Home / ஈழம் (page 2)

ஈழம்

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

Shareதமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மே மாதத்திற்க்கு பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக் கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு ...

Read More »

வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா? – நிலாந்தன்

Shareஇந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள், இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச்சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களை பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப்(அரசியலமைப்பு) பணிகளைப் பற்றியும் ...

Read More »

சுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்

Shareஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் “ஜனநாயகம் என்றால் என்ன?” என்று. அதற்கு ஒரு சிங்கள மாணவி சொன்னாராம் “ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடாத்துவதற்கு உள்ள சுதந்திரம்தான்” என்று. “முன்னைய ஆட்சிக்காலத்தில் ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த முடிந்ததில்லை. அப்படி நடாத்தியவர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களும் ...

Read More »

எங்கே எங்கள் கவிதைகள்?

Shareஎங்கே எங்கள் கவிதைகள்? கிழித்து விட்டீர்களா… எங்கே எங்கள் சிரிப்புகள்? பற்கள் கழட்டி வீட்டீர்களா.. எங்கே எங்கள் பூக்கள்? வாடச் செய்தீர்களா.. எங்கே.. எங்கே.. எங்கே… தோளாடு தோளாய் கதையாடிய நண்பன் அவனெங்கே? விழியோடு மெய் உணர்த்திய கணவன் அவனெங்கே? கூலிக்கு ‘போய்ட்டு வருகிறேன்’ என்று ‘வருகிறேன்’ என்பதை மறந்த என் அப்பாவெங்கே? கற்பனையில் கரைசேர்ந்து ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: நிகழும் அரசியல் மாற்றங்கள் நீதிக்கான திறவுகோல்

Shareமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு போரின் ஏழாம் ஆண்டு நினைவில்… போரினாலும் போருக்குப் பின்னாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக இன அழிப்புக்கு ஆளாகி வரும் தமிழர்கள் தரப்பிலும் இன அழிப்பை முன்னெடுத்து வரும் சிங்கள ஆளும்வர்க்கத் தரப்பிலும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்  போர் முடிந்து 6 ஆண்டுகளாக மனித உரிமை ...

Read More »

தமிழர் சங்கமம் ! – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன்

Shareஅமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘மோன்றோ’ நகரில், 38 வது ஆண்டு இலங்கைத் தமிழ்ச்சங்க விழா, நவம்பர் 7, 2015 ஆம் நாள் நடைபெற்றது. தமிழர் சங்கமம் என்று வழங்கப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறுவது வழக்கம். ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு உணர்வாளர்களும் சங்கமிக்கும் இவ்விழாவானது, மொழி கலை இலக்கியம் அரசியல் பண்பாடு என்று ...

Read More »

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை ! – நிலாந்தன்

Share2009 மே18 இற்குப்பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக  தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. அவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும் ...

Read More »

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே, அவருடைய செய்தியா? – நிலாந்தன்

Share தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின்  எல்லையோரக்  கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, ...

Read More »

காத்திருப்பு அரசியலின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்

Shareஅரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும்  நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை  தண்டிக்க முற்படும்  வெளிச்சக்திகளை  வெற்றிகரமாக  தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது.  அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ...

Read More »

உண்மையை அச்சமின்றிச் சொல்லும்  ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? – நிலாந்தன்

Shareபோர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய  பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் ...

Read More »