Home / அரசியல் / விவசாயி

விவசாயி

ஆதவன் சோம்பல் முறித்து
எழுதுவதன் முன்
துயில் துறந்து
நிலத்தில் கால் பதிப்பான்
தமிழன் இவன்..
 
மண்ணிற்கும் இவனுக்குமான
காதல்.. புரிந்து கொள்வது
எளிதல்ல அத்தனை
புனிதம்..
நல்மனிதன் இவன்..
 
செடி கொடிகளோடு
உரையாட இவனுக்கென்று
தனிமொழியுண்டு
அதோடு கவியும் பாடுவான்
கவிஞன் இவன்..
 
மண்ணுக்குள் சென்று
அதனுலகம் காணுவான்..
குழந்தை போல்
அதை தான் பேணுவான்..
தாய் இவன்..
 
நெற்கதிா் வளா்பிறை
காண நொடியும் மாறாது
திங்கள் குறித்திடுவான்..
கணிதன் இவன்..
 
கரும்போடும் கொஞ்சுவான்
எறும்போடும் கெஞ்சுவான்
முட்களுக்கும் முத்தமிடுவான்
கற்களுக்கும் கற்பித்திடுவான்
 
ஆகாயத்திலிருந்து மழையாய்
குதித்தவன்..
மண்ணிலிருந்து வேராய்
முளைத்தவன்..
இருந்தும் இவ்விரண்டை
என்றும் எதிா்நோக்கி
இவன்..
 
இவன் தான் விவசாயி..
 
ஐயா என் புகழ்பாடியது
போதும்.. என் இருள் கேள்
மீதம்..
என்றான் விவசாயி
 
நாட்டின் முதுகெலும்பு
என நம்பிக்கை
நீ வைத்தாய்..
பின் ஏன் என் முதுகெலும்பை
உடைத்து நம்பிக்கைக்கு
தீ வைத்தாய்..
ஏனோ.. நானோ விவசாயி
 
புலி புசிதாற்போல்
உணவளித்தேன்..
எலிகறி தேடியலைகிறேன்
என் பசிபோக்கிட..
ஏனோ.. நானோ விவசாயி
 
வயிறு இறுக
உணவளித்தயெனுக்கு
கழுத்தில் கயிறு
இறுக்கி பாிசு
அளித்தீா்கள்..
எங்களை அழித்தீா்கள்
ஏனோ.. நானோ விவசாயி
 
காப்பாற்றுங்கள்.. என்
பசியாற்றுங்கள்..
 
– அகிலன்
இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*