Home / அரசியல் / மீண்டெழுவதை நோக்கிய சென்னைப் பேரணி: நீதி கோரி திரள்வோம்

மீண்டெழுவதை நோக்கிய சென்னைப் பேரணி: நீதி கோரி திரள்வோம்

நிவாரணம், நீதி, நிரந்தரப் பாதுகாப்பு  என்பது ஆடம்பரக் கனவல்ல, நமது அடிப்படை உரிமை.
கடந்த நூறாண்டுகளில் இந்த சமூகம் பார்த்திராத ஒரு வெள்ளம் சென்னை நகரின் சில பகுதிகளில் வந்தது. பட்ட காலிலேயே படும் என்ற வகையில் முன்பு ’தானே’ புயல்; இப்போது மழைத் துயரம் என கடலூர்  பாதிப்புக்குஉள்ளாகியுள்ளது.
சென்னை சிறு சிறு தீவுகளாக மாறிப் போனது. செல்பேசிகளின் கோபுரங்கள் செயலிழந்து போயின. மின்சாரம் இல்லை. நவீன தொழில்நுட்பக் கருவிகள் பயனின்றி காட்சியளித்தன. அந்த அதிகாலை பொழுதில் அடையாறு கரையோரங்களில் தண்ணீர் ஆளுயரத்தைத் தாண்டிய போது அரசு இயந்திரங்கள் செயலிழந்து நின்றன. நிர்வாகம் அசைவற்றுத் திணறியது. ஆனால்,  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் துயர் மீட்புக்காகப் பம்பரமாய் சுழலத் தொடங்கினர். நமது நகரம் … எமது மக்கள்…   என்ற கூட்டு மனசாட்சிஒட்டுமொத்த மக்களையும் இயக்கியது. சாதி, மதம் கடந்து மக்கள் இயக்கமாய் நிவாரணப் பணிகள் நடந்தேறின.
“இயல்வு வாழ்க்கை திரும்பிவிட்டது” என்று சொல்லி இதைக் கடந்து போகத் துடிக்கிறது தமிழக அரசு. உறவுகளைக் கண்முன்னே சாகக் கொடுத்து, வாழ்நாள் சேமிப்புகளையும் வாழ்வாதாரத்தையும் ஒரே நாளில் அழியத் தந்ததெல்லாம் எளிதில் கடந்து போகக் கூடிய இழப்பா?
12373241_10206455320196403_8144857729576585948_n
இவற்றை ஈடுசெய்யக் கூடிய நிவாரணத்தை எப்படிப் பெறுவது?  இன்று வரை இறந்தவர்கள், காணமல் போனவர்களின் உண்மை எண்ணிக்கையை கூட வெளியிட மறுக்கும் தமிழக அரசு, ‘இயற்கைப் பேரிடர், பிரளயம்’ என்றெல்லாம் அறிக்கை விடுகின்றது.
வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சாம்பல் ஏரி ஆகியவற்றை உரிய நேரத்தில் திறக்காமல் தாமதமாகத் திறந்துவிட்டது யார் தவறு? இயற்கையின் தவறா? இல்லை, அரசின் தவறு தான்.  அப்படி என்றால் இந்த அழிவுக்கு காரணமான இந்த அரசையும், அதன் அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டாமா?
ஆளும் அரசை மட்டும் குறை சொல்லி பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்ளத் துடிக்கும் முன்னாள் ஆளுங் கட்சிகள். நீர்நிலைகள் மீது கட்டிடங்கள் கட்டிய போது ’வளர்ச்சி’ என்று இவர்கள் எல்லாம் வரவேற்கவில்லையா?  கண்மூடித்தனமான நகரமயமாக்கல், கார்பரேட் வளர்ச்சியை நடத்தி கொண்டே இப்படியொரு வெள்ளம் இன்னுமொரு முறை நேராமல் தடுக்க முடியாது.
 இவற்றையெல்லாம் நம்மால் மாற்றி அமைக்க முடியாதா?
 முடியும்…கைகட்டி இந்த அரசு வேடிக்கை பார்த்தப் போது வெள்ளப் பெருக்கில் இருந்து ஆயிரமாய் ஆயிரம் கரங்கள் ஆதரவு தர முளைத்து வர வில்லையா? அந்த கரங்கள் இணைந்தால் காட்டாற்று வெள்ளத்திற்கும் அணை போடலாம்! கார்பரேட்களுக்கு வால் பிடிக்கும் காட்டு தர்பாருக்கும்தடை போடலாம்!
ஓரணியாய் திரள்வோம்….பேரணியாய் நடப்போம்!
Rally Tamil
வெள்ளத்தால் உயிரையும், உடைமைகளையும் இழந்தவர்கள் நினைவாக… மீண்டெழுவதை நோக்கிய சென்னைப் பேரணி!நாள்: 20/12/2015 ஞாயிறு
நேரம்: மாலை 4 மணி 

தொடங்கும் இடம்: கண்ணகி சிலை, மெரினா கடற்கரை.

ஒருங்கிணைப்பு:
இளந்தமிழகம் இயக்கம் | மக்கள் விடுதலை | 9489004259 | 9940963131

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*