Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / எண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்

எண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்

எண்ணூர் துறைமுகத்தருகில் கப்பல் மோதலால் நடந்த எண்ணெய் கசிவை எல்லோரும் வந்து அகற்றுங்கள், தன்னார்வலர்களே வாருங்கள் என்ற பதிவுகள் அதிகம் வருகின்றன. இந்த நேரத்தில் இந்த எண்ணெய் கசிவை எப்படி அகற்ற வேண்டும், இப்பொழுது அகற்றும் முறைகளில் உள்ள ஆபத்து என்ன என்பது பற்றிய இந்த முகநூல் பதிவை விசையில் மறுவெளியீடு செய்கின்றோம். இந்த பதிவில் சொல்லப்பட்ட ஆபத்துகள் மட்டுமின்றி, இப்பொழுது நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சில நோய்களும், நீண்ட கால பாதிப்புகளும் கூட ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன…

—-விசை ஆசிரியர் குழு

—-
Oil spill in Chennai

நான் எண்ணெய்த் துறையில்(oil industry) பணிபுரிகிறேன். தற்போது அபுதாபியில் நடுக்கடலிலிருந்து இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். முக நூலிலும் இணையத்திலும் எண்ணூர் நிகழ்வைப் பற்றிய சில புகைப் படங்களைக் காண கண்டேன். அதிர்ச்சி.

பாதுகாப்புக் கையுறைகள், பாதுகாப்பு முகக்கவசம், காலணி எதுவுமில்லாமல் இளைஞர்கள் அங்கே  பணியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பாறையெண்ணெய் எனப்படும் இந்த குருடாயிலில் ஹைட்ரஜன் ச‌ல்பைடு(H2S) எனும் உயிர்க்கொல்லி விச‌வாயு கலந்திருக்கும். இது உலகத்திலேயே இரண்டாவது ஆபத்தான வாயு என வகைப்பிரிக்கப்பட்டுள்ளது. (அங்கே கசிந்துள்ள எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதா என்றெல்லாம் அறிய வழி கிடைக்கவில்லை… நடுக்கடலில் இத்தனை இணைய வசதியே அதிகம்).. அந்த ஹைட்ரஜன் ச‌ல்பைடை 100 parts per million (பத்து இலட்சத்தில் ஒரு பங்கு) சுவாசித்தாலே நிரந்தர சுவாசக் கோளாரிலிருந்து மரணம் வரை நிகழலாம். 100 parts per million என்பது 0.01% ஆகும். நான் சுவாசக் கோளோறு என்று சொன்னது மிகவும் குறைந்த எச்சரிக்கையே… நாங்கள் இந்த துறையில் சேரும் போது எங்களுக்குப் படிப்பிக்கப் படும் முதற் பாடமே இந்த விச‌வாயுவைப்பற்றி தான். உலகம் முழுதும் பல எண்ணெய் விபத்துகளில் இந்த விச‌வாயுவினால் பல்லாயிரக்கணக்கில் இறந்திருக்கிறார்கள்.
500  parts per million அதாவது 0.05 % வாயுவை ஒரு நொடி சுவாசித்தாலே உடனடி மரணம் நிச்சயம் ITS A #DEADLY_ GAS . அது போக குருடாயிலில் கார்பன் மோனாக்ஸைடு இருக்கும்.

Gulf of mexico எண்ணெய்க் கசிவைப்பற்றி அறிந்திருப்பீர்கள். அதை ஏற்படுத்திய நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் பில்லியன் கணக்கில் டாலர்களை இழப்பு நிதியாக அளிக்க வேண்டியதும் இல்லாமல் அந்தக் கசிவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்தஎண்ணூர் நிகழ்வுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் தான் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கெனவே தொழிற் முறை ஆட்களிருக்கிறார்கள்.

msid-56930887,width-130,height-97.cms

#ஆபத்துகள்
1. ஹைட்ரஜன் ச‌ல்பைடு எனப்படும் விச‌வாயு. இதற்கான முறையான வாயுச்சோதனை(gas test) எடுக்கப்பட வேண்டும்

2. தீப்பிடிப்பதற்கான வாய்ப்பு
குருடாயிலிருந்து எடுக்கப்படுவதுதான் பெட்ரோலும் டீசலும் என்றால் அதன் எரியும் திறனைப்பற்றி யோசித்துக் கொள்ளுங்கள். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையிலேயே இது மிகவும் ஆபத்தானது. இப்படி ஒரு திறந்த வெளியில் இது இன்னமும் மோசமானது. நாங்கள் வேலைக்கு மொபைல் போன் எடுத்துச் செல்லக் கூட அனுமதி கிடையாது. ஏனென்றால் ஒரு சின்ன பொறி(spark) கூட மிகப் பெரிய தீ விபத்தை ஏற்படுத்தி விடும்..

3. உடல் உபாதைகள்
சுவாசத்திலிருந்து மரபணுவையே பாதிக்கும் வகையில் விளைவுகள் இருக்கும்.

இதை அணுக குறைந்த பட்சம் நமக்கு சில பாதுகாப்புக் கவசங்கள் (PPE – Personal protective equipments) வேண்டும்.
அவை.
1. தீ பிடிக்காத முழு ஆடை ( flame retardant cover all.)
2.. பாதுகாப்புக் கையுறைகள் safety hand gloves.
3. பாதுகாப்புக் காலணிகள் safety boots.
4. முகக்கவசம்Face mask.

MT

இவை குறைந்தபட்சத் தேவை. இன்னும் சூழ்நிலைக்கேற்ப பல கவசங்கள் தேவைப்படலாம்.

இளைஞர்கள் சமூக அக்கறையில் பணி செய்ய வேண்டுமென விருப்பப்பட்டால் இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராடலாம்.. இப்படி அள்ளிப் போட அவசியமால்லை. இது மிகவும் ஆபத்தானது.
ப்ளீஸ். ITS A #DEADLY_ GAS . அது போக குருடாயிலில் கார்பன் மோனாக்ஸைடு இருக்கும்.

— ஹரீஷ் மாறன்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*