Home / Author Archives: சிறப்பு கட்டுரையாளர்கள் (page 3)

Author Archives: சிறப்பு கட்டுரையாளர்கள்

நீட் – NEA(E)T

Share   நீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்! உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நீட்டாகச் செல்லுங்கள்!!   உள்ளாடையை மட்டுமல்ல உள்ள ஆடைகள் அத்துணையும் கழட்டச் சொன்னாலும் பரவாயில்லை! நமக்கு, மானத்தைவிட மதிப்பெண்கள் முக்கியம்!   ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க நமக்கு எள்ளளவும் தைரியம் இல்லை படித்துவைத்த பதில்கள் மறப்பதற்குள் தேர்வெழுத வேண்டும்   ...

Read More »

ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் – நீதிபதி. அரி பரந்தாமன் (ஓய்வு)

Share1970க்கு முந்தய நிலை : 1970க்கு முன்னர், அத்திபூத்தாற்  போல  சில நிறுவனங்கள் சில பணிகளில் மட்டும்  ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தின. இதை அந்நிறுவன நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராடி தடுத்து நிறுத்தின. சில இடங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக்கோரி, நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற் சங்கங்கள்  மூலமாக நீதிமன்றத்தை ...

Read More »

வெட்கக்கேடு!

Shareவிவசாயிகள் நிர்வாணம்! பாரத மாதா வெட்கமே இல்லாமல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறாள்!! – – தஞ்சாவூரான். துபை ஓவியம் – நன்றி – கோ.ராமமூர்த்தி, ஆனந்த விகடன்

Read More »

துரோகத்தின் சம்பளம் – சிறுகதை – சம்சுதின் ஹீரா

Share“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..? எந்திரிச்சு போய் படும்மா..” மகள் பர்வீனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமலேயே குத்துக்கல் போல அமர்ந்திருந்தாள் சாஜிதா. இரண்டு மணிநேரமாய் அதே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறாள். வழக்கத்துக்கு மாறாக சாஜிதாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. கன்ன‌ங்கள் கந்திப்போய் கருத்திருந்தது. உண்மையில் பேய் தான் அறைந்துவிட்டது. சாஜிதாவின் ...

Read More »

ஆசாதி – இந்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை

Shareகாசுமீரி இசுலாமிய மக்கள் கடந்த 27 ஆண்டுகளாக இராணுவ ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டு, இந்திய இராணுவத்தின் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். காசுமீர் பள்ளத்தாக்கில் இப்பொழுது வீசி வரும் கடும் குளிர் ஊன்களை ஊடுருவக் கூடியது, ஆனால் அதனால் கூட‌ பொது மக்களின் உத்வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் தோற்றுப்போகின்றது.  கடும் குளிர்காலத்தில் கூட, அந்த பகுதியில்  ...

Read More »

மோடியின் ஆசியோடு மாணவர்களைத் தாக்கும் பாஜக மாணவர் அணி !!

Shareசனநாயகத்தின் முகமாக இருக்க வேண்டிய பல்கலைகழங்களில் இன்று திட்டமிட்ட மோதல்களை ஆளும் பாரதிய சனதா அரசு தனது மாணவரணியான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) மூலம் நடத்திவருகின்றது. தங்களுக்குள் தோன்றும் பல்வேறுவிதமான கருத்துகளை பேசி, கலந்துரையாட வேண்டிய இடமான பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களின் குரல்வளை “தேசத்திற்கு எதிரானது” என்ற முழக்கத்தின் கீழ் நெரிக்கப்படுகின்றது. டெல்லி ஜவகர்லால் ...

Read More »

நடுக்குப்பமாக மாற்றப்படுமா நெடுவாசல்?

Shareஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றதைப் போல நெடுவாசல் போராட்டத்தில் வெல்ல முடியுமா? கூட்டம் கூடுவதை வைத்து; ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து மட்டும் இதை எடைபோடக்கூடாது. ஜல்லிக்கட்டு என்பது அதிக ஆபத்து இல்லாத ஒரு பண்பாட்டு கோரிக்கை. எனவே ஒரு வாரத்தில் புதிய சட்டம் இயற்ற வைப்பது அதில் சாத்தியமானது. ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் எதிர்ப்பக்கம் நிற்பது ...

Read More »

பாகிசுதானில் பேசப்படும் திராவிட மொழி எது தெரியுமா?

Shareஅழிந்து  வரும் மொழிகளைக் காக்கவும், மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்கவும்,  யுனெசுகோ பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி நாள் என அறிவித்துள்ளது. இந்திய அரசும் “மாத்ரபாஷா- நம் தாய்மொழி” என இந்த சர்வதேச தாய்மொழி நாளை கொண்டாடி வருகின்றது.  இந்தியாவில் பல்வேறு ஆட்சி மொழிகள் இருந்தாலும், இந்தி மற்றும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால், பல்வேறு ...

Read More »

ஹாசினி, ரித்திகா என்ன செய்ய வேண்டும் நாம்?

Shareசிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்பது இந்தியா போன்ற நாடுகளின் அன்றாட பிரச்சினை. ஆனால் புரிதலின்மை காரணமாக அவை அன்றாட பிரச்சினை பட்டியலில் வருவதில்லை. ஒரு கொலை நடந்தாலன்றி வெகுமக்கள் கவனம் அதன் மீது திரும்புவதில்லை. அதிலும் கொல்லப்பட்டது ஒரு நகரத்து குழந்தையாகவும், குறைந்தபட்சம் மத்தியதர வர்க குழந்தையாகவும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறக்காத குழந்தையாகவும் இருப்பது ...

Read More »

சனாதன (அ)தர்மம்

Shareநந்தனை எரித்ததும், நந்தினியை புதைத்ததும், தர்மம்! இந்து… சனாதன தர்மம்!! –    தஞ்சாவூரான் – துபை

Read More »