Home / கலை / “செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா
IMG_9131

“செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா

IMG_8946

இயக்குநர்.அஜயன் பாலா, பொருளியல் ஆர்வலர். ஜெயன் நாதன். இதழியல் துறைத்தலைவர். ரேச்சல், கவிஞர்.முருகன் மந்திரம்

நவம்பர் 8, 2016  அன்று மாண்புமிகு பிரதமர். நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார், இதனால் இந்தியாவில் ஊழல் ஒழியும் அதற்காக சில சிரமங்களை தாங்கி கொள்ளுங்கள் என்றார். அந்த நிகழ்வின் ஓராண்டு முடிந்ததை அடுத்து 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதால் உண்டான தாக்கங்களையும் நினைவுகளையும் பதிவு செய்வதற்காக கொள்வதற்காக இளந்தமிழகம் இயக்கம் சார்பாக “செல்லாக்காசு”  குறும்பட போட்டி அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

IMG_9064

இயக்குனர்.திரு.மீரா கதிரவன்

இக்குறும்படபோட்டியில் நாற்பதுக்கு மேற்பட்ட படங்கள் பங்கெடுத்தன.  இயக்குனர்கள் -திரு. ராம், திரு. கமலகண்ணன், திரு. மீரா கதிரவன், திரு.’நிழல்’ திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய நடுவர் குழு இக்குறும்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்தனர். நடுவர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களின் திரையிடலும், சிறந்த படங்களுக்கான விருது வழங்கும் விழாவும் நேற்று பிப்ரவரி 24 (சனிக்கிழமை) – சென்னை கிறித்துவக் கல்லூரியில் (கிழக்கு தாம்பரம்) உள்ள சி.எம்.எஸ் அரங்கில் நடைபெற்றது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியின்,  இதழியல் துறை இந்த விருது வழங்கும் விழாவில் எங்களோடு இணைந்து செயல்பட்டனர்.  இந்த நிகழ்வுக்கான ஊடக பங்குதாரராக “நியூஸ் 18 தமிழ்நாடு” செய்தி தொலைகாட்சி பங்கேற்கின்றார்கள்.

IMG_9065

இயக்குநர். கோபி நயினார்

இந்த விருது வழங்கும் விழாவில் – இயக்குநர். கோபி நயினார், இயக்குநர். மீரா கதிரவன்,  இயக்குநர். அஜயன் பாலா, கவிஞர். முருகன் மந்திரம், பொருளியல் ஆர்வலர். ஜெயன் நாதன், சென்னை கிறித்துவக் கல்லூரி இதழியல் துறைத் தலைவர். ரேச்சல்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு இப்போட்டியில் பங்குபெற்ற அனைத்து படக்குழுவினரையும், வெற்றி பெற்ற படக்குழுவினரையும் வாழ்த்துரையும், விருதும்  வழங்கி கௌரவித்தனர்.

IMG_8954

செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

விருது வழங்கும் நிகழ்வை இளந்தமிழகம் இயக்கத்தின். எட்வர்டு தொகுத்து வழங்கினார். சென்னை கிறித்துவ கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர். கவிதா வாழ்த்துரை வழங்கினார். இளந்தமிழகம் இயக்கத்தின் செய்யது இயக்கம் பற்றி அறிமுக உரையையும், தனஞ்செயன் குறும்பட போட்டி குறித்தும்,  ஒருங்கிணைப்பாளர். ராசன் காந்தி நன்றியுரையும் வழங்கினார்கள்.

IMG_9034

தனஞ்செயன் – பொறுப்பாளர்- இளந்தமிழகம் திரை

2016 நவம்பர் 8ஆம் நாளில், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாக்காசாக்கப் பட்டதினால் ஏழை எளிய மக்கள் அல்லல்பட்டதினை இக்குறும்படங்கள் நம் கண்முன்னே எடுத்துரைக்கின்றது. ஊழல், கருப்புப் பணம் ஒழிய வேண்டும் என்பதில் நம் அனைவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், செல்லாக்காசு (டிமானிடைசேசன்) நடவடிக்கை வேலை வாய்ப்புகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள், சிறு குறு வணிகர்களின் வாழ்க்கை, இந்திய பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தான் அதிகமாகப் பாதித்ததே ஒழிய கருப்புப்பண முதலைகளின் வாழ்க்கையினை அல்ல என்பதினை இப்போட்டியில் பங்கெடுத்த குறும்படங்கள் திரைமொழியில் எடுத்துரைத்துள்ளன.

IMG_9084

ராசன் காந்தி – ஒருங்கிணைப்பாளர்-இளந்தமிழகம் இயக்கம்

இளந்தமிழகம் இயக்கம் இக்குறும்படங்களை Youtube-ல் பதிவேற்றி இது குறித்து பரப்புரை செய்யும். கலைஞர்கள் சமூகத்தின் அங்கமே, சமூக முன்னேற்றத்திற்கான கண்ணோட்டத்துடன் கலைப்படைப்புகள் படைத்திட இளந்தமிழகம் இயக்கம் உறுதுணையாக இருக்கும். சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் இதழியல் மாணவர்களும் எதிர்வரும் காலங்களில் சமூக மாற்றத்திற்கான கருத்துகளையும் படைப்புகளையும் மக்களிடையே  கலைஞர்களின் படைப்புகளையும் கவ்விச்செல்லும் ஊடகக் கருவியாக செயல்படுவார்கள் என நம்புகின்றோம்.

விருது பெற்ற படங்கள்

IMG_9131

நிமோ படக்குழுவினர் உடன் இயக்குநர். மீரா கதிரவன், இயக்குநர். கோபி நயினார்.

சிறந்த படம் – முதல் பரிசு  “நிமோ”(Nemo) – பரிசு தொகை – ரூ 50000

IMG_9128

ஐ.என்.ஆர் படக்குழுவுட‌ன் இயக்குநர். மீரா கதிரவன், இயக்குநர். கோபி நயினார், வசுமதி – தலைவர், ஃபைட் தொழிற்சங்கம்

சிற‌ந்த படம்- இரண்டாம் பரிசு “”ஐ.என்.ஆர்”(INR) – பரிசு தொகை – ரூ 25000

IMG_9125

கண்ணீரில் மீன்கள் படக்குழுவுடன் இயக்குநர். மீரா கதிரவன், தனஞ்செயன், அருணகிரி- இளந்தமிழகம் இயக்கம்

சிறந்த  மூன்றாம் பரிசு “கண்ணீரில் மீன்கள்” – பரிசு தொகை – ரூ 10000.

IMG_9110

இயக்குநர்கள் – பிரஹர்சேத்தா – முரளி ஆகாஷ் , வினோத் களிகை – செயற்குழு உறுப்பினர், இளந்தமிழகம் இயக்கம், இயக்குநர்கள் – கோபி நயினார், மீரா கதிரவன்

சிறந்த இயக்குநர் –   பிரஹர்ஷேத்தா – முரளி ஆகாஷ்   – படம் –  ஐ.என்.ஆர் (INR)

சிறந்த நடிகை – “பிராட்வே ஆனந்தியின் செல்லாக்காசு” பட நடிகை ஆனந்தி.

IMG_9098

ஜெயப்பிரகாஷ் – இளந்தமிழகம் இயக்கம், இயக்குநர்.மணி – பிராட்வே படம், இயக்குநர். கோபி நயினார்

சிறந்த நடிகர் – “கண்ணாடி ரசம்” பட நடிகர். பூமிராஜன்.

IMG_9099

சரவணகுமார் – இளந்தமிழகம் இயக்கம், சிறுவன் – சனோஜி, பொருளியல் ஆர்வலர். ஜெயன் நாதன்

சிறந்த குழந்தை நட்சத்திரம் – “நிமோ” படத்தில் நடித்த செல்வன்.சனோஜி

சிறந்த ஒளிப்பதிவாள‌ர் – ஹரி ஹரிஷ்  – படம்-  எடை

சிறந்த கதை –   காதீர் மீரன் –  கேட் எண்.2

காதீர் மீரான்,  இதழியல்துறைத் தலைவர். ரேச்சல், நற்றமிழன் - விசை ஆசிரியர் குழு, இளந்தமிழகம்

காதீர் மீரான், இதழியல்துறைத் தலைவர். ரேச்சல், நற்றமிழன் – விசை ஆசிரியர் குழு, இளந்தமிழகம்

சிறந்த இசை – கவின் தீரஜ்-.என்.ஆர் (INR)

சிறந்த படத்தொகுப்பு – ப்ரதீப் – படம்-  இன்மை படம்.

தனஞ்செயன்  – 9841532823

இளந்தமிழகம் திரை

செல்லாக்காசு குறும்பட போட்டி

ராசன் காந்தி – 9840880737

ஒருங்கிணைப்பாளர்

இளந்தமிழகம் இயக்கம்

www.facebook.com/ilanthamizhagam/ilanthamizhagam@gmail.com

www.facebook.com/ytmtalkies/ , ytmtalkies@gmail.com

www.ilanthamizhagam.com

Print Friendly, PDF & Email

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>