Home / அரசியல் / ஜெ, சசிகலா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்?
சசிகலாவிற்கு ஆறுதல் சொல்லும் மோடி

ஜெ, சசிகலா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்?

                              அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களால் பிப்ரவரி 5ஆம் தேதி சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 6ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள செய்திகளே. இந்நிலையில் வரவிருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி  இருக்கும் எனப் பார்ப்போம்.

சசிகலாவிற்கு ஆறுதல் சொல்லும் மோடி

சசிகலாவிற்கு ஆறுதல் சொல்லும் மோடி

 

சொத்து குவிப்பு வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட முதலாமவர் (Accused No.1)  ஜெயலலிதா இறந்து விட்டார், அதனால் வழக்கில் இருந்து அவரை நீக்கக்கோரும் மனுவை இந்த வழக்கை கையாளும் வழக்கறிஞர். ஆச்சார்யா இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலாமவரான‌ ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் அரச மரியாதையோடும்,  அவரது உடல் இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க நடைபெற்றது.

“காலம் தாழ்த்தப்பட்டு வழங்கப்படும் நீதி அநீதிக்குச் சமமானது”

                                              சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தாலும், அவரையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களான(Accused No.2,3,4,5) சசிகலா, திவாகரன், இளவரசி உள்ளிட்டோர் உயிரோடிருக்கின்றார்கள். வரப்போகும் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூன்று வகையாக இருக்கலாம் என்பது என் கணிப்பு.

1) சசிகலா, இளவரசி, திவாகரன் உள்ளிட்ட அனைவரும் சொத்து குவிப்பு செய்தது உண்மை தான் என நீதிபதி.குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளிக்கலாம்.

2) சசிகலா, இளவரசி, திவாகரன் உள்ளிட்ட அனைவரும் சொத்து குவிப்பு செய்தது உண்மையல்ல என நீதிபதி.குமாரசாமி அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளிக்கலாம்.

3) இப்பொழுது விடுவிப்பது போல விடுவித்து பின்னாள் அவர்கள் மேல் வழக்கு தொடருவது போல ஒரு புள்ளியை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம்.

indian-justice

                           இதில் எந்த தீர்ப்பு வரவிருக்கின்றது என்பதை மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதிய சனதா கட்சியுடன் சசிகலா தரப்பு செய்து கொள்ளப்போகும் உடன்படிக்கையின் அடிப்படையிலும், சசிகலா தரப்பை மோடி ஏற்றுக்கொள்கின்றாரா என்பதன் அடிப்படையிலும் தான் அமையும்.

                                         என்ன மோடியுடன் ஏற்படும் உடன்படிக்கையை வைத்து தான் தீர்ப்பு கொடுப்பார்களா? அப்படி என்றால் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்க மாட்டார்களா? நீதி செத்து விட்டதா? என யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.  இதே வழக்கில் நீதிபதி.குமாரசாமி கொடுத்த தீர்ப்பு  ” மோடி அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளிக்கும்” என்று ஜெயலலிதா பாரதிய சனதா கட்சியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி தான் வந்தது என்பதை நினைவு கூறுகின்றேன்.

கொலை குற்றவாளி சல்மானுடன் மோடி. மோடி முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.

கொலை குற்றவாளி சல்மானுடன் மோடி. மோடி முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.

                       சாலையோரம் நடைமேடையில் படுத்திருந்த மக்களின் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் இருந்தும், அரிய விலங்கினமான கருப்பு மானை வேட்டையாடிய வழக்கில் இருந்தும் சல்மான் கான் விடுதலையானதும், அதற்கு முன்பே அவர் மோடியை ஆதரித்ததையும் நினைவு கூறுங்கள்.  1990 மும்பை வன்முறை வழக்கில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனையளிக்கப்பட்டவர் நடிகர்.சஞ்சய் தத். அவர் சிறையில் இருந்த நாட்களை விட வெளியில் வந்து படங்களில் நடித்ததும், நடன விடுதிகளில் சென்று கூத்தடித்த நாட்களும் தான் அதிகம், இந்த இலட்சணத்தில் அவரது நன்னடத்தையை பாராட்டி தண்டனைக் காலத்தை குறைத்து விடுதலையும் வழங்கிவிட்டது மகாராஷ்ட்ரா அரசு. மகாராஷ்ட்ராவை ஆள்வது பட்னவிஸ் தலைமையிலான பாரதிய சனதா கட்சி என்பதையும் இங்கே நீங்கள் நினைவில் கொள்க.

                                                   சட்டத்தின் முன் அனைவரும் சமம்*
                                                   * – நிபந்தனைகளுக்கு  உட்பட்டது.

                      இங்கே ஆளும் அரசியல்வாதிகளுக்கும், பெரிய நடிகர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் சட்டம் வளைந்து கொடுக்கும் தன்மையை கொண்டிருக்கும். அதே தவறை ஒரு அடித்தட்டைச் சேர்ந்தவரோ, பட்டியலினத்தைச் சேர்ந்தவரோ, சிறுபான்மையினரோ செய்து விட்டால் அவ்வளவு தான் சட்டம் நேராக நின்று கடுமையான தண்டனையை அளிக்கும்.  மக்களுக்கான அரசு அமைந்தால் தான் எல்லா மக்களுக்கும் சமமான நீதி என்பது கிடைக்கும். அதுவரை பின்வரும் வாக்கியத்தில் உள்ளது தான் நம் நாட்டில் நடைமுறையாக இருக்கும்.

” பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள்,  சட்டம் ஏழைகளை ஆள்கின்றது. ”


—- நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*