Home / கலை / மயிரே போச்சு
unnamed

மயிரே போச்சு

தலைவாரி clip போட
தேவையில்லை
தலைமேலே hair bandக்கும்
இனி
வேலையில்லை.

எண்ணெய் கொஞ்சம்.
Shampoo  கொஞ்சம்.
எடுத்து முடியும் வேலை
மிச்சம்.

தலைக்கு குளிப்பது
பெரும் வேலையல்ல,
சுலபமான இன்பம்.

கனவு நினைவாவது
மகிழ்வது.
கனவுக்குள் வரமுடியாதது
நனவாகும் போது
எப்படி மகிழ்வது.

தினம்தினம் பிறப்பது
சாத்தியம் தான்.

கண்ணாடி முன்
இன்றுமொரு
புத்தம்புதிய நான்.

என்னையும்,
என் கூந்தல்
நீளத்தையும்
பார்த்து பார்த்து
சிரிக்கிறேன்
வியக்கிறேன்.

எக்கசக்கமாக
ரசிக்கிறேன்.

இந்த கத்திரிக்குத் தான்
எத்தனை கருணை
ஒரே நிமிடத்தில்
வெட்டி எடுத்தது
இத்தனை நாள்
வலிகளை.

— வசுமதி

About வசுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>