நிர்ணயித்தார்கள்.
உணவுக்கு மட்டும்
திறந்தால் போதுமென்று
வாயடைப்பு செய்து
கட்டுக்குள் தான் அனைத்துமென
புன்னகைக்கும்போது
என்னிலிருந்து நழுவுகிறது
இந்த கவிதை!!!!
—–பாரதிதாசன் – இளந்தமிழகம் இயக்கம்
Kovan

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*