Home / அரசியல் / மோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்!
modi-amit-shah

மோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்!

மோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர். ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு.

ஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, அமெரிக்க டாலர் இனிமே செல்லாது என்று அறிவிக்க எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் அவர் அதைச் செய்யப் போவதில்லை. இப்போது மோடி அமித்ஷா வகுத்துள்ள திட்டம் அமெரிக்கா, ரசியா, ஜெர்மன், ஜப்பான்  என உலக வல்லரசுகளையே இந்தியாவிடம் விழவைக்கப்போகிறது. காசுமீரை இந்தியாவுடன் இணைக்க ஒரே ஒரு தீர்மானம் போட்ட மாதிரி, அமெரிக்காவை இந்தியாவுடன் இணைக்க ஒரே ஒரு தீர்மானம் போட்டால் போதும் அமெரிக்க இந்தியாவுடன் இணைந்துவிடும். அதை அமித்ஷா ஒரே நாளில் முடித்துவிடுவார்.

இதைத்தடுக்க அமெரிக்காவாலும் முடியாது. தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு BJP க்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. அதை யாராலும் கேள்வி கேட்க முடியாது. ஒருவேளை டிராம்ப் இதை எதிர்த்தால் அவரது கட்சி MP க்களை அமித்ஷாவால் ஒரே நாளில் வருமான வருத்துறையை வைத்து BJP யில் சேர்க்க முடியும்.

அதையும் தாண்டி டிரம்ப் முரண்டுபிடித்தால் அமெரிக்கத் தேர்தலில் BJP போட்டியிடும், வெற்றிபெறும். அங்கேயும் வோட்டிங் மெசின் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்று அமித்சா முடிவெடுத்துள்ளார்

இதே போல ரசியா, பிரிட்டன், ஜெர்மன் என அடுத்தடுத்து இந்தியாவுடன் சேர்க்கப்படும். இது நடந்தப்பிறகு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி மோடியும், நிர்மலா சீத்தாராமனும் கவலைப்படத்தேவையில்லை. அமெரிக்காவும் ரசியாவும் இந்தியப்பொருளாதரத்தை உயர்த்த பாடுபடும்.

இப்போது எப்படி பீகார், உத்திரப் பிரதேசத்திற்காக தமிழ்நாடும், ஆந்திராவும், கேராளாவும் சம்பாதித்துக்கொடுக்கிறதோ. அதுபோல அமெரிக்கர்களும், ரசியர்களும், ஜப்பானியர்களும் இந்தியர்களுக்காக, வேலைப்பார்த்து பொருளாதாரத்தை உயர்த்துவார்கள்.  2025 ஆம் ஆண்டில் மோடி தலைமையில் உலகமே அகண்டப்பாரதமாகவும், இந்தியாவே உகண்டாவாகவும் மாறி இருக்கும்.

குறிப்பு – ஒரு சங்கியின் வாட்சப் குறிப்புகள்.

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*