Home / அரசியல் / மூழ்கும் சென்னை, கடலூர்! அதிகார போதைக்கு இயற்கை தந்த பேரிடி!!!

மூழ்கும் சென்னை, கடலூர்! அதிகார போதைக்கு இயற்கை தந்த பேரிடி!!!

கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. ஏரிகள்,கண்மாய்கள் எல்லாம் நிரம்பி ஓடுவதற்கு இடம் இன்றி நகரையே சூறையாடிக் கொண்டிருக்கிறதுமழை நீர். சிங்காரச் சென்னை இன்று வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

 

உணவுப் பொட்டலங்கள் கிடைக்குமிடங்கள், மீட்புப் பணிக்கான அவசரத் தொடர்பு எண்கள், மீட்புஉதவி குழுக்கள், வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் வெளியேறிய மக்கள் தங்குவதற்குகதவுகளை திறந்துவிட்டு இருக்கும் இடங்களின் தகவல்கள் என நிரம்பி அலறுகிறது முகநூலும்,டிவிட்டரும்.

 

மின்சாரம் துண்டித்துப் போய், தொலைத்தொடர்பு அறுந்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டு தண்ணீரில்தத்தளிக்கும் சென்னை மக்களின் நிலை பற்றி கவலைப்படாத மனிதர் இல்லை. ஆயிரக்கணக்கானோர்சென்னையின் மழை வெள்ளம் பற்றியும், மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை எப்படிச் செய்வதுஎன்று பல்வேறு தளங்களிலும் விவாதித்து உதவிக் கொண்டிருக்கும் நிலையில், ஒன்று மட்டும் எந்தபதட்டமும் இன்றி சற்றும் பதறாமல் இருக்கிறது என்றால் அது தமிழக அரசு தான்.

 

கொட்டிக் கொண்டிருப்பது கொடநாட்டு சாரல் மழையல்ல; சென்னையை உலுக்கும் புயல் மழைஎன்று அதுக்கு யாரேனும் நினைவூட்டுவது அவசியம்.

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் ஏரிகளின் மீது கட்டப்பட்ட கல்லூரிகளும், புதிதாகநிர்மாணிக்கப்பட்ட இடங்களும் தண்ணீரில் மிதந்தது. அதற்குப் பிறகும் எந்த முன்னெச்செரிக்கைநடவடிக்கையும் எடுக்காமல் “அம்மா சரணம்” பாடுவதிலேயே மும்முரமாக இருந்த அமைச்சர்களும்,அதிகார வர்க்கமும் இன்றி இந்தப் பேரிடருக்கு யார் காரணம்?
mathiya kailash

வான்வெளி செயற்கைக்கோளில் இருந்து வரும் மழை பற்றிய தகவல்கள் கூட உடனுக்குடன்கிடைக்கும் இன்றைய சூழலில், அதிகார போதையின் உச்சாணிக் கொம்பில் உட்காந்திருக்கும்முதலமைச்சரின் உத்தரவு வருவதற்குத்தான் காலம் பிடிக்கிறது. ஒருவேளை, அமைச்சர்கள்அனைவரும் குனிந்தே நின்று கொண்டிருப்பதால் வரும் உத்தரவுகள் எங்கு விழுகின்றன என்றுஎவர்க்கும் தெரிவதில்லை போலும்.

 

தமிழகத்தின் அனைத்துத் தொலைக்காட்சிகளும் சென்னையில் மழை, பெருவெள்ளம் என்று அலறிக்கொண்டிருக்க, “முதல்வர் அம்மா புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா” என்று நீட்டி முழங்கிக்கொண்டிருந்த ஜெயா தொலைக்காட்சியின் ஒளிபரப்பை வெள்ள நீராலும் பொறுக்க முடியவில்லை.தொலைக்காட்சி ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் விலகி ஓடும்காணொளிகளை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

மாற்றுத் திறனாளிகள் போராடினால், தோழர் கோவன் அரசை எதிர்த்துப் பாடினால் உடனடியாகவிழித்துக் கொள்ளும் அரசு மக்கள் பிரச்சனைகள் என்றால் குறட்டை விட்டு தூங்கி விடுகிறது.தற்போதைய முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தசமயம் மொத்தம் அரசு நிர்வாகமும் முடக்கி வைக்கப்பட்டதும் இன்றைய நிலைக்கு காரணம்தானே!

 

ஏரிகள், கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை; பேரிடரை எப்படி கையாள்வது என்று அரசுக்குத்தெரியவில்லை; களத்தில் நின்று செயலாற்ற வேண்டிய அமைச்சர்கள் நிவாரண உதவிபுகைப்படங்களில் தெரிந்தால் போதும் என்று இருக்கிறார்கள்; மெத்தனத்தின் மொத்த உருவமாய்தமிழக அரசு ஒருபுறம், மழையினால் 180 உயிர்கள் போனால் மட்டுமே உதவிக்கு வரும் இந்திய அரசுமறுபுறம் என நடுவில் ஊசாலாடிக் கொண்டிருப்பது மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல; உயிரும்தான்.
Gobal_2629954f

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் காரணம் தமிழக, இந்தியஅரசுகள் பின்பற்றிய கொள்கைத் தோல்விகளைத்தான்.

 

* கல்வியைத் தனியாருக்கு தாரை வார்த்து ஏரிகளின் மீது  எழும்பிய பல்கலைக் கழகங்கள்

* 180 உயிர்கள் செத்து, விமான நிலையம் மூடப்பட்ட பிறகு, ஓலமிடும் இந்திய தேசிய ஊடகங்கள்.

* 8000 கோடி ரூபாய் நிவாரண உதவிக் கேட்கும் மாநிலத்திற்கு வெறும் 900 கோடி ரூபாயை மட்டும்வழங்கும் இந்திய அரசு.

* வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம் என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் முளைத்தகார்ப்பரேட் நிறுவனங்கள்

 

என அரசுகளின் கொள்கைகள் தோல்வியுற்ற இடங்களைத்தான் மழை வெள்ளம்அம்பலப்படுத்தியுள்ளது.

 

வெள்ளப் பேருக்கு ஏற்பட்ட இடங்களை பார்வையிட வரும்போதும் ” வாக்காளப் பெருமக்களே!” எனமக்களை விளிக்கும் முதல்வரின் எண்ணம் மக்களை காப்பதில் இல்லை என்பது திண்ணம்.

 

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் அள்ளி இறைக்கப்பட்ட பணத்தைச் சொல்லித்தான், 2006தேர்தலில் ஏற்படவிருந்த பெருந்தோல்வியை தவிர்த்தது அதிமுக. இன்றும் அதே உத்தியைப்பயன்படுத்தி மக்களின் உயிர்களின் மேல் அரசியல் செய்கிறார் முதல்வர் அம்மா புரட்சித் தலைவிசெல்வி. ஜெயலலிதா அவர்கள்!!!

 

“பேய் ஒன்று நாடாள்வதா?!!..பேய் ஒன்று நாடாள்வதா?!!” என்கிற தோழர் கோவனின் பாடல்வரிகளுக்கு, ” கூடவே கூடாது என்று பேரிடியால் பதில் சொல்கிறது இயற்கை”. ஆனால் இந்தஅடியின் வலி மட்டும் மக்களுக்கு என்பதுதான் பெரும் வேதனை.

கதிரவன்- இளந்தமிழகம்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*