Home / அரசியல் / தோழர். திருமாவளவனும் – காவிமயமாகும் ஊடகங்களும்.
maxresdefault

தோழர். திருமாவளவனும் – காவிமயமாகும் ஊடகங்களும்.

டிசம்பர் 6 அண்ணல்.அம்பேத்கர் நினைவு நாள், இந்துத்துவ வெறியர்களால்  பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.  அன்று பெரம்பூர் பொது கூட்டத்தில் தோழர்.திருமாவளவன் அவர்கள் பேசும் பொழுது “சங்க பரிவாரங்கள் (காவி வெறியர்கள்)  இராமர் கோயிலை இடித்துத் தான் பாபர் மசூதி  கட்டப்பட்டுள்ளது, அதனால் தான் மசூதியை இப்பொழுது (400 ஆண்டுகளுக்கு பிறகு) இடித்துவிட்டு இராமர் கோயில் கட்டப்போகிறோம் என சொல்வதை ஒப்புக்கொண்டு ஒரு வாதத்திற்காக நான் சொல்கிறேன், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான‌ சிவன், பெருமாள் கோயில்களும் பௌத்த, சமண ஆலயங்களை இடித்து தான் கட்டப்பட்டுள்ளன, அவற்றை இடித்து விட்டு மீண்டும் பௌத்த, சமண ஆலயங்களை கட்டுவோமா? என அவர் பேசினார்(1).

இதில் அவர் பேசிய கடைசி வரியை மட்டும் தனியாக கத்தரித்து திருமாவளனவன் அவர்கள் இந்து கோயில்களை இடித்து விட்டு பௌத்த கோயில்கள் கட்ட சொல்கின்றார் என கலவரத்தை தூண்டும் வகையில் பாலிமர் செய்தி தொலைகாட்சி ஒரு செய்தி வெளியிட்டது (2).

ஒரு செய்தியை, செய்தி தொலைகாட்சி நிறுவனம் வெளியிடும் பொழுது முழு செய்தியையும் வெளியிட வேண்டும்.  ஒரு வரியை மட்டும் கத்தரித்து வெளியிட்டால் அது ஊடக அறத்தின் படி தவறு. ஆனால் இப்பொழுது  பெரும்பான்மை
ஊடகங்களுக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாது.  அவர்களுக்கு தேவை டி.ஆர்.பி. அதற்கு தேவை என்றால் கொலையும் செய்வார்கள், கலவரத்தையும் உருவாக்குவார்கள்.

திமுக தலைவர்.கருணாநிதி இராமர் என்ன இன்ஜினியரா ? என்ற கேட்ட போதும் சரி, திருமாவளவன் விகாரைகள் எழுப்பலாமா ? என இன்று கேட்கும் பொழுதும் தலைகளே விலையாக கேட்கப்படுகின்றன‌. நாம் எப்போதெல்லாம் தர்க்கத்தை வைக்கின்றோமோ, அப்பொதெல்லாம் காவிகள் தலைக்கு விலை வைக்கின்றார்கள்.  நம்முடைய தர்க்கங்கள் சரியாக இருந்து அவர்களிடம் கருத்தில்லாமல் போவதால் கழுத்திற்கு குறி வைக்கின்றார்கள்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை  ஊடகங்களை அக்கட்சி விலைக்கு வாங்கியோ அல்லது மிரட்டியோ  காவி வெறியை பரப்பி எப்படியேனும் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என பெரு முயற்சி  செய்து வருகின்றது.  கொலைகள் செய்தும், மக்களிடையே பிரிவினையைத் தூண்டி, திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கி வளர்ந்த பா.ஜ.க கட்சி அதைத் தான்  தமிழகத்திலும் செய்ய முயற்சிக்கின்றது.

இதன் ஒரு பகுதியாகத் தான் பாலிமர் ஊடகத்தின் இந்த கத்தரித்த செய்தியை நாம் பார்க்க வேண்டியுள்ளது.  அவர்கள் திட்டமிட்டபடியே செய்தியின் மூலம்  கலவரத்தை உருவாக்கத் தொடங்கி விட்டது பா.ஜ.க. பா.ஜக-வினரால் சில இடங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர்.  மக்களிடையே பிரிவினையைத்  தூண்டும் மதவெறிக் கருத்தை தமிழக மக்களிடம் தொடர்ந்து பரப்பி வருவதன்  மூலம் தந்தி,பாலிமர், புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் பா.ஜ.க கலவரம் செய்வதற்கான களத்தை கட்டி எழுப்பி வருகின்றன.  இவர்களுக்கு சற்றும்  சளைக்காமல் மாறனின் சன் தொலைகாட்சியும் செயல்பட்டு வருகின்றது.

சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள், ஆளும் அரசுகளின்  ஊதுகுழலாகவே பெரும்பாலும் செயல்பட்டு வருகின்றன.

இந்துக்களின் காவலன் நான் என தன்னை சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சி தான்  இன்றும் கூட இந்து கோயில்களை இடித்து பௌத்த விகாரைகளை கட்டி வரும் இலங்கை அரசை பெயரளவுக்கு கூட கண்டிக்காமல் அவர்கள் செயல்களுக்கு ஆதரவளித்து சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை அரசை காத்து வருகின்றது. இது தான் பா.ஜ.க-வின் உண்மை முகம். அவர்களின் நோக்கம் மக்களிடையே  பிரிவினையை விதைத்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது, ஆட்சியைக் கைப்பற்றிய பின் முதலாளிகளுக்கு சேவை செய்வது மட்டுமே.

நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள்:

1) https://www.youtube.com/watch?v=CXvyL3FNSo8&feature=youtu.be

2) https://www.polimernews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/?utm_campaign=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5&utm_medium=twitter&utm_source=twitter

Print Friendly, PDF & Email

About நற்றமிழன்

துணி தொழில்நுட்பவியல் பணி புரிகின்றார். தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>