Home / Author Archives: கதிரவன் (page 5)

Author Archives: கதிரவன்

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 5

Share2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள், நாட்டின் 29 மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறப் போகும் தேர்தல் அட்டவணையோடு அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்புக்காக காத்திருந்த அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டு, கூடிய விரைவில் கூட்டணி முடிவுகளும், வேட்பாளர் பட்டியல்களும் வெளிவரும்.தமிழகத்தில் காங்கிரசு இன்னும் தி.மு.க-வை வெவ்வேறு வழிகளில் கெஞ்சிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இருக்கிறது. காங்கிரசுடன் ...

Read More »

சிங்கள ராஜபக்சேவும்! இந்துத்துவ மோடியும்! (மோடி – வெளிச்சங்களின் நிழலில் ! – 4)

Shareகடந்த இரண்டு ஆண்டுகளாக மார்ச் மாதம் என்றாலே,இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத்தப்பட்ட போர்க்குற்ற, இனப்படுகொலை பன்னாட்டு விசாரணை வேண்டி ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதுதான் நம் நினைவுக்கு வரும். இந்த ஆண்டும் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா கூட்டத் தொடரில் எப்படிப்பட்ட தீர்மானத்திற்கு வலியுறுத்த வேண்டும் ...

Read More »

நவீன அனாதையா நாங்கள்?

Share மார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள டாட்டா கண்சுல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உமா மகேஸ்வரி(23) என்கிற பெண் ஊழியரின் சடலம் அருகில் உள்ள புதரில் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆத்தூரைச் ...

Read More »

நாளை நாமாகக் கூட இருக்கலாம் ?!

Share வார விடுமுறை நாட்கள் முடிந்து திங்கள் காலை பணிக்குச் சென்ற நம்மிடம், “இனிமேல் உங்களுக்கு இங்கு வேலை இல்லை; ஒன்றரை மாத முழு ஊதியத்தைத் தருகிறோம்; உங்கள் பொருட்களோடு வெளியேறுங்கள்” என்று நம் அலுவலக மேலாளர் சொன்னால் நமக்கு எப்படிப்பட்ட அச்சமும், விரக்தியும் வருமோ, அதே மனவோட்டத்துடன் தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில் ! – 3

Shareநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான காய்நகர்த்தல்கள் பேச்சுவார்த்தை என்ற கட்டத்தைத் தாண்டி உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மோடி அலை என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்து, மோடியை பிரதமராக்குவதே இலக்கு என்று பா.ஜ.க. ஒருபக்கம் கூட்டணியை அமைக்க திட்டமிட்டு செயல்படுகிறது. மறுபுறம், காங்கிரசு மற்றும் பா.ஜ.க என்கிற இரண்டு கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணியை அமைப்பதில் இடதுசாரிகள் மும்மரமாக உள்ளனர். காங்கிரசு ...

Read More »

கோலி சோடா – எளியவர்களுக்கான பானம்!

Shareஉலகமய சூழலில் பெப்சியும், கோக்கும் மட்டுமே குடித்து பழகிய ஒரு தலைமுறையான நாம் முற்றிலும் மறந்துவிட்ட எளியவர்களின் பானம், ” கோலி சோடா “. 1990-க்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றத்தில் நம் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட எளியத் தொழில்களில் ஒன்று சோடா சுற்றுவது. இப்படி நாம் எல்லோரும் மறந்துவிட்ட ஒன்றுதான் இந்த திரைப்படத்தின் தலைப்பு ” ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 2

Shareஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டணி பேரங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய தேசிய அளவில் முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளன. காங்கிரசு கட்சி ராகுல் காந்தியை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க-விற்கோ எதிர்த்து விமர்சனம் செய்ய ராகுல் மட்டுமின்றி, ...

Read More »

கண்ணாடிக் கட்டிடங்களுக்குள்!

Shareகடந்த சில தினங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது நம்மில் எத்தனை பேருக்கு எட்டியிருக்கும் என்ற அறியாமையும், இந்த செய்திகள் பற்றி நாம் கவலைப்பட என்ன இருக்கிறது என்பதை சொல்லவுமே இதனை எழுதுகிறேன். சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக (PROJECT MANAGER) பணியாற்றிய ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 1

Share2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும் நிலையில் இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க-வும் அதையொட்டிய தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டன.காங்கிரசு ஆளும் கட்சி என்பதால் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் , பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வோ “குஜராத் பாணியிலான வளர்ச்சி” என்ற பிரச்சாரத்தை முன்வைத்து நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ...

Read More »

மக்களின் போராட்டக்களங்கள் நான்கு! இலக்கு ஒன்றே!!

Shareதமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் மக்கள் உரிமைகளுக்கான பல்வேறு போராட்டங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தீவிரமாக நடந்து வந்திருக்கின்றன.பொருளாதார அடிப்படையிலான ஏகாதிபத்தியம் கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டங்களான சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்புப் போராட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பதை எதிர்க்கும் போராட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ...

Read More »