Home / கலை / கவிதை / முளைக்கட்டும் தலைமுறைகள்!

முளைக்கட்டும் தலைமுறைகள்!

நன்றாகவே நடந்தேறிவிட்டது

நடக்கக் கூடாத ஒன்று

மிகவும் நன்றாக.

மனிதர்கள்

இயல்புக்கு இசைந்து

வாழக் கற்றுக்கொண்டார்கள்

குருவிகளைத் தொலைத்த

நகரத்தில்

இருப்பை தொலைத்த

பகல் முழுதும்

பரஸ்பரங்களற்று

பக்குவத்தை

பாவிக்கத் தொடங்கிவிட்டனர்.

இரவுகள் நீள்வதேயில்லை

சுழன்றோடுகிறது

நிலா.

முளைக்க மறுக்கும்

பூ.

பிடுங்கிப் புதையும்

வேர்.

விஷம் பரவிய

காற்றில்

விக்கியே செத்தன

மரங்கள்.

வலி சுமந்த

வேர்கள்

புதுவழி படைக்கும்

விழி சுமந்த நீர்

துளியும்

புயலாகும்

நொடிகளில்.

அலறல் அடங்காத

அதிகார வாயிலில்

முழங்கி நிற்போம்

முடமானாலும்

முளைக்கட்டும்

தலைமுறைகள்!

– பாரதிதாசன்

இளந்தமிழகம் இயக்கம்

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*