Home / ஈழம் / இறுதி நிலம்

இறுதி நிலம்

உலகின் மோசமான

புகைப்படங்களை பார்த்தாகிவிட்டது.

அது போலவே

யோசிக்கவே முடியாத

அந்த கொடுரமான‌ செய்தியையும்.

 

சொல்லப்பட்ட

எந்த பாடங்களிலும்,

இது இல்லை.

இத்தனை ரத்தமும், சதையும்.

அவமானமும், துக்கமும்.

 

அந்த பச்சிளங்குழந்தையின் அழுகை

எப்படி முடித்து வைக்கப்பட்டதென்று தெரியும்.

அதுபோலவே அந்த போராளியின் குரலும்

unnamed

தாயக கனவில் ஒளிர்ந்தவனின் கண்கள்

அவமானத்தில் தூக்கிட்டுக் கொண்டன‌.

அவர்களது துண்டு நிலமும்,

உடையும் பிடுங்கப்பட்ட பின்

அவர்களது உடல்களே வீழ்ந்த மண்ணாயின.

 

சொல்ல கோடிக்கதைகள் உண்டு

ஆனால் கேட்க எதுவும் உகந்ததில்லை.

நாம் படித்த நியாயங்கள்

தர்மங்கள் எங்கு நின்றன

என நமக்கு தெரியும்.

 

தண்டனை நிலத்தில்

அதிகாரம் தான் நினைத்த‌தை நடத்த‌

பழி சுமந்தலையும் மிருக‌ம் நாம்

 

-வெ.தனஞ்செயன் – இளந்தமிழகம் இயக்கம்

About தனஞ்செயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*