Home / சமூகம் / அம்மாவும் மகளும்!
984112_10153313027346104_8694374434144844442_n

அம்மாவும் மகளும்!

” கண்ணு, அந்த ரசத்த கொஞ்சம் துழாவி விடும்மா”, என்று மகளிடம் சொல்லிவிட்டு வெண்டைக்காயை கழுவிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் அம்மா.

காயை அரியத் தொடங்குவதற்கு முன் மின்விசிறியையும், தொலைக்காட்சியையும் போட்டுவிட்டு அமர்ந்தாள்.

எதேச்சையாக சேனல்களை மாற்றிக் கொண்டிருக்கையில் தான், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணும், பெண்ணும் சில சமூக விரோதிகளால் வெட்டப்பட்ட செய்தி வந்து கொண்டிருந்தது.

” இதெல்லாம் தேவையா…பெத்தவங்க சொல்றத கேட்டு கல்யாணம் பண்ணா, இப்படி எல்லாம் ஏன் நடக்கப் போவுது”…என அங்கலாய்த்தாள் அம்மா.

” ஏம்மா…கல்யாணம் அவுங்கவுங்க இஷ்டம்…பண்ணிக்கிட்டாங்க..அதுக்காக வெட்டறது எப்படிமா சரியாகும்..” என்று சமையலறையில் இருந்தவாறே சொன்னாள் மகள்.

“பசங்களுக்கு எது நல்லது, கேட்டது-னு பெத்தவங்களுக்கு தெரியாதாடி,,,நீ ஏதோ பேச வந்துட்ட…”, இப்ப யார் அழுகறது… அந்த பொண்ணுதான பாவம் என்றாள் அம்மா.

‘பெத்த பசங்களுக்கு நல்லது, கேட்டது சொல்ற லட்சணம்தான், அவுங்க அப்பாவே ஆள வெச்சு வெட்ட சொல்லியிருக்கார்’ என்று மீனா சொல்லி முடிப்பதற்கு முன், ” ஆமாண்டி, பெத்து படிக்க வெச்சு வளர்த்துவோம், நீங்க என்ன சாதி, எவன்னு தெரியாத ஒருத்தன கட்டிக்கிட்டு போனா நாங்க ஒத்துக்கிடனுமா???” எனக் கத்தினால்….

“அப்ப வந்து உன்னோட பிரச்சினை பெத்தவங்க சொல்றதா கேட்காம கல்யாணம் பண்றது இல்ல..ஆனா சாதி மாறி, அதுவும் கீழ் சாதி பையனையோ கல்யாணம் பண்ணிக்கிறது..அப்படித்தான..” வெடுக்கென்று கேட்டாள் மீனா.

“ஆமாண்டி..ஆமா…அதனால என்ன தப்பு…நல்லது, கேட்டது-னா நாலு சாதி, சனம் வேணாமாடி”…என்று கர்ஜித்தாள் ……

“உங்க சாதி, சனத்தோட லட்சணம் எனக்கு தெரியாத…நம்ம அக்காவுக்கு சாதி பார்த்து, சாதகம் பார்த்துதான் பெரியப்பா கல்யாணம் பண்ணி வெச்சாரு..இதுக்கும் அந்த பையன் நமக்கு சொந்தம்தான்…என்னாச்சு…கல்யாணம் ஆகி மூணு மாசத்துல அவன் அக்காவ அடிச்சு விரட்டுல..” எனக் மகள் கேட்டதற்கு அம்மாவிடம் பதில் இல்லை.

984112_10153313027346104_8694374434144844442_n

“இவ்வளவு ஏன், நம்ம வீட்டுலயே அக்காவுக்கு 32 வயசாச்சு…சாதி ஒத்து வரல, சாதகம் சரி இல்ல, ஒரே தாலி கட்றவங்கதான் வேணும்-னு சொல்லி வர மாப்பிள்ளை எல்லாம் நீயும், அப்பாவும் வேண்டாம்-னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க…இதுக்கு அக்கா விரும்புன அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுருக்கலாம்” என்ற போது என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தாள் அம்மா.

“உங்க கவலை எல்லாம் அந்த பையன் நல்லவனா, அக்கா-வ நல்ல பாத்துக்குவானா அப்படிங்கறதுல இல்லாம..உங்களோட போலி சாதி கௌரவத்துல இருக்கு …அது கௌரவம் இல்லமா..ஆணவம்..அதுதான் இப்போ கொலை செய்ய வெச்சிருக்கு” என்று சொல்லியவாறே துடைப்பத்தை எடுத்து வீட்டுக் குப்பையைப் பெருக்கத் தொடங்கினாள் மகள்.

—கதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்

கேலிச்சித்திரம்- நன்றி – ஹாசிஃப்கான்

Print Friendly, PDF & Email

About கதிரவன்

One comment

  1. “இவ்வளவு ஏன், நம்ம வீட்டுலயே அக்காவுக்கு 32 வயசாச்சு…சாதி ஒத்து வரல, சாதகம் சரி இல்ல, ஒரே தாலி கட்றவங்கதான் வேணும்-னு சொல்லி வர மாப்பிள்ளை எல்லாம் நீயும், அப்பாவும் வேண்டாம்-னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க… —— Practicallity…. Sad and true

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>