Home / FITE சங்கம் / தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை

செய்தி அறிக்கை

2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T . Employees என்கிற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காக்னிசண்ட் நிறுவனம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு எதிரான பரப்புரையை தோழமை இயக்கங்களான NDLF – IT Wing மற்றும் KPF அவர்களுடன் இணைந்து தொடங்கினோம். வழமைப் போல நடக்கும் ஆட்குறைப்பு என்று கூறிக் கொண்டு காக்னிசண்ட் தொடங்கி விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி, இன்போசிஸ், சின்டெல், வோடாபோன் என அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கின.

இந்திய அளவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, நொய்டா, கொல்கத்தா, கோயம்புத்தூர்  என அனைத்து நகரங்களிலும் பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர்களை அணிதிரட்டி சட்டப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். அதனடிப்படையில், பல்வேறு நகரங்களின் தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் பணி நீக்கங்களுக்கு எதிராக, தொழிற் தகராறு சட்டம் (2A அல்லது 2K ) பிரிவுகளில் இதுவரை 85 ஐ.டி ஊழியர்கள், FITE மன்றத்தின் உதவியுடன் அந்தந்த நிறுவங்களின் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

வழக்கு பதிந்த விபரங்கள் பின்வருமாறு,

நகரம்பணிநீக்கம் செய்த நிறுவனம்புகார் அளித்த ஊழியர்கள் எண்ணிக்கை
சென்னைகாக்னிசண்ட்11
ஹைதராபாத்காக்னிசண்ட், டெக் மஹிந்திரா13
புனேகாக்னிசண்ட், விப்ரோ, வோடபோன், சின்டெல், டெக் மஹிந்திரா47
பெங்களூருடெக் மஹிந்திரா, விப்ரோ9
நொய்டாகாக்னிசண்ட்2
மும்பை2
தானே –1

இந்தியாவில் உள்ள நீதி  அமைப்புகளில் ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்பது மிக அதிகம் என்ற உண்மை அறிந்தும் இதுவரை 85 ஊழியர்கள் தொழிலாளர் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பது, ஐ.டி துறை ஊழியர்கள் சந்தித்து வரும் பணி நீக்க சிக்கலின் தீவிரத் தன்மையை உணர்த்துவதாக உள்ளது.

ஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக பல ஆண்டுகள் (9 முதல் 15 ஆண்டுகள்)  பணி புரிந்த ஊழியர்களை திறனற்றவர்கள் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வருகின்றன வேலை நீக்கம் செய்யும் நிறுவனங்கள். இவ்வாறான சிக்கலான சூழலில், ஐ.டி ஊழியர்கள் பற்றிய செய்தியும், அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் உலக அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துகின்றோம்.

பணி நீக்க சிக்கல்கள், ஊழியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்கால பற்றிய ஐயம், வழக்கு/தொழிலாளர் அமைப்புகள் என்று வந்தால் தங்களை அனைத்து நிறுவனங்களும் புறக்கணித்துவிடும் எனும் நாஸ்காம் குறித்த பயம், வங்கி கடன்கள், F.I.T.E அமைப்பிற்காக தங்களது நேரத்தை ஒதுக்கி வேலை செய்பவர்களும் ஐ.டி ஊழியர்கள் என்ற அனைத்து சிக்கல்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்துக் கொண்டேதான் F.I.T.E  இயங்கி வருகிறது.

தொழிலாளர் அமைப்புகளை நோக்கி செல்லும் ஊழியர்களுக்கு வேலை கிடைக்காது” என்று நேரடியாக நிறுவனங்கள் சார்பாக மிரட்டும் மோகன்தாஸ் பய் போன்றவர்கள் ஒருபுறம் என்றால், நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு FITE அமைப்பையும், அதன் பெயரையும் பயன்படுத்தி வரும் கயவர்கள் மறுபுறமாக இக்கட்டான சூழலிலும் ஐ.டி ஊழியர்கள் என்று வரும்பட்சத்தில் எந்த சமரசத்திற்கும் இடமின்றி செயலாற்றி வருகின்றோம். அதன் விளைவுகள்தான், ஐ.டி ஊழியர்களை அணிதிரட்டி இந்திய அளவு FITE அமைப்பின் பெயரில் பதியப்பட்டுள்ள வழக்குகள்.

 index1

F.I.T.E எனும் பெயரை பயன்படுத்தி சிபிஎம்எல் – மக்கள் விடுதலையின் தொழிற்சங்க மையமான சனநாயக தொழிற்சங்க மையம் (DTUC) சென்னையில்  நடத்தும் ஜூன் 17 , 18 தேதிகளில் நடக்கும் கருத்தரங்கத்திற்கும் F.I.T.E அமைப்புக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐ.டி ஊழியர்கள் வழக்கு மன்றம் நோக்கி வருவது சாத்தியமேயில்லை என்றிருந்த காலத்தை மாற்றி, தங்களுடைய உரிமைகளை காத்துக் கொள்ள சட்டம் போராட்டம் நடத்த ஒருங்கிணைப்பதோடு, ஐ.டி துறையில் தொழிற்சங்கங்களை பதிவு செய்யும் பணியையும் F.I.T.E செய்து வருகிறது.

தொழிற்சங்கங்களில் இணைபவர்களை நிறுவனங்கள் சார்ந்து மிரட்டும் திரு மோகன்தாஸ் பய் அவர்களை கண்டிப்பதோடு, F.I.T.E அமைப்பை திருட்டுத்தனமாக பதிவு செய்ய முயன்றதையும், அமைப்பின் பெயரில் போலியாக இணையதளம், மின்னஞ்சல் முகவரி, அலுவலகத்தை கைப்பற்றி வைத்து இருக்கும்  சிபிஎம்எல் – மக்கள் விடுதலை கட்சியினரையும் (CPML – People Liberation, Tamil Nadu) அதன் தொழிற்சங்க மையமான சனநாயக தொழிற்சங்க மையம் (DTUC) செயலையும்  வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அமெரிக்க விசா கொள்கைகளில் ஏற்பட்டு உள்ள மாற்றம், வளர்ந்து வரும் தானியங்கி (Automation) துறை ஆகிய சிக்கல்களை ஐ.டி துறை சந்தித்து வரும் இந்த வேளையில், அதையே காரணமாக்கி லாபத்தை தக்க வைக்க நடக்கும் ஆட்குறைப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற நாஸ்காம் என்ற அமைப்பை வைத்திருக்கின்றன. அதே போன்று, ஐ.டி ஊழியர்கள் தங்களது உரிமையை கேட்டுப் பெறவும், பாதுகாத்துக் கொள்ளவும், பிற பிரச்சனைகளை நிறுவனங்களிடம் பேசி தீர்த்து கொள்ளவும் ஊழியர்கள் அமைப்புகள் தேவை என்பது இயல்பு இதுவே மற்ற துறைகளில் இருக்கும் நடைமுறையும், இது ஐ.டி துறையின் வளர்ச்சிக்கு இடையூறு என்று நிறுவனங்கள் சார்ந்து கூறப்படுவதை மறுக்கின்றோம்.

நிறுவனங்களும், ஊழியர்களும் இணைந்துதான் ஐ.டி துறை இன்று எதிர் கொண்டு வரும் சிக்கல்களை எதிர் கொள்ள முடியும் என்று FITE உறுதியாக நம்புகிறது. பணிநீக்கங்கள் தற்காலிக லாபத்தை உயர்த்தலாமே தவிர, எதிர்காலத்தில் ஐ.டி துறை நோக்கி வர வேண்டும் என்று எண்ணும் இளைஞர்களின் கனவைப் பொசுக்கிவிடும் என்பதை நிறுவனங்களும், அரசுகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்திய மத்திய அரசும், மாநில அரசுகளும் உடனே தலையிட்டு ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தடுத்திட கோருகிறோம் வேலை இழப்பிற்கு தள்ளப்படும் நபர்கள் தனி நபர்கள் அல்ல என்றும் அவர்கள் ஒவ்வொரு  குடும்பம் என்பதை நினைவு கொள்வோம். அதோடு, எங்களுடைய செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் தோழமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், ஊடகங்கள் ஆகிய அனைவருக்கும் FITE – அமைப்பு சார்பில் நன்றிகளை தெரிவித்திக் கொள்கிறோம்.

ஆதரவு தெரிவித்து உள்ள  தொழிற்சங்கங்கள்: –

All India Bank Officers Confederation

Lok Raj Sangathan

Kamgar Ekta Committee

Air India Service Engineers’ Association,

All India Bank Employees’ Association,

All India Guards’ Council,

All India Loco Running Staff Association,

All India Station Masters Association,

Ladaku Garment Mazdoor Sangh,

Mumbai Municipal Mazdoor Union,

Western Railway Motormen’s Association

http://fite.org.in/2017/03/23/fite-announcement/

http://fite.org.in/2017/05/31/fite-announcement-2/

http://www.ilanthamizhagam.com/2017/06/01/cpml-peopleliberation-hijack-fite/

http://www.ilanthamizhagam.com/2017/02/06/ytm-removed-cpml-partymembers/

http://www.ilanthamizhagam.com/2017/01/14/new-coordintation-team-for-ilanthamizhagam-movement/

http://fite.org.in/2017/05/25/f-i-t-e-thanks-all-india-bank-officers-confederation/

http://fite.org.in/2017/06/06/lok-raj-sangathan-kamgar-ekta-committee-various-trade-unions-condemn-attacks-on-jobs-of-it-sector-workers/

நன்றி,

வினோத் ஏ ஜெ

பொதுச்செயலாளர்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*