Home / கலை / ஒரு கடல்வாழியின் குரல்
dead fish pixabay

ஒரு கடல்வாழியின் குரல்

dead fish pixabay

எண்ணையில் மிதக்கும்
என்னை
காப்பதற்கு எவரும் உண்டோ

மக்களையே மக்காக்கி
வந்த அரசே..
எங்களையும் எண்ணை மக்கு
ஆக்காதே!

சர்வாதிகார அரசே!
உன் தொல்லை வேண்டாம்னு தானே
நாட்டுகுள்ள நாங்க வரல..
இப்படி எங்க வீட்ட
நாசம் செஞ்சுட்டீங்களே..

காவல்துறை!
எங்கள் குடிசைகளுக்கு
தீ மூட்டமுடியா தென்பதாலே
ஒதுங்கி கடலுக்குள்
வாழுறோம்..

அட போங்கடா!
இங்கயும் நீங்க வந்து
நாங்க இங்க சாகுறோம்!

மீன்கள் நாங்கள்
ஒரு வலையில்
பிடிபட்டால் வாடுவோம்
எங்கே என் கடல்
என தேடுவோம்

மக்கள் நீங்கள்
இரட்டை இலையில்
தாமரை முனையில்
பிடிபட்டீர்கள்..
கடல் நீரில் கலக்கிறது
என் கண்ணீர்..

beach (4)

ஐயா பன்னீர்
கடல் நீர்
பாரீர்..
அது எங்கள்
கண்ணீர்..
‘என்னைக்காவது’ மக்களை
யோசித்தது உண்டா..
எங்கள் வீட்டில் கலந்த
எண்ணையையா நினைக்க போகிறீர்கள்

கடலில் சிந்திய எண்ணை
குருதியை எப்போது
துடைக்கப்போகிறீர்கள்?

ஊரச்சுத்தி வந்துபோக
நாங்க மோடியில்ல
இந்த கடல சுத்தியே
ஓடி விளையாடும்
நீர் உயிர்..

சர்வாதிகார அரசே!
வாழ வேண்டிய நாங்க
வாளியில தான் சாகனுமா..
இன்னும் கொஞ்சம் நீந்தனும்
கடல சுத்தி பாடனும்
அலையில் எழுந்து ஆடனும்
சர்வாதிகார அரசே
வாளி அரசே!
வாழ விடு!

-அகிலன்

Print Friendly, PDF & Email

About அகிலன்

One comment

  1. மக்கள் நீங்கள்
    இரட்டை இலையில்
    தாமரை முனையில்
    பிடிபட்டீர்கள்..
    கடல் நீரில் கலக்கிறது
    என் கண்ணீர்

    Fantastic Lines Mapla @Akilan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>