Home / கலை / நீட் – NEA(E)T
Neat Exam

நீட் – NEA(E)T

Neat Exam

 

நீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்!

உடம்பில்

ஒட்டுத்துணிகூட இல்லாமல்

நீட்டாகச் செல்லுங்கள்!!

 

உள்ளாடையை மட்டுமல்ல

உள்ள ஆடைகள்

அத்துணையும் கழட்டச் சொன்னாலும்

பரவாயில்லை!

நமக்கு,

மானத்தைவிட

மதிப்பெண்கள் முக்கியம்!

 

ஏன்? எதற்கு?

என்று

கேள்வி கேட்க

நமக்கு

எள்ளளவும் தைரியம் இல்லை

படித்துவைத்த பதில்கள் மறப்பதற்குள்

தேர்வெழுத வேண்டும்

 

இனமானம் போனால் என்ன

நாளைய

வருமானம் மிக முக்கியம்

 

ஆதலால்….

 

நீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்!

உடம்பில்

ஒட்டுத்துணிகூட இல்லாமல்

நீட்டாகச் செல்லுங்கள்!!

 

—— தஞ்சாவூரான். துபை

 

Print Friendly, PDF & Email

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>