விரல் ‘நீட்’டி
தெர்மாமீட்டர் பிடிக்க வேண்டியவள்
கையாலாகாத நம் பொருட்டு
கை ‘நீட்’டி
மரணத்தைப் பிடித்துக் கொண்டாள்
இது தனிச்சாவு அல்ல
கனவுகளைக் காசு கொடுத்து
வாங்க முடியாதவர்கள்
குறைந்தபட்சம்
கனவை மட்டுமாவது
கொன்றே வாழ்கிறார்கள்
ஏதாவது நடந்து விடாதா என்று
எதுவும் செய்யாமல்
வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்
வீட்டில் இழவு விழாதவரை
வஞ்சனைகளுக்குப் பழகிப் பழகி
வற்றிப்போனது கண்ணீரும்
தமிழ்ப்பலி கேட்கும்
டெல்லியில் இருக்கும் சாமிக்கு
இன்னும் எத்தனை காவு வேணும் ?
வீழும் இனம் மீண்டெழ
இன்னும் எத்தனை சாவு வேணும் ?
தெர்மாமீட்டர் பிடிக்க வேண்டியவள்
கையாலாகாத நம் பொருட்டு
கை ‘நீட்’டி
மரணத்தைப் பிடித்துக் கொண்டாள்
இது தனிச்சாவு அல்ல
கனவுகளைக் காசு கொடுத்து
வாங்க முடியாதவர்கள்
குறைந்தபட்சம்
கனவை மட்டுமாவது
கொன்றே வாழ்கிறார்கள்
ஏதாவது நடந்து விடாதா என்று
எதுவும் செய்யாமல்
வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்
வீட்டில் இழவு விழாதவரை
வஞ்சனைகளுக்குப் பழகிப் பழகி
வற்றிப்போனது கண்ணீரும்
தமிழ்ப்பலி கேட்கும்
டெல்லியில் இருக்கும் சாமிக்கு
இன்னும் எத்தனை காவு வேணும் ?
வீழும் இனம் மீண்டெழ
இன்னும் எத்தனை சாவு வேணும் ?

எப்போது வரும் உங்கள் புரட்சி ?
— அரவிந்தன் – இளந்தமிழகம் இயக்கம்