Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / பள்ளிக்கரணை சதுப்பு நில பயணக் கட்டுரை

பள்ளிக்கரணை சதுப்பு நில பயணக் கட்டுரை

2010 நான் கல்லூரியில் சேருவதற்காக சென்னைக்கு முதல் முறை வந்திருந்த பொழுதுநான் சென்னையில் பார்த்து பிரமித்த சில விடயங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று.அடேங்கப்பா எவ்வளவு குப்பை என்று தான் வியந்தேன்பிறகு சில நாட்கள் கழித்து அதே பள்ளிகரணை நிலத்தை பார்த்தபோது இது ஏதோ மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டேன்ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் பள்ளிக்கரணை பகுதி ஒரு சதுப்பு நிலம் என்றும் சதுப்பு நிலம் என்றால் என்ன என்றும் தெரிந்துகொண்டேன்.

unnamed (5)

சதுப்பு நிலம் என்பது ஏரி போல நீர் தேங்கியிருக்கும் நீர்நிலையல்ல. நன்னீரும் கடலில் இருந்து உள்ளே வரும் உவர் நீரும் சேரும் குறைந்த ஆழமுடைய இடங்கள்தான் சதுப்பு நிலங்கள் ஆகின்றன.  சேறுசகதியுடன் அப்பகுதியில் உள்ள நிலப்பரப்பு காணப்படும். தண்ணீரை நீண்ட நாட்கள் தேக்கி வைத்திருக்கும் சக்தி இயற்கையாகவே இப்பகுதியில் அமைந்துள்ளது.
இதன்மூலம் மழை காலங்களில் வெள்ள அபாயத்தை தடுக்க முடியும்.  ஆக இப்படிப்பட்ட நிலங்கள் தான் பள்ளிக்கரணையில் நாம் பார்ப்பதுஆனால் இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது மிகவும் சீர்கேடான நிலையில் உள்ளதுசென்னை மாநகராட்சியால் கொட்டப்பட்டுள்ள குப்பை மலைகள் ஒருபுறமும் ரியல் எசுடேட் மொடாமுழுங்கிகளால் தொடரப்படும் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் என பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மிக மோசமான ஒரு நிலையில் உள்ளது.

unnamed (1)

இவ்வாறு சிதைவுற்று வரும் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று இளந்தமிழகம் இயக்கம் முன்னெடுத்து வரும் தொடர் பரப்புரைகளில் முதற் கட்டமாக கடந்த 13-பிப்-2016 அன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்போம் – ஏன்எதற்கு?” என்ற தலைப்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அரங்கக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. மிகவும் பயனுள்ளதாக அமைந்த அந்த கூட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கண்காட்சியும் நடத்தப்பட்டதுஅந்த புகைப்படங்களில் வாயிலாக தான் இந்த சதுப்பு நிலம் பல வகைப்பட்ட பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது என்று தெரிந்துகொண்டேன்.

unnamed

இளந்தமிழகம் இயக்கம் முன்னெடுத்து வரும் தொடர் பரப்புரைகளில் அடுத்தகட்டமாக 21-பிப்-2016 அன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பார்வையிட்டு அங்கு நிலவும் உண்மை சூழலை அறிந்துகொள்ள பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதுஅதன்படி ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில் தோழர்கள் அனைவரும் பள்ளிக்கரணை அருகில் உள்ள காமாட்சி மருத்துவமனை எதிரில் உள்ள பாலத்தின் அருகில் போக்குவரத்து காவல்துறையினரின் லீலைகளை பார்த்தபடி பயணத்தை விளக்க வரும் தோழர் சேரன் அவர்களுக்காக காத்திருந்தோம். சிறிது நேரத்தில் தோழர் சேரனும் வந்து சேர்ந்தார்.

முதலில் தான் கையில் கொண்டு வந்த பள்ளிக்கரணை வரைபடத்தை கொண்டு விளக்க தொடங்கினார்இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சில ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு பறந்து விரிந்து கிடந்தது என்றும் தற்போது எவ்வாறு மாநகராட்சியும் குடியிருப்புகளும் சதுப்பு நிலத்தை தின்றுள்ளது என்பது அப்பட்டமாக தெறிந்ததுஅதாவது சுமார் 5000ஏக்கர் வரை விரிந்திருந்த சதுப்பு நிலம் தற்போது வெரும் 500 ஏக்கராக சுருக்கப்பட்டுள்ளதுவரைபட விளக்கத்தை தொடர்ந்து சதுப்பு நிலத்தை பார்வையிட புறப்பட்டோம்.

unnamed (2)

புகைப்பட கண்காட்சியில் நான் பார்த்த பறவைகள் அனைத்தும் உண்மை தானோ அல்லது வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் போன்ற பகுதிகளில் எடுத்ததோ என்று உள்ளூர உறுத்திக்கொண்டு தான் இருந்ததுஆனால் தோழர் சேரன் அவர்கள் இது தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று அறிமுகப் படுத்தியதும் அந்த உறுத்தல் நீங்கியது.அவ்வளவு பறவைகள் அனைத்தும் நமது வாழ்விடங்களில் எதேச்சையாக பார்க்கக் கூடியவை அல்லவெளி நாடுகளில் இருந்து வலசைக்காகவும்தங்கள் நாடுகளில் அதிக பனிப்பொழிவால் இறை தேடி வரும் பறவைகள் தான்இவ்வளவு பறவைகளுக்கும் இந்த சதுப்பு நிலம் வாழ்விடமாக திகழ்கிறது.

அடுத்து அப்படியே இருசக்கர வாகனங்களை சற்று நகர்த்தி சிறிது தூரம் சென்றோம்ஒரு பெரிய செயற்கை மலை எங்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்ததுஆம் சென்னை மாநகராட்சியால் தொடர்ந்து கொட்டப்பட்டு உருவாக்கப்பட்ட குப்பை மலை தான் அதுபல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகளால் தனது இயல்புகளை மறந்து போனது சதுப்பு நிலம்இந்த குப்பை கழிவுகளை தொடர்ந்து கொட்டுவதால் அவை பாதி மக்கி பாதி மக்காமல் அந்த சதுப்பு நிலத்தை மாசு படுத்துவது மட்டுமள்ளாது அங்கு உணவு தேடும் பறவைகளுக்கும் விசமாக மாறுகிரதுஇவ்வறு குப்பைகளுக்குள் தனது உணவை தேடும் இந்த பறவைகள் பல விதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

குப்பைபறவைகளின் அவல நிலை என அடுத்த கட்டதிற்க்கு நகர்ந்தோம்ஆக்கிரமிப்புகள் தான் அவைஇங்கு எவையெல்லம் ஆக்கிரமிப்புகள் என்று தோழரை கேட்டதற்கு அவரோ நீங்கள் இங்கு பார்க்கும் அனைத்து கட்டிடங்களும் ஆக்கிரமிப்புகள் தான் என்று கூறினார்ஆம் அங்கு சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து தான் மருத்துவமனைகள்,கல்லூரிகள்ஆராய்ச்சி மையங்கள்மென்பொருள் நிறுவணங்கள்பல அடுக்குமாடி குடியிருப்புகள் என பேதமின்றி அனைத்து தரப்பினராலும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது பள்ளிக்கரணை சதுப்பு நிலம்இவ்வாறு ஆக்கிரமித்து வானுயர கட்டிவைத்துள்ள கட்டிடங்கள் போதாதென்று அடுத்த கட்ட விற்பனைக்கும் தயாராக வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தான் அவல நிலையின் உச்ச கட்டம்இங்கு தான் சென்னையில் வீட்டு மனை மலிந்த விலைக்கு கிடைக்கும் என்று தெறிந்த நம்மில் எத்தனை பேருக்கு தெறிந்திருந்த்து.

unnamed (4)

பெருமழை பெய்தால் இங்கு கட்டபட்டுள்ள வீட்டுக்குள் தான் தண்ணீர் வந்து செறும் என்றுசென்னை பெரு வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி அதிக பாதிப்பிற்குள்ளானது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒழுங்காக பராமரிக்கப் படாததால் தான்வேளச்சேரி பகுதிக்கு மேல் உள்ள சுமார் 30க்கும் மேலான ஏரிகளிலிருந்து வரும் தண்ணீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வழியாக தான் கடலை சென்றடைய வேண்டும்ஆனால் இங்கோ தண்ணீர் செல்வதற்கான ஒரு தடமும் இல்லாமல் பல அடுக்குமாடி கட்டிடங்களால் தடுப்பு சுவர் கட்டி விட்டோம்ஆனால் மழை தண்ணீருக்கு ஞாபக சக்தி அதிகம் அது முன்னால் எந்த வழியில் சென்றதோ அதே வழியில் தான் மறுபடியும் செல்லும்மறுபடியும் ஒரு வெள்ளம் வந்தால் நம்மால் தாங்க இயலுமாஇம்முறை வீடு வரை வந்த வெள்ளம் மறுபடி வருகையில் வீட்டை அடித்து தான் செல்லும்தலைக்கு மேல் வெள்ளம் போனால் சான் என்ன முழம் என்ன என்பது போல அடுத்தமுறை வெள்ளம் வந்தால் அதை பற்றி பேச கூட நாம் இருப்போமா தெறியவில்லை.

unnamed (3)

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற இயற்கை வளங்கள் பறவைகள்விலங்குகள்மனிதற்கள் என அனைவருக்குமான பொது சொத்து ஆனால் இன்றைய நிலையில் மனிதன் இந்த பூமியினை தனக்கு மட்டுமானதாக பார்க்க தொடங்கிவிட்டான்இந்த பார்வை முற்றிலும் தவறானதுஇவ்வாறே பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை வளங்கள்  அழிக்கப்பட்டால் அழியப்போவது பறவைகள்விலங்குகள்நீர் ஆதாரங்கள்எழில்மிகு தோற்றங்கள் மட்டுமல்ல நமது வருங்கால சந்ததி தான் என்பதை உணர்வோம்நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற செல்வங்களை நமது சந்ததியினருக்கும் விட்டு வைப்போம்இனியாவது இயற்கை வளங்களை பேணிப் பாதுகாப்போம்.

“இருப்பதை காப்போம்., இழந்த்தை மீட்போம்.”

 

மு.தீபன் குமார்,

இளந்தமிழகம்.

About தீபன் குமார்

One comment

  1. சிறப்பான கட்டுரை.
    இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*