Home / Author Archives: பாரதிதாசன்

Author Archives: பாரதிதாசன்

முளைக்கட்டும் தலைமுறைகள்!

Shareநன்றாகவே நடந்தேறிவிட்டது நடக்கக் கூடாத ஒன்று மிகவும் நன்றாக. மனிதர்கள் இயல்புக்கு இசைந்து வாழக் கற்றுக்கொண்டார்கள் குருவிகளைத் தொலைத்த நகரத்தில் இருப்பை தொலைத்த பகல் முழுதும் பரஸ்பரங்களற்று பக்குவத்தை பாவிக்கத் தொடங்கிவிட்டனர். இரவுகள் நீள்வதேயில்லை சுழன்றோடுகிறது நிலா. முளைக்க மறுக்கும் பூ. பிடுங்கிப் புதையும் வேர். விஷம் பரவிய காற்றில் விக்கியே செத்தன மரங்கள். வலி ...

Read More »

ரோகித் வெமுலா

Shareநான் அறிந்திருக்கிறேன் கொலையோ தற்கொலையோ தீர்வாகாதென்று தூக்குக் கயிற்றைவிடவும் ஆயிரம் ஆண்டு சனாதன முடிச்சுகளால் முறுக்கேற்றி சாதியமென்னும் ஒற்றை வரியில் பின்னப்பட்ட பூணூல் வலிமையானதென்று எனக்கு நன்றாகவே தெரியும்.   எனது மரணத்தை கோழைத்தனம் என்பீர்கள் மயிலிறகை விடவும் இலகுவானது என்பீர்கள் பாறையை விடவும் இறுக்கமானது என் மரணம் மட்டுமல்ல மௌனமும் கூட நீங்கள் புனிதமென்று வணங்கச் சொன்ன மூவண்ண கொடி ...

Read More »

என்னிலிருந்து நழுவும் கவிதை

Shareகருங்கற்கள் நட்டு  காற்றில் வேலி அமைத்தார்கள் மீறினால்  வெட்டப்படுமென்ற  எச்சரிக்கையோடு நான் யாரென்று வகுப்பெடுத்தார்கள். நிறம்,உயரம்,எடை  நிர்ணயித்தார்கள். உணவுக்கு மட்டும் திறந்தால் போதுமென்று வாயடைப்பு செய்து கட்டுக்குள் தான் அனைத்துமென புன்னகைக்கும்போது என்னிலிருந்து நழுவுகிறது இந்த கவிதை!!!! —–பாரதிதாசன் – இளந்தமிழகம் இயக்கம்

Read More »

நேற்று பார்த்த நதி

Shareநேற்று பார்த்த நதி இன்று இங்கில்லை தூரத்தை முன்னே தள்ளி காலத்தை பின்னே நிறுத்தி ஏற்படும் இடமாற்றத்தில் எதிர்ப்படலாம் அதே நதி இன்னொரு இடத்தில்.   ஆனால் நதியென்பது நீர் மட்டுமன்றி நீர் சார்ந்திருக்கும் நிலமும் நீர் தொடும் கரைகளும் கரை வாழ் மனங்களும் என்பதினால் நேற்று பார்த்த நதியை மீண்டும் காண்பது சாத்தியமே இல்லைதான். ...

Read More »

சாதியே கொல்லும் !

Shareஅது நிகழ்ந்த பிறகு பூமியின் சுழற்சியே நின்று விடுமோ காற்றின் கவலை   பூமியை காவல் காக்கிற வேலையே வேண்டாம் உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு ஓடியே போனது இருட்டு   சாதிய வன்மம் காணச் சகியாது கண்களைக் குருடாக்கி குப்புறப் படுத்தது வெளிச்சம்   மனிதர்களைத் தீண்டுவதே மகாபாவம் சபித்து விட்டு நச்சுப் பைகளைத் துப்பி விட்டு புற்றுக்குள் புகுந்தன பாம்புகள்   அடச்…சீ ...

Read More »

மரணங்கள் தீர்மானிப்பதில்லை – பாரதிதாசன்

Share மரணங்கள் தீர்மானிப்பதில்லை எம் பிரேதங்களின் மீது விழுந்து…புரண்டு அழுது …..அழுது மனதால் மரணித்துப் போன எம் பெண்டிர்தம் மரண ஓலங்களை மேனியெங்கும் பூசிக்கொண்டு ஓடும் காற்றிடம் கேள் ! பதில் சொல்லும் மரணங்கள் தீர்மானிப்பதில்லை “எச்சைக் கஞ்சியாச்சும் ஏந்தி வாங்கி உயிர் படைச்சவளுக்குக் கட்டக் கடைசியிலே பசியோடு பட்டினிப்போட எந்த நாய்க்கு மனசு வரும்” ...

Read More »

அங்கீகரிக்கப்படாத கவிஞர்களுக்காக

Shareசூரியன் உடைத்து போட்ட நெருப்பு பொட்டலம் எப்படி? பூமியாய்…..! கடலும் நதியும் ஏரியும் குள‌மும் காற்றும் நீரும் கண்டுபிடித்தது எவரது வேண்டுகோளுக்கிணங்கி புல்லில் துவங்கிய பூமி நெல்லு வரையிலும் புசிக்க தந்தது எவனது அங்கீகாரத்தையும் எதிர்பாத்தல்ல ! பூணூல் தர்மம் புறக்கணித்த மாகவிஞன்தான் விடுதலை போருக்கு வீரியமானான் விதையும் அவன்தான் ! யுகாக்கனியின் வெம்மை தாளாது ...

Read More »

தர்மமாம்! வெல்லுமாம்!

Shareபொய்களால் நிரம்பியுள்ளது பூமி! உண்மைதான் உண்மை உயிரோடிருப்பதே. நீதியின் நிர்வாணத்தில்தான் அநீதி ஆடையுடுத்திக்கொள்ளும்போலும். நல்லவர்களும் நேர்மையானவர்களும் தலைநிமிர்ந்து தெருவில் நடக்கவே வெட்கப்படுகிறார்கள். “தர்மத்தின்…….. தர்மம் நின்று”… தர்மம் ஓடினாலும் சூதுதான் வெல்லும் மர்மமாய் ஆசிர்வதிக்கும் சாத்தான்கள். குற்றம் பார்க்கின் சுற்றமே இல்லை அம்மா ! திருடர்களுக்கும் வழிப்பறிக்காரர்களுக்கும் மட்டுந்தான் நிழல் தர வேண்டுமாம் சாலையோர மரங்களுக்கு ...

Read More »

வரலாறு ஒரு போதும் புதைந்ததில்லை

Shareமதங்கள்மகுடங்கள்பிணமலைகள்அஞ்சும்உயர்ந்தகூரிய கலுமரங்கள்.காற்றின்தேகமெங்கும்மரண ஓலங்கள்.உயிர் வதை மட்டுமேஉயர்வாய் நினைக்கும்சிம்மாசன சித்தாந்தங்கள்!கொடையும் கொற்றமும்மனித அமைதியின் மீதுநடத்தும்மரணப்படுகொலைகள்.புச்சன் வால்ட்இன அழிப்பை மிஞ்சும்அஃறினைகளும்.அநாகரீகம்காரி உமிழும்முள்ளிவாய்க்கால் .அசோகா சக்கரத்தின்ஆரக்கால் முழுதும் – நாறும்பிண நாற்றம் .வாய்மை கூட வெல்லுமாம்மகாத்மாவின்மௌனப் புன்னகை.சுவாதிக் நாஜிகளின்மரண மிதிகளில் தப்பியயூத பிணங்களின்நரவேட்டைகுழந்தைகளையும் பெண்களையும்“விடாதே கொல்”காசா தெருவெங்கும்மாவீரன் அராபத்தின்விடுதலை சுவடுகள்?… குருதி படிந்த மண்குற்றுயிரில் தெரிந்தசதைத் துண்டுகொத்தி குதறியகழுகுகள் கூடஎச்சமிட்டுசபித்துப் ...

Read More »

யாராவது கொல்லுங்களேன்….

Share    அம்மா…. கால் ரெண்டும் காணலமா ரொம்ப வலிக்கிதுமா முடியலமா அம்மா…. அண்ணாவ மாதிரியே என்னையும் கொல்லச் சொல்லுமா அம்மா…. ரொம்ப வலிக்கிதுமா பிணமான தாய் என்ன செய்வாள் பாவம்!!! யாராவது கொல்லுங்களேன் கதறும் அவன் அப்பாவையும் சேர்த்து காசா!!!! – பாரதிதாசன்

Read More »