Home / அரசியல் / விண்வெளி யாருக்கு சொந்தம்

விண்வெளி யாருக்கு சொந்தம்

 

தனது ஏகாதிபத்திய கொள்கைகளால் உலக நாடுகளை சுரண்டி சலித்து விட்ட அமெரிக்கா அடுத்ததாக விண்வெளியை சுரண்ட தயாராகி வருகிறது. சமீபத்திய நிகழ்வாக கடந்த 18ம் தேதி நாசாவின் செயல்திட்டமான Space act of 2015ஐ அதிகாரப்பூர்வமான சட்டமாக்கியுள்ளது ஒபாமா தலைமையிலான ஆளும் காங்கிரஸ். இச்சட்டம் விண்வெளியின் கோள்கள் , விண்கற்கள் உள்ளானவற்றை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தோண்டி ஆராயவும் ,அவ்வாறு எடுக்கப்பட்ட தாதுக்களை பூமிக்கு கொண்டுவந்து விற்கவும் வழிவகை செய்கிறது.

ஏற்கனவே விண்வெளி யாருக்கு சொந்தம் என்பது குறித்து உலக நாடுகளிடையே கருத்து மோதல்கள் இருக்கும் நிலையில் அமெரிக்காவின் இந்த சட்டம் உலக நாடுகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, விண்வெளியை ஆராயும் நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் Outer space treaty 1967ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது விண்வெளி சார்ந்த தாதுக்களை லாபத்திற்காக விற்பதை தடை செய்கிறது. மேலும் விண்வெளி ஆராய்ச்சி ஒட்டுமொத்த மனித குல நலன் சார்ந்தது என்பதால் விண்வெளியை மாசுபடுத்துதல் கூடாது எனவும் எடுத்துரைக்கிறது. இதன் முக்கிய உறுப்பு நாடான அமெரிக்கா இந்த விதிகளை தற்போது புறங்கையால் தள்ளியுள்ளது.

maxresdefault

எந்தவொரு முறைமையும், உலக நாடுகளின் ஒப்புதலும் இன்றி அமெரிக்க தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடவும், விண்வெளி தாதுக்களை தோண்டி எடுக்கவும் , தனியார் நிறுவனங்களின் லாப வெறியை தூண்டும் கூறுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

ஏற்கனவே உலக நாடுகளின் விண்வெளி கட்டுப்பாடுகள் தனக்கு பொருந்தாது என சொல்லிக் கொண்டு வரும் அமெரிக்கா இதன் மூலம் உலகளாவிய முறைப்படுத்துதல் இன்றி தனியார் நிறுவனங்கள் விண்வெளியை சுரண்ட வழிவகை செய்துள்ளது.

விண்வெளியில் இருந்து தான் உயிர் சுவடுகள் பூமிக்கு வந்தன என்றவொரு கோணத்தில் கூட உலக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில், அண்மை கிரகங்களையும் விண்கற்களையும் தோண்டுவதன் மூலம் அதன் உயிர்ச்சுவடுகளை நாம் எப்போதும் கண்டுபிடிக்க முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.

images

அது மட்டுமா? இதன் மூலம் கிரகங்கள் மற்றும் விண்கற்களின் ஒழுங்கு மற்றும் சமநிலை பாதிக்கப்பட்டு அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படவும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளங்களை தனது சூழ்ச்சியால் தொடர்ந்து சுரண்டி வரும் அமெரிக்கா, மனித குலத்தின் ஒட்டுமொத்த நலன் சம்பந்தபட்ட விண்வெளி ஆராய்ச்சியில் எல்லை மீறுவதின் மூலம் தனது ஏகாதிபத்தியத்தின் மற்றுமொரு கொடுங்கரத்தை நீட்டியுள்ளது.

 

சதீஷ் – இளந்தமிழகம்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

One comment

  1. அமெரிக்க அடாவடிதனம் மனித குல அழிவுக்கு காரணமாக அமைகிறது, இவை ஏகாத்திபத்திய சுரண்டலுக்கு புதிய வகை திருட்டே எனலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*