Home / கலை / அலையில் உதித்த உலை
16114397_1396806703676606_1194729686454842107_n

அலையில் உதித்த உலை

என் நாட்டில்

ஒரு ஈழம் உள்ளது
ஐயோ இந்திய நாடல்ல..
என் நாடு
அது தமிழ் நாடு..

அங்கே அவர்கள்
உரிமைகள் பறிக்கபட்டன
உடமைகள் களவாடப்பட்டன
கனவுகள் புதைக்கப்பட்டன
உணர்வுகள் மட்டும் சாகுமா
உயிருள்ள வரை போகுமா
வாழ்வுரிமை தான் எங்கள்
தாகம் மா…
அந்த ஈழத்தின் பெயர் ‘கூடங்குளம்’

பெயர் தான் கூடங்குளம்… ஆனால்
அது உரிமை வற்றாக்குளம்
ஒற்றுமை தான் அவர்கள் பலம்
கடற்கரை தான் அவர்கள் களம்…
ஏனோ, அது எம் நிலம் நம் நிலம்..
கடல் அலைகள் என் வீடு தேடி வந்த நிலம்..
என் மூச்சு, வீசும் காற்றோடு கதை பேசிய நிலம்
என் தமிழ், என் நண்பன், என் காதலி
என் பள்ளி, என் கனவு இத்தனையும் நிறைந்த நிலம்..
அது என் கூடங்குளம்..

அதற்காடா வைத்தீர்கள் உலை
உங்களுக்கு தான்டா வைக்கானுங்வ மெரினால நினைவுச் சிலை
இது மறதி நோய் கொண்ட எங்கள் பிழை

அமெரிக்க ஜப்பானுக்கு கிடச்சது பூட்டு
இந்தியாவுக்கு மட்டும் வேட்டு
இரசியா பார்த்தான் ‘பார்ப்பானின்’ இந்தியா
கைவிரித்த இந்தி மாநிலங்கள்
உணர்வற்ற தமிழனை கைகாட்டியது
காபியில் சர்க்கரைக்கு மாற்றாய்
ஊழல் போட்டு குடிக்கும் வெள்ளை வேட்டிக் கரை
காட்டிய இடம் தான் இடிந்த கரை

விதைத்தான் அணு உலை
முளைத்தான் எங்கள் இதயக்குரல்
அவனே எங்கள் உதயக்குமார்

செர்னோபில், மன்னித்து விடு
உன்னைக் காப்பாற்ற முடியவில்லை
கூடங்குளம் காத்திரு, அடுத்த மெரினா நீ தான்..
ஆளும் வர்க்க ஒடுக்குமுறை உனக்குப் புதிதல்ல..
அறவழி போராட்டத்தின்
நிறைவழி எங்கள் கூடங்குளம்..நமது கூடங்குளம்..

பெட்டி பெட்டியா வாங்காதிங்க சர்
இங்கே இலவசமாகிறது கேன்சர்
போதும் டா!
நாங்களும் மனுசங்க டா!
அலங்காநல்லூருக்கு பீட்டா
கூடங்குளத்துக்கு இந்தியா…
போதும் டா! போதும் டா!
கடல நம்பி வாழுறோம்
இடைல வந்த உல-எங்க
உடல எடுக்க பாக்குது..
போதும் டா!
வீதி வந்து கைகோர்த்தோம்
வழக்கு மேல வழக்கு நீ போட்ட
சட்டப்புத்தகமே நிரம்பியது
வேற வழக்கு இருக்கானு நா கேட்டேன்..
வீதிக்கு வந்து கைக்கோர்த்தேன்..
சோற்று சங்க நீ மிதிச்சாலும்
வெற்றி சங்கு முழங்கும்
ஒரு நாள்.. அன்றே எங்கள் திருநாள்..

#அகிலன்

Print Friendly, PDF & Email

About அகிலன்

One comment

  1. சோற்று சங்க நீ மிதிச்சாலும்
    வெற்றி சங்கு முழங்கும்.. Great Words all together.. – Mapla Akila

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>