Home / அரசியல் / இந்தியா (page 4)

இந்தியா

இந்தி தேசியம் ஆள்கிறது… நாம்? தமிழ் இந்து கட்டுரை சொல்லாமல் மறைத்தவை

Shareஇந்தி தேசியம் ஆள்கிறது.. நாம்? என்ற தலைப்பில் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் கடந்த புதனன்று(மார்ச் 15) தமிழ் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையை மேலோட்டமாகப் படித்தால் அவர் சொல்வதெல்லாம் சரி தானே எனத் தோன்றும் ஒரு தோற்ற மாயையை (Visual Illusion) உருவாக்கும் கட்டுரை இது. பெரும்பாலும் அவரது கட்டுரைகள் இது போலத் ...

Read More »

ஆசாதி – இந்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை

Shareகாசுமீரி இசுலாமிய மக்கள் கடந்த 27 ஆண்டுகளாக இராணுவ ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டு, இந்திய இராணுவத்தின் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். காசுமீர் பள்ளத்தாக்கில் இப்பொழுது வீசி வரும் கடும் குளிர் ஊன்களை ஊடுருவக் கூடியது, ஆனால் அதனால் கூட‌ பொது மக்களின் உத்வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் தோற்றுப்போகின்றது.  கடும் குளிர்காலத்தில் கூட, அந்த பகுதியில்  ...

Read More »

தமிழக மீனவர் பிரிட்ஜோவை கொன்றது இலங்கை அரசா? இந்திய அரசா ?

Shareவங்க தேச மீனவர்கள் மியான்மர் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஜப்பானிய மீனவர்கள் ஆசிய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இவ்வளவு ஏன்? இலங்கை மீனவர்களே இந்தியாவின் கேரளப் பகுதியிலும் லட்சத் தீவுப் பகுதிகளிலும் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். மாலத்தீவுக் கடற்பரப்புகளிலும் மீன் பிடிக்கத் தான் செய்கிறார்கள். அப்படி எல்லை தாண்டிச் செல்லும் வேற்று நாட்டு ...

Read More »

மோடியின் ஆசியோடு மாணவர்களைத் தாக்கும் பாஜக மாணவர் அணி !!

Shareசனநாயகத்தின் முகமாக இருக்க வேண்டிய பல்கலைகழங்களில் இன்று திட்டமிட்ட மோதல்களை ஆளும் பாரதிய சனதா அரசு தனது மாணவரணியான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) மூலம் நடத்திவருகின்றது. தங்களுக்குள் தோன்றும் பல்வேறுவிதமான கருத்துகளை பேசி, கலந்துரையாட வேண்டிய இடமான பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களின் குரல்வளை “தேசத்திற்கு எதிரானது” என்ற முழக்கத்தின் கீழ் நெரிக்கப்படுகின்றது. டெல்லி ஜவகர்லால் ...

Read More »

மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு – டீலா? நோ டீலா?

Shareதமிழக  முதல்வராக பதவியேற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி இன்று தில்லியில் பிரதமர்.மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் மோடியிடம் மருத்துவ படிப்பிறகான‌”நீட்” நுழைவு தேர்வு இரத்து தொடர்பான சட்டம், நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டம், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம், கேரள அரசு பவானி ஆற்றில் கட்டிவரும் தடுப்பணைகள், வறட்சி நிவாரண நிதி ...

Read More »

மோடி இந்தியரா?

Shareபஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த பிரச்சாரத்தில் பாரதிய ச‌னதா கட்சியின் சார்பாக பிரதமர் மோடியே களத்தில் இறங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றார். பஞ்சாப் மாநிலத்தில் அவர் பேசும் பொழுது “அன்னியரை ஆள விடாதீர்கள்” என பேசினார். “அன்னியர்” என அவர் சொன்னது ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை. ...

Read More »

ஜெ, சசிகலா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்?

Share                              அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களால் பிப்ரவரி 5ஆம் தேதி சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 6ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள செய்திகளே. இந்நிலையில் வரவிருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி  ...

Read More »

டிஜிட்டல் பிரதமர் 

Shareநான் வாழும் காலம் குறித்து நான் எப்போதும்  பெருமைப்பட்டதுண்டு, தொழில்நுட்பம் வளராத, குறைவயது சாவுகள் நிரம்பிய கடினமான கடந்தகாலத்திலும் இல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி வீங்கி இயற்கை முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவுகளை சமாளிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கப்போகும் எதிர்காலத்திலும் இல்லாமல், சமகாலத்தில்வாழ்வது குறித்த பெருமிதம் அது , இக்காலம் இயற்கையை முற்றிலுமாக அழித்தொழித்து விட்டிருக்கவில்லை, ...

Read More »

மோடியின் கருத்து திணிப்பு

Shareகடந்த 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கருத்துகணிப்பை அலைபேசி செயலி மூலம் தாமாக முன்வந்து நடத்தினார், நாணய மதிப்பிழப்பு குறித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும் , கண்டன குரல்களும், எதிர்கட்சிகளின் நெருக்கடிகளும் முற்றி வரும் நிலையில், நாடாளுமன்றமும் போகாமல், எதற்கும் முறையான விளக்கமும் அளிக்காமல் இதுநாள் வரையில் நழுவிக்கொண்டிருக்கும்  மோடி ...

Read More »

தற்காலிக அசெளகரியங்கள்

Shareஒரு வழி ஒரு திறப்பு ஒரு மாற்று ஒரு ரொட்டித் துண்டு இவைகளுள் ஏதேனும் ஒன்று சாத்தியமாகக் கூடிய‌ பெருநகரமொன்றில் வீங்கிய கால்களோடு நீண்ட வரிசைகளில்  காத்திருந்த‌ இளைஞன் ஒருவன் சொன்னான். “எல்லாம் நாட்டின் நன்மைக்காகத் தான்”.   சில ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்ட பெண்ணின் பதட்டம் போர்க்காலத்தின் கடைசி உணவுப் பொட்டலமொன்றை கொள்முதல் ...

Read More »