Home / கலை / கவிதை / அந்த மூன்று நாட்கள்

அந்த மூன்று நாட்கள்

அந்த மூன்று நாட்கள்

இனி அந்த மூன்று நாட்களில்

உன்னை தொடமாட்டேன்

எல்லோருக்கும் மூன்று நாட்கள்

உனக்கு ஐந்து நாட்கள்

இனி அந்த மூன்று நாட்களில்

உன் அடிவயிற்று பகுதியில் இதமாக

கைவைத்து கொள்வேன்

கைகளில் காமம் பாய்ச்சாமல்

பார்த்துகொள்வேன்

உன் அணையாடைகளை (Sanitary Napkin)

நானே உன் கைபையில் மறவாமல்

எடுத்துவைப்பேன்

அது “தூமை” அல்ல “தூய்மை”

என்று புரிந்துகொள்வேன்

‬ ●

இனி அந்த மூன்று நாட்களில்

உன் நீண்ட மார்பு காம்பை

என் புருவமத்தியில் உருட்டி

யோகா செய்யமாட்டேன்

உன் அபரிமிதமான எரிச்சலை

புத்தனை போல்

உட்கிரக்கித்து கொள்வேன்

எந்த சலனமும் இல்லாமல்

உன் காமத்தை கிளப்பிவிடும்

முத்தத்தை வழங்கமாட்டேன்

என் உள்ளங்கைக்குள் அடங்கும்

உன் வலதுகையை

பாதுகாத்து கொண்டிருப்பேன்

shutterstock_92960689-500x210

உன் உள்ளாடைகளில்

சிதறிய இரத்த துளிகளை

அலச கற்றுகொள்வேன்

உன்னிடம் அதிகம் பேச மாட்டேன்

கண்ணை வைத்தே

கட்டுரை எழுத பயிற்சிஎடுப்பேன்

‬ ●

உன் சிறுநீர் அடக்குமுறை சட்டத்தை

தளர்த்த போராடுவேன்

எல்லா பெண் ஓய்வறைகளிலும்

அணையாடைகளை அப்புறப்படுத்தவும்

புதியதை பொறுத்திகொள்ளவும்

இயந்திரம் அமைக்க ஏற்பாடு

செய்ய சொல்வேன்

‬ ●

இனி அந்த மூன்று நாட்களில்

என் மேதாவி தனங்களை

உன்மீது புகுத்த மாட்டேன்

ஒரு குழந்தையைபோல்

உனக்கான தேவைகளை

நிவர்த்தி செய்வேன்

இனி அந்த மூன்று நாட்களில்

ஒவ்வொரு முறை

நீ கோபப்படும்போதும்

உன்னை தூக்கி சுழற்றி

மெத்தையில் கிடத்துவேன்

இனி அந்த மூன்று நாட்களில்

ஐந்து முறை உனக்கு

அலைபேசியில்

அழைத்து பேசுவேன்

இனி அந்த மூன்று நாட்களுக்கு

உன்னிடம் சொல்வதற்கென்றே

கவிதைகளை

தயார்செய்து வைத்திருப்பேன்.

— ரா.சங்கர்

About இரா.சங்கர்

One comment

  1. மாசிலா

    வாவ்!

    சங்கர், என்ன ஆச்சு உங்களுக்கு?
    உண்மைய சொல்லுங்க.
    நீங்க லூசுதானே?

    சிரிப்பாகவும் இருக்கிறது. புதிதாகவும் இருக்கிறது. நூதனமாகவும் இருக்கிறது.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>